உளவியலின் வளர்ச்சி
- 1590- சைக்காலஜி என்ற பெயரை முதன்முதலில் தன் நூலுக்கு ருடால்ஃப் கோக்கில் அமைத்தார்.
- 1802 பியர்கேபானிஸ் உயரியல் தொடர்பான உளவியல் ஆய்வினை மேற்கொண்டு மனிதனின் உடலியல் மற்றும் அறநெறி பற்றிய உறவுகள் (Human Physical and Moral Relationship) என்னும் தலைப்பில் கட்டுரை வெளியிட்டார்.
- 1859 சர்.வில்லியம் ஹாமில்டன் என்பவர் முதன்முதலில் கவனவீச்சு தொடர்பான சோதனையை நடத்தினார்.
- 1870 ஜென்சன் என்பவர் பளிங்குகற்கள் (Marbles) மீது சோதனை செய்து கவனவீச்சைக் கண்டறிந்தார்.
- 1879 -ஜெர்மனியில் லீப்சிக் பல்கலைக்கழகத்தில் வில்ஹெல்ம் உண்ட் என்பவரால் முதல் உளவியல் ஆய்வுக்கூடம் ஏற்படுத்தப்பட்டது.
- 1880-இங்கிலாந்தில் பிரான்சிஸ் கால்டன் என்பவரால் உளவியல் ஆய்வுக்கூடம் தோற்றுவிக்கப்பட்டது.
- 1885- நினைவாற்றல் குறித்து ஹெர்மன் எபிங்காஸ் தனது முதல் பதிப்பினை வெளியிட்டு மறதி வளைவினைக் கண்டறிந்தார்
- ஜான்டூயி அமெரிக்காவில் முதல் உளவியல் பாடநூலை வெளியிட்டார்.
- உளப்பகுப்பாய்வு (Psycho Analysis) என்னும் சொல் சிக்மண்ட் ஃப்ராய்டால் 1895 முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது.
- 1899-1900 சிக்மண்ட் ப்ராய்டு (நவீன உளவியலின் தந்தை) "கனவுகளின் விளக்கம்"(The Interpretation of Dreams ) என்ற நூலை வெளிட்டார்
- ܀ 1904- பாவ்லோவ் (ரஷ்யா) நோபல் பரிசு பெற்றார் (நோபல் பரிசு பெற்றமுதல் உளவியல் அறிஞர்)
- 1908 - ஆல்பிரட் பீனே (நுண்ணறிவுச் சோதனைகளின் தந்தை) மன வயது என்னும் கருத்தினை அறிமுகம் செய்தார்.
- 1912 - நடத்தைக் கோட்பாட்டிற்கு எதிராக முழுமைக்காட்சிக் கோட்பாடு (கெஸ்டால்ட்) தோன்றியது.
- 1916 இந்தியாவின் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் முதன் முதலில் உளவியல் துறை தொடங்கப்பட்டது.
- 1920 - E.L. தார்ண்டைக் என்பவர் 'சமூக நுண்ணறிவு' என்ற சொல்லைப்பயன்படுத்தினார்.
- ܀ 1920 - வங்காளத்தில் சூழ்நிலையின் முக்கியத்துவத்தை மையப்படுத்தி அமலா. கமலா சகோதரிகள் ஆய்வு நடத்தப்பட்டது.
- 1921-மைத்தடச் சோதனையை (Ink Plot Test) ஹெர்மன் ரோஷார்க் உருவாக்கினார்.
- 1924 - இந்திய உளவியல் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது.
- 1925- இந்திய உளவியல் ஆய்விதழ் (Indian Journal of Psychology) வெளிவந்தது.
- ܀ 1927- ஆக்க நிலையுறுத்தக் கோட்பாடு (Classical condition ) பாவ்லோவால் வெளியிடப்பட்டது.
- 1927 - SVIB (strong vocational interest Blank ) என்றழைக்கப்படும் ஸ்ட்ராங்கின் தொழிற் கவர்ச்சிப்பட்டியல் உருவாக்கப்பட்டது.
- 1928- இந்தியாவின் நவீன உளவியலின் நிறுவனர் என அழைக்கப்படும் சென்குப்தா எழுதிய முதல் சமூக உளவியல் நூலான சமூக உளவியல் ஓர் அறிமுகம்.
- (Intoduction to Social psychology: Mind in Society) என்னும் புத்தகத்திணை ராதா கமல் உடன் இணைந்து எழுதி வெளியிட்டார்.
- 1931- அவாஷிலை (Leval of Aspiration) என்ற கருத்து டெம்போ என்பவரால் முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்டது.
- 1938-இந்தியாவில் அறிவியல் முறைப்படி அமைந்த வழிகாட்டுதல் (Guidance) கல்கத்தா பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டது.
- 1943 - குழந்தை பருவம் ஆட்டிஸம் என்ற சொல் லியோகேனர் என்பவரால் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது.
- 1947 இந்து உளவியல் (Hindu Psychology) என்னும் நூலினை அசிலானந்து என்பவர் வெளியிட்டார்.
- 1947 - ஆச்சார்யா நரேந்திர தேவ் என்பவரின் தலைமையில் செயல்பட்ட குழுவின் பரிந்துரையின் பேரில் கல்வியில் வழிகாட்டுதல் மையத்திற்கு அரசு அங்கீகாரம் அளித்த முதல் மாநில அரசு உத்திரபிரதேசம்.
- 1950 - மனித நேய உளவியல் தோற்றுவிக்கப்பட்டது
- 1954 -5 வகையான தேவைப்படி நிலைக்கோட்பாடு ஆபிரஹாம் மாஸ்லோவால் கண்டறியப்பட்டது.
- 1960 தன்னுணர்வு கடந்த உளவியல் என்னும் சொல் ஆபிரஹாம் மாஸலோ மற்றும் விக்டர் ஃப்ரான்கில் ஆகியேரால் அறிமுகம் செய்யப்பட்டது (மானிட வாழ்வில் ஆன்மீக இயல்புகளோடு தொடர்பு கொண்டதே தன்னுணர்வு கட்நத உளவியல் ஆகும்).
- 1963 - பின்பற்றல் வழிகற்றல் முறையினைக் கண்டறிந்த ஆல்பர்ட் பாண்டுரா சமூகக் சுற்றலும் ஆளுமை வளர்ச்சியும் என்ற நூலை வெளியிட்டார்.
- 1966 - நுண்ணறிவுக் கட்டமைப்பு மாதிரி உருவம் (3D Model) என்ற கருத்தினை J.P கில்போர்ட் வெளியிட்டார்.
- 1970 மாஸ்லோவின் தேவைப்படிநிலைகோட்பாடு 7 ஆக ரூட் என்பவரால் மாற்றிமைக்கப்பட்டது.
- 1971-தன்னுணர்வு கடந்த உளவியல் சங்கம் தொடங்கப்பட்டது.
- 1972 இந்தியாவில் முதல் உளவியல் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.
- 1975-கேஜ்.பெர்லினர் ஆகியோரால் கல்வி உளவியலின் மூன்று குறிக்கோள்கள் வெளியிடப்பட்டது.
- 1990- ஜக்மேயர் மற்றும் பீட்டர் சலாவே ஆகியோரால் மனவெழுச்சி நுண்ணறிவு என்னும் சொல் பயன்படுத்தப்பட்டு பிரபலப்படுத்தப்பட்டது.
- 1993 மனவெழுச்சி நுண்ணறிவு ஏன் நுண்ணறிவு ஈவை விட மேலானதாகக் கருதப்படுகிறது (Emotional Intelligence : Why it can matter more than IQ) என்னும் மனவெழுச்சி நுண்ணறிவு பற்றிய முதல் நூல் டேனியல் கோல்மேன் என்பரால் வெளியிடப்பட்டது.
- 2005 - தேசிய கலைத்திட்டம்.
- 2009 - கல்வி கட்டாய உரிமைச்சட்டம் (RTE) இயற்றப்பட்டது.
- 2010 - ஏப்ரல் 01 கல்வி கட்டாய உரிமைச்சட்டம் (RTE) நடைமுறைக்கு வந்தது.