-->

Type something and hit enter

author photo
By On

Table Of Contents

அடிப்படை உளவியல் (Pure Psychology)

உளவியல் அடிப்படை உளவியல் (Pure Psychology), பயன்பாட்டு உளவியல் (Applied Psychology) என்று இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

பொது உளவியல் (General Psychology)

அனைத்து உளவியல் பிரிவுகளுக்கும் இதுவே அடிப்படைபுலனுணர்ச்சி,புலன் காட்சி, கற்றல், நுண்ணறிவு, ஆளுமை, சிந்தனை, மனவெழுச்சி போன்றவை பொது உளவியலின் கருப்பொருள்களாகும்.
முதிர்ச்சியடைந்த சாதாரண மனிதர்களின் நடத்தையை பொது உளவியல் விவரிக்கின்றது.

நெறிபிறழ் அல்லது பிறழ் நிலை உளவியல் (Abnormal Psychology)

சமூகத்திற்கு எதிரான அசாதாரண நடத்தைகளை விவரிக்கும் பாடப்பிரிவு மன மருத்துவ இயலுடன் இணைந்தது (Psychiatry)பிராய்டின் உளப்பகுப்பாய்வு இதன் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியது.

சமூக உளவியல் (Social Psychology)

சமூக உளவியலின் அடிப்படைக் கருத்துக்களைத் தந்து இப்பிரிவின் வளர்ச்சிக்கு வித்திட்டவராகக் கருதப்படுபவர் வில்லியம் மக்டூகல் (William Mcdougall) தனி மனிதர்களின் நடத்தையில் சமூக குழுக்களின் செல்வாக்கு பற்றி ஆராய்ச்சி சமூக உளவியலறிஞர்கள் லிபான் லெவின், ஆல் போர்ட், கிளைன் பர்க் ஆகியோர்.

பரிசோதனை உளவியல் (Experimental Psychology)

1879 இல் ஜெர்மனியின் லீப்சிக் பல்கலைக் கழகத்தில் முதல் உளவியல் ஆய்வுக் கூடத்தினை நிறுவி பரிசோதனை உளவியலுக்கு வித்திட்டவர் வில்ஹெம் உண்ட்.

 உடற்கூறு உளவியல் (Physiological Psychology) 

மூளை, நரம்பு மண்டலம், சுரப்பிகள் போன்றவற்றின் செயல்பாடுகளையும்,அச்செயல்பாடுகளுக்கும் நடத்தைகளுக்கும் உள்ள ஒற்றுமைகளும் இப்பிரிவில் அடங்கும்.

பாரா உளவியல் (Para Psychology)

புலன் காட்சியின் கூடுதல் புலனுணர்ச்சிகள், முன்னறிவு, மறுபிறப்பு தொடர்பானவை, புலன்கள் தொடர்பின்றி தன் உள்ளத்தில் உள்ள எண்ணங்களைச் செயல்படுத்தும் முறையான டெலிபதி (Telepathy) ஆகியவற்றுடன் தொடர்புடைய நிகழ்வுகள் பற்றி விவரிக்கும் உளவியல் பிரிவு.

புவி உளவியல் (Geo psychology)

காலநிலை, நிலப்பரப்பு, மண் மற்றும் மனித நடத்தைகளுக்கு இடையேயுள்ள உறவுகளைப்பற்றி விவரிக்கும் உளவியல் பிரிவு.

வளர்ச்சி உளவியல் (Developmental Psychology)

ஒருவரின் வாழ்க்கையில் கருவாக உருவானது முதல் இறக்கும் வரை தோன்றும் வளர்ச்சி சார்ந்த மாற்றங்களை விவரிக்கும் உளவியல் பிரிவு. இப்பிரிவில் 3 துணைப் பிரிவுகள் உள்ளன.
1. குழந்தை உளவியல் 2. குமரப்பருவ உளவியல்3. வயது வந்தோர் உளவியல்

குழந்தை உளவியல் (Child Psychology)

குழந்தைகளின் வளர்ச்சி, முன்னேற்றம், அக, புறப்பண்புகள் இவற்றைத் தீர்மானிக்கும் காரணிகளான மரபு மற்றும் சூழல் ஆகியவற்றை விவரிக்கும் உளவியல் பிரிவு.

குமரப் பருவ உளவியல் (Adolescent Psychology)

குமரப் பருவத்தினரின் உடல், மன வளர்ச்சி. முன்னேற்றம், சந்திக்கும் பிரச்சினைகள் இவற்றைத் தோற்றுவிக்கும் காரணிகள் மற்றும் குமரப் பருவத்தினரை வழி நடத்துவதில் பெற்றோர். ஆசிரியரின் பங்கு ஆகியவற்றை விளக்கும் உளவியல் பிரிவு. 

வயது வந்தோர் உளவியல் (Adult Psychology)

முதியோர்களின் வளர்ச்சி செயல்கள், இயல்புகள், குடும்பத்திலும், சமுதாயத்திலும் இவர்களின் பங்களிப்புகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் அவற்றைத் தீர்க்கும் வழி முறைகள் ஆகியவற்றினை விளக்கும் உளவியல் பிரிவு.

மானிட உளவியல் (Human Psychology) 

மனித நடத்தைகளை, விவரிக்கும் உளவியல் பிரிவு

விலங்கு உளவியல் (Animal Psychology) 

விலங்குகளின் நடத்தையை விவரிக்கும் உளவியல் பிரிவு.

தனிமனித உளவியல் (Individual Psychology) 

தனியொரு மனிதரின் வளர்ச்சி நிலைகள், பண்புகள், இவற்றைத் திர்மானிக்கும் காரணிகள், பண்புகளை அளவீடு செய்யும் முறைகள் ஆகியவற்றை விவரிக்கும் உளவியல் பிரிவு.

பயன்பாட்டு உளவியல் (Applied Psychology)

உளவியலின் கொள்கைகள், கோட்பாடுகள், யுக்திகளின் பயன்பாட்டை விவரிக்கும் உளவியல் பிரிவுமரபியல் உளவியல் (Genetic Psychology)மனிதர்களிடையே காணப்படுகின்ற நடத்தையை மரபியல் ரீதியான காரணிகளால் விவரிக்கும் உளவியல் பிரிவு.

அறிவுரை பகர்தல் உளவியல் (Counselling Psychology)

கல்வி, தொழில், தனிப்பட்ட பிரச்சினைகள், அப்பிரச்சினைகளுக்கு முறைகளைப் பற்றி விவரிக்கும் உளவியல் பிரிவு.

குற்றவாளிகள், சாட்சிகள், போன்றோரின் நடத்தையை அவர்களின் சூழ்நிலையை மையப்படுத்தி உளவியல் கோட்பாடுகளின் மூலம் கண்டறிய பயன்படுகிறது.

இராணுவ உளவியல் (Military Psychology)

இராணுவ வீரர்களின் நன்னெறிகள், குடியுரிமை போன்றவற்றைக் போர்களின் போது எதிரிகளை வீழ்த்தும் யுக்திகளும், நுண்ணறிவினையும் விவரிக்கும் உளவியல் பிரிவு.

மருத்துவ உளவியல் (Clinical Psychology) 

மன நலக் குறைபாடுகள். காரணங்கள், சிகிச்சைமுறைகள் மனநல சிகிச்சை மையத்தில் கையாளப்படும் முறைகள் குறித்து விவரிக்கும் உளவியல் பிரிவு. 

கல்வி உளவியல் (Educational Psychology)

கற்பவர்,கற்றல் அனுபவங்கள், கற்கும் முறைகள், கற்றல் உபகரணங்கள், கற்றல் சூழ்நிலைகள், ஆசிரியர் ஆகியன பற்றி இதில் விவரிக்கப்படுகின்றது. கற்றல் கற்பித்தலில் பின் பற்ற வேண்டிய வழிமுறைகளையும் செயல்பாடுகளையும் விவரிக்கும் உளவியல் பிரிவு.

உளவியலின் மேலும் பல பிரிவுகள்:

  1. பொது உளவியல் 
  2. குழந்தை உளவியல்
  3. மானிட உளவியல் 
  4. விலங்கு உளவியல்
  5. நெற்பிறழ் உளவியல்
  6. தொழில் உளவியல்
  7. சட்டரீதியான உளவியல்
  8. இராணுவ உளவியல்
  9. அரசியல் உளவியல்
  10. மருத்துவ உளவியல்
  11. கல்வி உளவியல்

Click to comment