psychology quiz in tamil
- types of phobia
- psychology online test-1
- psychology online test-2
- psychology online test-3
- psychology online test-4
- psychology online test-5
- psychology online test-6
- psychology online test-7
- psychology online test-8
- psychology online test-9
- psychology online test-10
- psychology online test-11
- psychology online test-12
கல்வி உளவியல்
(Educational Psychology)
கல்வி உளவியல் என்பது உளவியலின் பொதுக் கொள்கையை கல்வித் துறையில் நல்ல விளைவுகளுக்காக கற்றல் - கற்பித்தலில் செயல்படுத்துவதாகும். கல்வி உளவியலின் தந்தை எனக் கருதப்படுபவர் - ஹெர்பார்ட்
கல்வியின் நோக்கத்தை அடைவதற்கான கருவியே கல்வி உளவியாகும்.
கல்வி உளவியலின் நோக்கங்களை அளித்தவர் - கோலஸ்னிக் - தற்கால கல்வி உளவியல் கற்போரின் பிரச்சனைகளுக்கு ஆலோசனை வழங்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
உளவியலின் வரையறைகள் : (Definition)
கற்றல் செயல்முறைகள், பின்பற்றப்படும் வழிமுறைகள், ஆகியவற்றில் உளவியல் கோட்பாடுகளையும், விதிகளையும் புகுத்தி கற்றல் - கற்பித்தலை மேம்படுத்துவதற்கு கல்வி உளவியல் என்று பெயர்- கோலஸ்னிக் (Kolesnik)
பிறப்பிலிருந்து முதுமை வரைக்கும் ஒருவரது கற்றல் அனுபவங்களை விவரிப்பது தான் கல்வி உளவியலாகும்.
குரோ மற்றும் குரோ (Crow and Crow)
கல்வி உளவியல் கல்வியுடன் சம்பந்தப்பட்ட நடத்தை மற்றும் ஆளுமைத்திறனின் முழு அளவையும் உள்ளடக்கியது. ஸ்கின்னர் (Skinner)
கல்வி உளவியல் என்பது கல்வியைப் பற்றி படிக்கும் அறிவியல் பீல் (E.A.Peel)
பொது உளவியலின் கருத்துகளையும், கண்டுபிடிப்புகளையும் கற்பித்தல் கற்றலில் எடுத்தாள்வது கல்வி உளவியலாகும்.
எஸ்.சந்தானம். (S.Santhanam) கல்வி எனப்படுவது ஒரு குடுவையை நிரப்புதல்ல. அது தீயின் ஒளியமைப்பு ஆகும் - வில்லியம் பட்லர் ஈட்ஸ் (William Butler Yeats)
கல்வி உளவியலுக்கு வித்திட்டவர் 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மேதை ரூசோ
இவருக்குப் பின் வந்த பெஸ்டலாசி (Pestalozzi) குழந்தைக் கல்வியை அதன் உளவியல் பண்புக்கேற்ப அமைத்தலில் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார்.
சிறு குழந்தைகளுக்கு கற்பித்தலில் "பொருள்கள் முந்தி, சொற்கள் பிந்தி" (Things before words after) என்ற கருத்தையும் குழந்தைக் கல்வி அன்பு நிறைந்த சூழலில் அமைதல் வேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்தியவர் பெஸ்டலாசி. (Pestalozzi)
இவருக்குப் பின் வந்த ஹெர்பார்ட் (Herbart) கற்பித்தலில் திட்டமிட இன்றளவும் பயன்படும் 5 படிகள் (5 Steps in teaching) என்னும் முறையை உருவாக்கியதுடன் கற்பித்தலில் மாணவனது முன்னறிவுடன் புதிய பாடக் கருத்துக்களை இணைத்தலின் முக்கியத்துவத்தை விளக்கினார்.
இன்றைய குழவிப் பூங்கா முறையை (Kindergarten)முறையை உருவாக்கி குழவிப்பூங்கா முறையின் தந்தை (Father of Kindergarten) என்றழைக்கப்படுபவர் ஃபிரோபெல் (Frobel)
பள்ளியைத் தோட்டமாகவும், குழந்தைகளை சிறு செடிகளாகவும் ஆசிரியரைத் தோட்டக்காரராகவும் உருவகப்படுத்தியவர் ஃபிரோபெல்.
"புலப்பயிற்சி","குழந்தைகள் சுதந்திரமாக செயல்படல்" ஆகிய கருத்துக்களைக் குறிப்பிட்டு குழந்தைக் கல்வியில் புதிய அமைப்பை அறிமுகப்படுத்தியவர் மாண்டிசோரி (Maria Montessori)
இத்தாலி நாட்டின் முதல் பெண் மருத்துவர் மரியா மாண்டிசோரி. குழந்தைகளின் உரிமைக்கான, இலவச மற்றும் கட்டாயக் கல்விசட்டம் 2009 திருத்தப்பட்ட ஆண்டு -2019
SSA (Sarva Shiksha Abhiyan) என்பது ஒரு பணி என்ற முறையில் சமூகத்திற்குச் சொந்தமான தரமான கல்வி மூலம் அனைத்து குழந்தைகளின் திறன்களையும் மேம்படுத்த ஏற்படுத்தப்பட்ட முயற்சித் திட்டமாகும்.
பெயின் (Bain), கிளெபரிட் (Claparede), தார்ண்டைக் (Thormdike) போன்றோரின் நூல்கள் கல்வி உளவியலின் முல் நூல்களாகும்.
பள்ளி வகுப்பறையே கல்வி உளவியலார்களின் ஆய்வுக்கூடம்.
கல்வி உளவியலின் மூன்று குறிக்கோள்கள்:
கேஜ். பெர்லினர் (Gage and Berliner, 1975) ஆகியோரின் கூற்றுப்படி மூன்று குறிக்கோள்கள் உள்ளன. அவை
1. நடத்தைகளைப்புரிந்து கொள்ளுதல் (Understanding)
2. நடத்தையைக் கணித்தல் (Prediction)
3. நடத்தையைக் கட்டுப்படுத்துதல்(Control)
கல்வி உளவியலின் வரம்புகளாக கோலஸ்வீக் (Kolesnik) குறிப்பிடும் 7 1. மாணவர்களிடையே காணப்படும் தனியாள் வேறுபாடுகள் (Individual difference)
கூறுகள்.
2. ஊக்கம் (Motivation)
3. கற்பித்தல் முறைகள் (Teaching Process)
4. மதிப்பிடும் முறைகளும் அவற்றின் நிறை குறைகளும் (Evaluation
Process its merits and demerits)
5. வகுப்பறை மேலாண்மை (Classroom management)
6. மனநலம் (Mental health)
7. ஒழுக்கத்தை உருவாக்குதல் (Creating discipline)
எச்.சி.லிண்ட்கிரேன் (H.C.Lindgren) கூற்றுப்படி கல்வி உளவியலின்
பாடப்பொருட்கள் கீழ்க்கண்ட பிரிவுகளை மையமாக வைத்து
அமைக்கப்படுகின்றன.
1. கற்பவர் (Learner)
2. கற்கும் முறைகள் (Learning Process)
3. கற்கும் சூழ்நிலைகள் (Learning Environment)
4. கற்றல் அனுபவங்கள் (Learning Experiences)
5. (ஆசிரியர்) கற்பிப்பவர் (Teacher)
காரிசானும் அவரது சகாக்களும் (Garrison and his associates) கல்வியின் உட்பிரிவுகளாகக் குறிப்பிடுவன
1. குழந்தையும் அதன் வளர்ச்சியும் (The Child and its development)
2. கற்கும் கற்பிக்கும் முறைகள் (Learning and educative Process)
3. மாணவரது வளர்ச்சியை மதிப்பிடுதல் (Evaluating pupil-growth)
4. குழந்தைக்கு வழிகாட்டுதல் (Guiding the child)
கற்பவர் (The Learner)
வகுப்பறையில் கற்பவருக்கே முக்கிய இடமளிக்கப்படுகிறது. * கற்பவர் (மாணவர்) வகுப்பறையில் 3 வகையாக உள்ளனர்.
1. மீத்திறமிக்கவர்கள் (Giftcd)
2. சராசரியினர் (Average)
3. மெதுவாகக் கற்போர் (Slow learmers)
கற்கும் முறைகள் (Learning Process)
இது கற்றலின் இயல்பு. கற்றலின் கொள்கை, கற்றல் முறைகள், நினைவுத்திறனை மேம்படுத்துதல், கருத்துக்களை தெளிவு படுத்துதல், செயல் ஊக்கக் கற்றலின் முறைகள் ஆகியன பற்றி எடுத்துரைக்கிறது.
கற்றலின் உயர் எல்லை என அழைக்கப்படுவது - உடலியல் எல்லை (Physiological limit)
மாணவரது புலன்காட்சி, சிந்தனை (Thinking). ஆய்ந்தறிதல் (Reasoning). நுண்ணறிவு (Intelligence) நினைவிலிருத்தல் (Remembering) ஆகியன கற்றல் செயல்பாடுகளில் இடம் பெறுகின்றன.
கருத்தேற்றமும் (Suggestion), கண்டறிதல், செய்துகாட்டல் போன்ற கற்பித்தல் முறைகளுடன் வகுப்பறையில் இடம் பெற வேண்டிய கற்பித்தல் உத்திகளுள் ஒன்று என
கீடிங் (Keating) குறிப்பிட்டுள்ளார்.
கற்றல் சூழ்நிலைகள் (Learning Environment)
கற்றல் என்பது தனிநபரின் சூழ்நிலை மாற்றத்தைப் பின்பற்றுவதாகும் - நுயுயில்
வகுப்பறை சூழ்நிலை. ஆசிரியர்-மாணவர் ஆகியோரிடையேயான சமூக உளவு போன்றவற்றை உள்ளடக்கியது. ஜனநாயக வகுப்பறை சூழலுக்கான பண்புகள்
ஆசிரியர் மாணவரைப் புரிந்து கொள்ளுதல்
ஆசிரியர் பரிவுடையவராக இருத்தல்.
மாணவர்கள் பொருத்தமான குழுவாக பிரிக்கப்படுவது.
MLL-Minimum Levels of Learming (கற்றலின் குறைந்தபட்ச அளவுகள்)
கற்பித்தல் மாதிரி உருவங்கள்: (Teaching models)
உளவியல் கருத்துகளின் அடிப்படையில் சிறந்த பயன்களை தரும் விதமாக கற்பித்தல் மாதிரி உருவங்கள் ஏற்படுத்தப்பட்டன.
கற்பித்தல் மாதிரி உருவங்களின் தன்மை பற்றி அறிந்து கொள்ள "கிளேசர்" அறிமுகப்படுத்திய மாதிரி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு கற்பித்தல் உரு (Teaching model) நான்கு பகுதிகளைக் கொண்டுள்ளதாக கிளேசர் குறிப்பிட்டுள்ளார்.
1. கற்பித்தல் இலக்குகள் (Instructional objcctives)
2. மாணவரின் நுழைவு நடத்தை (Entering behaviour)
3. கற்பித்தல் பொருட்களும் முறைகளும் (Instructional Procedures)
4. கற்பித்தலின் இறுதியில் மாணவரது சாதனை அல்லது கற்றலின் அடைவு பற்றிய மதிப்பீடு (Performance Assesment)
இது தவிர பெஞ்சமின் புளும் (Benamin Bloom) என்பவர் ஆசிரியர்களுக்குப் பெரிதும் உதவும் வகையில் "கல்வி இலக்குகளின் வரிசைப் பட்டியல் (Tamonomy ofஸEducational objectives) அமைத்துள்ளார்.
கற்றலின் சிறப்பு நோக்கங்களை மிகத் தெளிவாகவும், மதிப்பீடு செய்யத்தக்க நடத்தைக்கோலங்களாகவும் (Behavioural terms)குறிப்பிட்டவர் - பெஞ்சமின் புளும் (Benjamin Bloom)
புளுமின் கூற்றுப்படி மிகக் குறைந்த சிந்தனையைத் தூண்டும் நோக்கக் கூறு -நினைவுகூர்தல் (Remembering) ஆகும்.
இதில் கற்பித்தல் இலக்குகளை மூன்று வகையாக வகைப்படுத்தியுள்ளார்.
1. அறிவு சார்ந்தவை (Cognitive Domain
2. உணர்ச்சி சார்ந்தவை (Afective Domain)
3. உள இயக்கம் சார்ந்தவை (Psycho-motor Domain
வகுப்பறை இடைவினையை பகுத்தாராய்தலில் இன்று பரவலாக பயன்படுத்தும் முறை பிளாண்டர்ஸ் (N.A. Flanders) முறையாகும்.
வகுப்பறையில் ஆசிரியர் மாணவர் இடையே எழக்கூடிய மொழி சார்ந்த இடைவினையை 10 வகைகளாக பிளாண்டர்ஸ் பிரித்துள்ளார். இவற்றில் முதல் 7 வகை ஆசிரியரின் மொழிசார்ந்த நடத்தையைப் பொறுத்தது.
8.9.10 ஆகியன வகுப்பறையில் மாணவரின் நடத்தையைக் குறிப்பன. அமிடான், ஹண்டர் ஆகியோரால் இம்முறை மேலும் விரிவுபடுத்தப்பட்டது.
நுண்ணிலைக் கற்பித்தல் (Micro Teaching)
இது எளிமையாக்கப்பட்ட கற்பித்தல் நிலை.
1963 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தில் இப்பயிற்சி முதன்முதலாக செயல்படுத்தப்பட்டது.
நுண்ணிலைக் கற்பித்தலில் ஓர் ஆசிரிய மாணவர் 5 நிமிடங்களில் ஒரு சிறிய பாடப்பகுதியை 68 மாணவர்களுக்கு கற்பிக்கிறார்.
கற்றல் அனுபவங்கள் (Learning Experiences)
மாணவர்கள் பெறக்கூடிய கற்றல் அனுபவங்களை எட்கர் டேல் (Edgar Tale) என்பவர் கூம்பு வடிவத்தில் (Cone of Learming Experience) வடிவமைத்து விளக்கியுள்ளார்.
எரிக் ஆஷிபி (Eric Ashby) என்பவரின் கூற்றுப்படி கல்வித் தொழில் நுட்பம் (Educational Technology) கல்வி உலகின் நான்காவது புரட்சியாக கருதப்படுகிறது.
வகுப்பறையில் பாடப்பொருள் விவரங்களை ஆசிரியர் மாணவர்களுக்கு கற்பிக்கும் போது அவற்றுடன் இணைந்து பல மனப்பான்மைகளையும் (Attitudes) அவர்கள் கற்கின்றனர். இது உடனிகழ் கற்றல் (Concommitant Leaming) எனப்படும்.
கல்வியில் மதிப்பீடு என்பது தேர்வுகளை மிகவும் நம்பகத் தன்மை உடையதுமாக ஏற்புடையதுமாக வடிவமைத்தலாகும்.
ஆசிரியர் /கற்பிப்பவர் (Teacher)
உண்மையான கற்றல் மிகவும் கவனமாக மறக்கப்படுகிறது என்று கூறியவர் (True Learming is Judicions forgetting) ஆடம் (Adam)
பள்ளிக் கல்வி என்பது (Samagra Shiksha) ஒருங்கிணைந்த கல்வி என்பதைக் குறிப்பதாகும். (முன் பள்ளி கல்வி முதல் 12 ஆம் வகுப்பு வரை)
ஆங்கில ஆட்சிக் காலத்தில் Instruction என்னும் ஆங்கிலச் சொல் கல்வி அல்லது கற்பித்தலைக் குறித்தது. கற்பித்தலின் முதல்படி (First Step) எனப்படுவது (Planning) திட்டமிடுதலாகும்.
Vertical teaching - பாடம் ரீதியாக (Curriculum oriented)
Horizontal teaching - பிரச்சனை சார்ந்தது (Problem-oriented)
Non-formal teaching - கற்பவர் சார்ந்தது (Learner oriented)
பல்வகைத் தூண்டலுக்கான ஆசிரியரின் நடத்தை (Teacher behavior under Stimulus Varaiation)
1.ஆசிரியர் இடமாற்றம் (Teacher movement) 2. பேச்சு வடிவ மாற்றம் (Change in Speech Pattern)
3. ஆசிரியரின் சைகைகள் (Teacher gestures)
ஆசிரியரின் முக்கியப் பணி மாணவர்களின் கவனத்தை ஈர்த்து நிலைபெறச் செய்வதாகும். தனது பயனை மேம்படுத்த வழிகாட்டுதலின் நுட்பங்களைப் பயன்படுத்தும் ஆசிரியர் சிறந்த அறிவியல் மனப்பான்மை (Scientific attitude) உடையவராக காணப்படுகிறார்.