-->

Type something and hit enter

author photo
By On

psychology quiz in tamil 

  • மரபு (Heredity)

  • மரபுக்கு மற்றொரு பெயர் இயற்கை (Nature) என்பதாகும். 
  • மரபு நிலை மாற்ற முடியாதபடி பிறப்பிலேயே நிரணயிக்கப்படுவதாகும்.
  • மரபு என்பது ஒருவரிடம் இடம் பெற்றுள்ள பிறப்பால் தோன்றிய தவித்த தன்மைகளின் ஒட்டு மொத்த நிலை. 
  • மரபு நிலை பண்புக்கூறுகள் பற்றியும் இப்பண்புக்கூறுகள் ஒரு உயிரிலிருந்து மற்றொரு உயிரிக்கு எடுத்துச் செல்வது பற்றி ஆராயும் துறை மரபியல (Genetics) ஆகும். 
  • ஒரு குழந்தையின் சமூக மரபு அக்குழந்தை பிறந்து வளர்ந்த சமூக கலாச்சாரத்தை குறிப்பதாகும்.  
  • சமூக 'மரபை குழந்தை தனதாக்கிக் கொள்ளும் முறைக்கு 'சமூக நெறிப்படுத்தல்" (Socalisation) என்று பெயர்.
  • அயோவா(1OWA} பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் மரபு நிலையின் முக்கியத்துவம் உணர்த்தப்பட்டது. 
  • ஒரு தனிமனிதனின் ஆற்றல் அல்லது அதற்கான மூலத்தை அளிப்பது மரபாகும். மிக குறுகிய காலமே மனித வளர்ச்சியில் மரபு இடம் பெறுகிறது.
  • உடலமைப்புக் கூறுகளான உயரம், சுண், ரோமம் ஆகியவற்றின நிறம், மூக்கின் அமைப்பு ஆகியவை குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பெறும் மரபு நிலைப் பண்புகள், மரபின் முக்கியவேலை ஆளுமைத் திறனை வளர்ப்பதாகும். 
  • நம்முடைய சமூக மற்றும் கலாச்சாரப் பண்புகளை மாற்றாமல் புதிய தலைமுறைக்கு கொண்டு செல்வதற்கு "சமூக மரபு நிலை" என்று பெயர். 
  • சிறந்த மரபு + சிறந்த சூழ்நிலை = சிறந்த முழுமையான வளர்ச்சியும் முன்னேற்றமும்
  • சிறந்த மரபு +குறைந்த சூழநிலை = நடுத்தரமான வளர்ச்சியும் முன்னேற்றமும்
  • குறைந்த மரபு + சிறந்த சூழநிலை = நடுத்தரமான முன்னேற்றம்
  • குறைந்த மரபு + குறைந்த குழ்நிலை = மோசமான முன்னேற்றம்

  • சூழ்நிலை (Environment)

  • சூழ்நிலைக்கு மற்றொரு பெயர் செயற்கை (Nurture) என்பதாகும்
  • ஒருவனது மனவளர்ச்சி, மனப்போக்கு, குணநலன்கள் அவனது சூழ்நிலைமை ஒட்டியே அமைகின்றது. 
  • ஒருவனது சிந்தனை, நிறமை. நுண்ணறிவு. ஆளுமை வளர்ச்சிக்குக் காரணமாக அமைவது சூழ்நிலையே ஆகும். சூழ்நிலை ஒருவனது வளர்ச்சி இயல்பின் அடிப்படை சூழ்நிலை என்பது ஒருவன் பிறந்தது முதல் இறக்கும் வரை அவனைச் சுற்றி இருக்கும் பல்வேறு விதமான தூண்டல்களின் தொகுப்பு அனுபவம் பயிற்சி கலவி ஆகியன சூழ்நிலையின் செல்வாக்குகள் ஆகும்.
  • சூழ்நிலை பற்றிய "வாட்சனின்" பிரபலமான கூற்று:- என்னிடம் உடல் முள்ள சில குழந்தைகளை ஒப்படையுங்கள், எத்தன்மையுள்ளவர்களாக அவர்கள் வளர வேண்டுமென்று முன் கூட்டியே சொல்லி விடுங்கள். இக்குழந்தைகளின் மரபு நிலையைப் பற்றி எனக்கு எந்தக் கவலையுமில்லை, சூழ்நிலையின் உதவி கொண்டு பேரரறிஞர்களாகவோ, பெருங்குற்றவாளிகளாகவோ உருவாகும்படி செய்து காட்டுகிறேன். சூழல் என்பது மனிதன் பெறும் மொத்த அனுபவங்களாகும்.
  • ஸ்கோடாக் (Skodak), கார்டன் (Gordon), சிரில்பர்ட் (Cyrilburt) மற்றும் வாட்சன்(Watson) ஆகியோரின் பரிசோதனைகளின் அடிப்படையில் மனித வளர்ச்சியில் முக்கியப்பங்கு வகிப்பது சூழ்நிலையேயாகும் என்று உணர்த்தப்பட்டுள்ளது.
  • சூழ்நிலை மிக நீண்ட காலம் மனித வளர்ச்சியில் இடம் பெறுகின்றது. சூழ்நிலையானது ஜீன்களின் அமைப்பையே மாற்றி அதனால் அம்மனிதனின் பண்புகளையும் மாற்றும் சக்தி கொண்டது - லைசென்கோ (Lysenko) (ரஷ்ய அறிஞர்)

  • மரபு மற்றும் சூழ்நிலைக்கு இடையேயான தொடர்பு:

  • மரபு என்பது உடலியல் சார்ந்தது
  • சூழ்நிலை என்பது உளவியல் சார்ந்தது.
  • மனித வளர்ச்சிக்கு காரணமாக அமைபவை மரபு மற்றும் சூழ்நிலை நல்ல மரபுக்காரணிகள் + நல்ல சூழ்நிலை= நல்ல முறையான சிறப்பான வளர்ச்சி.
  • வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையும், நிகழ்ச்சியும் மரபு சூழ்நிலை ஆகிய இரண்டின் இணைந்த செயல்பாட்டிலேயே அமைகிறது மக்கைவர் மற்றும் பேஜ் பெற்றோரிடமிருந்து குழந்தைக்கு ஜீன்கள் (Genes) மூலம் உடல் ரீதியாகவும்,மனரீதியாகவும் பண்புகள் பரிமாறப்படுகின்றன.
  • ஆணின் உயிரணு விந்து (Sperm),அண்டம் (Ovum) இணைவதால் (Zygote) உருவாகிறது.
  • பெண்ணின் கருவுறுதல் உயிரணு (Fertilisation)சினைமுட்டை நிகழ்ந்து
  • 1க.செ.மீ விந்தில் 15,000 முதல் 20,000 விந்தணுக்கள் காணப்படும். கருமுட்டையில் காணப்படும் நீர்மப்பொருளின் பெயர் சைட்டோபிளாசம்.
  • சைட்டோப்பிளாசத்தினுள் உட்கரு காணப்படுகின்றது.
  • ஒவ்வொரு குரோமோசோமிலும் 20,000 முதல் 42,000 எண்ணிக்கையிலான பாசிமணி அமைப்பில் ஜீன்கள் உள்ளன.
  • இவை தாயிடமிருந்தும் (xx) தந்தையிடமிருந்தும் (xy) பெறப்படுகின்றன.
  • ஜீன்களை குரோமோசோம்கள் சுமந்து செல்கின்றன.
  • ஜீனோம் (Genome) என்றால் 'மரபணுக் குவியல்' என்று பொருள்.
  • கருமுட்டைகள் குரோமோசோம்கள் குறைப்பு(meiosis) முறையில் 46ல் இருந்து 23 ஆக குரோமோசோம்கள் அமைகின்றன.
  • 23 ஜோடி குரோமோசோகேளில் ஜோடி ஒன்றாக இருக்கும் 22 குரோமோசோம்கள்( Autosomes) எனப்படும்.
  • 23 வது ஜோடி (ஆண்) xy (பெண்) XX என வித்தியாசமாக அமைந்திருக்கும் இவை பால் குரோமோசோம்கள்(Allosomes) எனப்படும்.
  • சினை முட்டையானது (ovum) விந்தணுவை (sperm)விட 85000 மடங்கு பெரியது.
  • கருவிலிருக்கும் குழந்தை ஆணா, அல்லது பெண்ணா என நிர்ணயம் செய்வது ஆணின் X அல்லது Y குரோமோசோமாகும். இது வாய்ப்புக் கோட்பாட்டின் (Theory of Probability) அடிப்படையில் நிகழ்கிறது.
  • ஒரு குழந்தையின் குணநலன்களில் அதன் 8 தலைமுறை மூதாதையர்கள் தாக்கம் ஏற்ப வாய்ப்புள்ளது.
  • அண்டம் வெள்ளை நிறத்தில் கர்பப்பையின் இருபுறமும் பக்கவாட்டில் அமைந்திருக்கும். இவை ஈஸ்டரோஜென், புரோஜெஸ்டிரான். இன்கிபின் போன்ற ஹார்மோன்களை சுரக்கிறது. இந்த ஹார்மோன்கள் மாதவிடாய். கருவுறுதல் மற்றும் மார்பகவளர்ச்சி போன்றவற்றை பராமரிக்கின்றது.
  • பாலிமெனோரியா (Polymenorrhea)
  • மாதவிடாய் சுழற்சி அடிக்கடி (28 நாட்களில் 2-3 முறை) நிகழ்வது.
  • 2. ஒலிக்கோமேனோரியா (Oligomenorihea) குறைவான மாதவிடாய் காலம்.
  • 3. மேனரோஜியா: இயல்பான மாதவிடாய் காலத்தில் நீடித்த நாட்கள் இரத்தப்போக்கு அல்லது அதிகப்படியான இரத்தப்போக்கு.
  • 4. அமினோரியா: இனப்பெருக்க வயதில் மாதவிடாய் சுழற்சி வராதநிலை.
  • 5. டிஸ்மெநோரியா வயிறு வலியுடன் மற்றும் இறுக்கத்துடன் கூடிய மாதவிடாய் சுழற்சி. குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டத்தின்படி பெண்ணின் திருமண வயது 18 மற்றும் ஆணின் திருமண வயது 21 ஆக உள்ளது.
  • உலகிலேயே முதன்முதலாக 1952ம் ஆண்டு இந்தியாவில் குடும்பக் கட்டுப்பாட்டு 

Click to comment