-->

Type something and hit enter

author photo
By On

Table Of Contents

அகநோக்கு முறை (Introspection Method)

மற்றொருபெயர்-தற்சோதனை முறைஇம்முறையை அறிமுகம் செய்தவர் வில்ஹெலம் உண்ட் பிரபலப்படுத்தியவர்E.B.டிட்சனர்
Intro / Spicre (Intro-உள்ளே.Spiere-ஆராய்தல் அல்லது பார்த்தல்) என்னும் இலத்தீன் மொழிச் சொல்லால் உருவானதாகும்.
அக நோக்கு முறை தத்துவத்திலிருந்து பெறப்பட்டதாகும் இது உளவியலின் மிகப் பழமையான முறையாகும்.
மனத்துள் எழும் அனுபவங்களை அவை நிகழும் போதே அம்மனத்தின்துணைகொண்டு ஆராய்தல் இம்முறையாகும். 
தன் அனுபவங்களைத் தானே உற்று நோக்குதல், பகுத்தறிதல், விவரித்தல்
ஆகியன அகநோக்கு முறையின் அடிப்படை. இம்முறை ஓரளவு உற்றுநோக்கல் முறையைச் சார்ந்தது.

திரைப்படம் பார்ப்பது – புற உற்றுநோக்கு
திரைப்படம் பற்றி கருத்து கூறுவது அகநோக்கு மனம் மட்டுமே இங்கு ஆய்வுக்களமாகும்
அகநோக்குமுறை ஒரு சுய உற்றுநோக்கல் முறையாகும்.
கிரேக்க தத்துவமேதை சாகிரடீஸ் தத்துவமான “உன்னையே நீ அறிவாய்” (Know The Self) எனும் கூற்று அக நோக்கு முறையைக் குறிப்பதாகும்.
இம்முறை குழந்தைகள், மனவளர்ச்சி குன்றியவர்கள் ஆகியோருக்கு ஏற்றதல்ல.
பல உளவியலறிஞர்கள் இம்முறையை சிறந்த அறிவியல் முறை என்று ஏற்கவில்லை.
நமது நனவு நிலைக்கு அப்பாற்பட்டு நனவிலி நோக்கங்கள் (Uncouscious Motives) அனுபவம் (Experience) போன்றவற்றை அக நோக்குமுறையால் அறிய இயலாது.

உற்று நோக்கல் முறை (Observation Method) 

மனதில் நோக்கம் ஒன்றைக் கொண்டு பொருட்கள், நிகழ்வுகள் மற்றும் மனிதர்களைக் கவனமாகவும் ஒழுங்கு முறையாகவும் நோக்குவது உற்றுநோக்கல்.
வகுப்பறையில் மாணவர்களின் நடத்தையைப் புரிந்துகொள்ளும் நம்பகமான முறை உற்றுநோக்கல் என்பது இயற்கையாக நிகழும் உண்மை சம்பவங்களை கவனமாகவும், ஒழுங்கு முறையாகவும் நோக்குவது – ஆதிசேஷய்யா.(Adiseshaih) 1969
விலங்குகளின் நடத்தைகள் மற்றும் தனிநபர்களின் சமூக நடத்தைகள் இம்முறையிலேயே ஆராயப்படுகின்றன.
இதன் வேறுபெயர் புறநோக்குமுன் என்பதாகும். எந்த விதக் கருவியுமின்றி பிறரது நடத்தையைக் கூர்ந்து கவனிக்கும் முறை இம்முறையாகும். 
மாணவர்களின் இயல்பு பற்றி அறியவும், திரள் பதிவு விவரங்களை திரட்டவும் இம்முறை பயன்படும்.

உற்று நோக்கல் இரு வகைப்படும்

  1. இயற்கையான உற்று நோக்கல் (Field Observation) 
  2. கட்டுப்படுத்தப்பட்ட உற்றுநோக்கல் (Controlled Observation)

உற்று நோக்கலின் படிகள்:

  1. புலன்காட்சி (நடத்தையை உணர்தல்) (Observation Of Behaviour)
  2. நடத்தையைக் குறித்துக் கொள்ளுதல் (Recording The Behavior Observed)
  3. சேகரிக்கப்பட்ட நடத்தைக் கூறு விவரங்களைப் பகுத்தாய்தல் (Analysis And Interpretation Of Behaviour)
  4. பொது உண்மைகளைப் பெறுதல் (Generalisation) 

பரிசோதனை முறை (Experimental Method)

“Experimentum” என்னும் (முயற்சி Trial / சோதனை Test) இலத்தீன் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும்.
வேறு பெயர்கள் : அறிவியல் பூர்வமான முறை (Scientific Method). கட்டுப்படுத்தப்பட்ட உற்று நோக்கல் (Controlled Observation)
கோட்பாடு அல்லது கருதுகோளினை சரிபார்க்க உருவாக்கப்பட்ட நிலைமை பரிசோதனையாகும். பரிசோதனையில் எப்போதும் மாறிகள் (Variables) இருக்கும்.

மாறிகள் இருவகைப்படும் 

  1. தனித்த மாறி
  2. சார்பு மாறி 

வேறொரு மாறியின் மீது தாக்கத்தினை உண்டாக்குவது தனித்தமாறி ஒரு மாறியானால் மாறுதலுக்கு உள்ளாகும் மாறி சார்பு மாறி
கவனச்சிதைவு தனித்த மாறி (Independent Variables)
வேலைத்திறன் -சார்பு மாறி (Dependent Variables)
கல்வி உளவியலில் பரிசோதனையின் எடுத்துக்காட்டாக நாம் குழந்தைகளது சாதனையைப் பாராட்டுதல், குறை கூறுதல் ஆகியன எவ்வாறு பாதிக்கின்றன என்பதை ஆராய ‘ஹாலாக்’ என்பவர் மேற்கொண்ட சோதனையைக் குறிப்பிடலாம்.

தனியாள் ஆய்வுமுறை (Case Study Method) 

தனி மனிதரிடம் காணப்படும் நடத்தைக் கோளாறுகளின் காரணங்களைக் கண்டறிந்து அவற்றை முறைப்படி ஆய்வு செய்து அதனடிப்படையில் தீர்வு காண்பது தனியாள் ஆய்வு முறையாகும். 
வேறு பெயர்கள் தனி வரலாற்று ஆராய்ச்சி முறை, தனியலகு ஆய்வு முறை,மருத்துவ முறை, நீண்ட திரள் பதிவேட்டு ஆயவு முறை. உளப்பகுப்பாய்வு முறையில் தனியாள் ஆய்வு முறையினைப் பயன்படுத்தியவர் சிக்மண்ட் பிராய்டு.
அறிதல் திறன் வளர்ச்சி முறையில் தனியாள் ஆய்வு முறையினைப் பயன்படுத்தியவர் பியாஜே.

தனியாள் ஆய்வின் முக்கியத்துவம் :

மனித வள இழப்பைத் தவிர்த்தல்
மாணவனைப் பற்றி ஆசிரியர் முழுமையாக அறிதல் மாணவனிடம் பொருத்தப்பாடுடைய நடத்தையை ஏற்படுத்துதல்
இம்முறைக்கு ஈடாக மேல்நாட்டுப்பள்ளிகளில் “குழந்தைகளுக்கு நல்வழிகாட்டும்விடுதிகள்” (Child Guidance Clinics) உள்ளன.

வாழ்க்கைத் துணுக்கு முறை (Anecdotal Method) 

உற்று நோக்கல் முறையுடன் தொடர்பு கொண்டது.
இளமைப்பருவ நிகழ்ச்சிகளை தொகுத்து வைக்கும்.
தங்கள் குழந்தைகள் பற்றிய பெற்றோரின் குறிப்பு உண்மையை சிறிது திரித்துக் கூறும்.

கள ஆய்வு முறை (Field Study Method)

ஒரு நிகழ்ச்சியை இயற்கையான சூழ்நிலையில் உற்றுநோக்கி ஆராய்தல் சமூக உளவியலிலும், கல்வி உளவியலிலும் பயன்படுத்தப்படுகிறது (எ.கா.) தொழிற்சாலையில் எழும் வேலை நிறுத்தம். 
வினாவரிசைகள், தர அளவுகோல், குறியீட்டுப் பட்டியல்கள் பயன்படுத்தப்படும்.

வளர்ச்சி ஆய்வு முறை (Developmental Method) 

இதன் வேறு பெயர் மரபணு முறை ஆகும்.
குழந்தைப்பருவம் முதல் முதிர்ச்சி வரை பண்புகள், நடத்தைக் கோலங்கள் மாறுபாடு அடைவது பற்றி அறியும் முறை,இது இரு வகைப்படும்.

  • நீள் ஆய்வுமுறை (Longitudinal Method) ஒரே வளர்ச்சிப்படி நிலையிலுள்ள பல குழந்தைகள் பல ஆண்டுகள் உற்று நோக்கப்படுதல்.
  • (எ.கா.) 3500 குழந்தைகள் 12ஆண்டுகள் – உடல் உளப் பண்பு ஆய்வு ஹார்வர்ட்டின் வளர்ச்சி ஆராய்ச்சி.
  • பியாஜேவின் ஆராய்ச்சியும் இம்முறை ஆகும்
  • குறுக்கு ஆய்வு முறை (Cross Sectional Method) பல வளர்ச்சி நிலையில் உள்ளோரது நடத்தையை கவனித்து ஒப்பு நோக்கல்
  • (எ.கா.) ஷிர்லி.லான் ஆல்ஸ்டைன் – குழந்தை விளையாட்டு பற்றிய ஆய்வு.

வினா வரிசை முறை (Questionnaire Method) 

இன்று உளவியலிலும் சமூகவியலிலும் பெருமளவில் பயன்படுத்தப்படும் முறையாகும்.
விடைகளைக் குறிப்பிட ஆம், இல்லை. நிச்சயமாக சொல்ல இயலாது என்ற சிறப்பு அமைப்பு கொடுக்கப்பட்டிருக்கும்.
ஆளுமை வினாவரிசை, மனப்பான்மை வினாவரிசை, போன்ற வினாவரிசைகள் இன்று உளவியல் ஆய்வுகளில் பயன்படுத்தப்படுகின்றன.
வினா வரிசை முறையை உளவியல் ஆராய்ச்சிகளுக்கு முதன் முதலில் பயன்படுத்தியவர் பிரான்சிஸ் கால்டன். வாக்கெடுப்பு என்பதும் வினாவரிசை முறையின் ஒரு வகை.

வேற்றுமை முறை (Differential Method)

பரிசோதனை முறையில் தனித்த மாறியில் (Independent Variable) மாற்றத்தை உண்டாக்கி சார்பு மாறியில் (Dependent Variable) ஏற்படும் மாற்றம் அளவிடப்படுகின்றது. இம்முறை தனி நபரின் வேறுபாடுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.
வேறுபெயர்கள்: நெறிமுறை கணக்கெடுப்புமுறை (Nomative Survey Method). கள ஆய்வு முறை (Field Survey Method), புள்ளி விவர முறை (Statisticalmethod)

இம்முறையில் 4 வகையான முக்கிய அணுகுமுறைகள்:

  1. தொடர்பு அணுகுமுறை (Correlation Approach)
  2. கள ஆய்வு அணுகுமுறை (Field Survey Approach)
  3. நீள்வெட்டு அணுகுமுறை (Longitudinal Approach) 4. குறுக்கு வெட்டு அணுகுமுறை (Cross-Sectional Approach)

சமூக அளவியல் முறை (Sociometry)

சமூகத் தொடர்புகளையும் இவற்றுக்குப்பின் அமையும் மனப்பான்மைகளையும் (Social Attitudes) ஆராய்ந்து அளந்தறியும் முறை
மாணாக்கர் மதிப்பீட்டு நுண்முறை (Appraisal) எனப்படும் சமூக முறை சிறந்ததாகக் கருதப்படுகிறது.
சமூக அளவியல் முறைகளைப் பயன்படுத்தி மாணாக்கர்களுள் விரும்பப்படும் ‘தலைவர்’ புறக்கணிக்கப்படும் ‘தனித்திருப்போர்’ வகுப்பறையில் ‘சிறுகுழுக்கள்’ போன்றவற்றை தெளிவாகக் கண்டறியலாம்.
சமூக அளவியல் முறைகளினால் அறியப்பட்ட சமூகத் தொடர்புகளை விளக்கும் வரைபடம் சமூகவிளக்கப்படம் (Sociogram) ஆகும். 
மனப்பான்மை, வினாவரிசைகள், மனப்பான்மை அளவுகோல்கள் ஆகியன சமூக அளவியல் முறைகளாகும்.

செயல் ஆராய்ச்சி (Action Research)

செயலுடன் இணைந்த ஆராய்ச்சி எனப்படுவது அவ்வப்போது வகுப்பறையில் நடைமுறையில் எழும் பிரச்சனைகளுக்கு ஆராய்ச்சி மனப்பான்மையுடன் ஆசிரியர் விடை காண்பதைக் குறிப்பதாகும்.

Click to comment