Table Of Contents
Table Of Contents
குழந்தை மேம்பாட்டு உளவியல் : Child Development And Pedagogy In Tamil
- உளவியலின பூர்விகம் கிரேக்கம்
- உளவியல் (Psychology) என்னும் சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் குடால்ப கோக்கெல் (Rudolf Gockel 1590ம் ஆண்டு)
- உளவியலின் தந்தை – வில்ஹெல்ம் உண்ட் (Wilhelm Wundt).
- நவீன உளவியலின் தந்தை – சிக்மண்ட் ப்ராய்டு (Sigmund Freud) உளவியல் கிரேக்க மொழிச்சொல் (Psyche + Logus)
- (Psyche) சைக்கி என்றால் உயிர்,ஆன்மா,மனம்,ஆவி,சுவாசம்,சுயம்,பின் உணர்வு என்று பொருள்.
(Logus) லோகஸ் என்றால் (To Study) ஒன்றைப் பற்றி ஆராய்வது அறிவார்ந்த சொற்பொழிவு,பிரிவினை என்று பொருள் உளவியல் தத்துவ இயலின் ஒரு பிரிவாகும். உளவியல் அல்லது மனவியல் ஓர் அறிவியலாகும்.இது உயிரின் சமூக அறிவியலில்(Bio- Social Scicnce) அடங்கும் மனிதன் பல துறைகளைத் தோற்றுவித்து அவற்றை ஆராய்ந்தாலும் உளவியல் மட்டுமே மனிதனை ஆராயும் துறையாக உள்ளது. உளவியலின் மூலப்பொருள் ஆன்மாவைப் பற்றி ஆராய்வதாகும்.
மனித நடத்தையை விவரித்தல், விளக்குதல்,முன் கூட்டியே கணித்தல் கட்டுப்படுத்துதல் அல்லது மாற்றியமைத்தல் ஆகியன உளவியலின் இலக்குகளாகும். கிரேக்க மாமேதை அரிஸ்டாட்டில் எழுதிய ஆன்மாவின் இயல்புகள் (De Anima) உளவியலின் எழுதப்பட்ட முதல் நூலாகும். உளவியல் அதன் பரிமாண வளர்ச்சியின் அடிப்படையில் 4 நிலைகளில் வளர்ச்சியடைந்துள்ளது. உளவியல் ஆன்மா மனம் நனவுநிலை நடத்தை.நம்முடைய உணர்வுகள்,ஆசைகள்,அறிவாற்றல்.பகுத்தறிதல் முடிவுகள் மற்றும் விருப்பம் போன்றவை நிகழ்வுகள் என்றும் அழைக்கப்படுகின்றன – வில்லியம் ஜேம்எஸ்(1890). உளவியல் என்பது ஒருவரது சூழலில் தொடர்புடைய தனிப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய அறிவியலாகும். உட்வொர்த் மற்றும் மார்ரூஸ் (1984).

நிலை – 1 : ஆன்மா பற்றிய ஆய்வு (Study Of Soul)
பழங்காலத்தில் உளவியல் என்பது ஆன்மாவைப்பற்றி பயிலும் அறிவியல் என்று கருதப்பட்டது. ஆன்மாவில் தன்மையை விளக்கவே உளவியல் அல்லது மனவியல் தோன்றியது. ஆன்மா என்பது தெளிவற்ற நிச்சயமற்ற ஒரு எண்ணம். டெமோக்கிட்டஸ் (கி.மு 460).பிளோட்டோ (கி.மு 427-347)அரிஸ்டாட்டில் (கி.மு 384-322 போன்ற தத்துவவாதிகள் உளவியலை ஆன்மாவின் அறிவியல் என்று விளக்கினர். மருத்துவத்தின் தந்தை (Father Of Medicine) -ஹிப்போகிரேட்ஸ். ஆன்மா உடலிலிருந்து பிரிக்கமுடியமாத ஒன்று என்றும் மனித இதயமே ஆன்மாவின் தங்குமிடம் என்றும் அரிஸ்டாடில் வரையறுத்துள்ளார்.

நிலை – 2 : மனதைப்பற்றி ஆய்வு (Study Of Mind)
ஜெர்மனி அறிஞர் இமானுவேல் காண்ட் கூற்றுப்படி உளவியல் ஆன்மா பற்றியதல்ல அது மனிதவின் மனம் பற்றியது. பிரெஞ்ச் அறிஞர் ரெனேடெஸ்கார்ட்ஸ் (Deicarts) கூற்றின்படி மனம் என்பது மூளையில் அமைத்துள்ளது அமைப்பு மற்றும் தொழில்கள் பற்றிய கருத்துகளை வெளியிட்டார். எகிப்தியர்கள் மனம் வயிற்றில் இருப்பதாகக் கருதினர். இந்திய மருத்துவரான சரகர் மனம் இருதயத்தில் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். மனதைப்பற்றி படித்தல் என்பது தத்துவத்துறையில் ஒரு தனிப்பிரிவாக விளங்கியது இதற்கு மவோதத்துவவியல் என்று பெயர் அமெரிக்க உளவியலாளர் E.B டிட்சனர் (1867-1927) மனதை மூன்று கூறுகளாகப்பிரித்துள்ளார்.
- SENSATION (புலனுணாச்சி)
- IMAGES (சாயல்கள்)
- AFFECTIONS (மன உணர்ச்சிகள்)
உள்ளத்தின் அல்லது மனதின் வாழ்க்கையை பற்றிய அறிவியலே உளவியல்- வில்லியம் ஜேம்ஸ். ஹி(Hume) பெயின் (Bain) மில்(Mill) ஆகியோரின் கருத்துப்படி அனுபவத்தின் மூலமாக மூளையில் சேகரித்து வைக்கப்படும் கருத்து தான் மனம்.

நிலை – 3 : நனவு நிலை பற்றிய ஆய்வு (Study Of Consciousness)
❤ நனவு நிலை என்பது ஒருவன் துங்கும்போது அடியோடு மறைந்து இருந்து அவன் மெதுவாக விழித்துக் கொள்ள படிப்படியாக அதிகரித்துச் செல்லும் ஒரு நிலையாகும். ❤ நனவு நிலையானது அறிவுடையநிலை என்றும் அழைக்கப்படுகிறது. ❤ வில்ஹெல்ம் (1832-1920), வில்லியம் ஜேம்ஸ் (1842 1910) உளவியலை நனவின் அறிவியல் (Science Of Consciousness) அல்லது அனுபவங்கள் (Immediate Experiences) என்று கருதினார்.❤ நனவு அனுபவங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்கள்- நடத்தைக் கோட்பாட்டினர்❤ பிற்காலத்தில் சிக்மண்ட் ப்ராய்டு இந்தக் கருத்தினை விமாரித்தார்.
நிலை – 4 : நடத்தை பற்றிய அறிவியல் (Science Of Behavior)
நடத்தை பற்றிய ஆய்வு என்று குறிப்பிடப்பட்டு வந்த சொல் நடத்தை பற்றிய அறிவியல் என்று மாற்றம் பெற்றது. 1908 ஆம் ஆண்டு நோக்கக் கொள்கையின் தந்தை(Father Of Hormic Theory) என்றழைக்கப்படும் வில்லியம் மெக்டூகல் எழுதிய ‘சமூக உளவியல் ஓர் அறிமுகம் (Introduction To Social Psychology) என்னும் புத்தகத்தில் நடத்தை என்னும் சொல் அறிமுகப்படுத்தப்பட்டது. 1911 ஆம் ஆண்டு அமெரிக்க உளவியலாளர் W.B.பில்ஸ்பரி (Pillsbury) உளவியலின் அத்தியாவசியங்கள் (Essentials Of Psychology) என்னும் புத்தகத்தில்மனிதனுடைய நடத்தை பற்றிய அறிவியலே உளவியல் என்று முதன் முதலில் குறிப்பிட்டுள்ளார். உளவியல் முதலில் ஆன்மாவைக் குறித்து பிறகு மனதைக் குறித்து அதன் பிறகு நனவு நிலையைக் குறித்து, இது நடத்தைக் கோலங்களை (Behavior Pattern) இன்றளவும் குறிக்கின்றது. R.S உட்வொர்த். நடத்தை என்னும் சொல்லை பிரபலப்படுத்தியவர் நடத்தை கோட்பாட்டின் தந்தை என்று அழைக்கப்படும் J.B.வாட்சன். ஒரு உயிரினம் செய்யக்கூடிய எதுவுமே நடத்தை எனப்படும். உளவியல் ஆய்வு என்பது நடத்தையை அறிவியல் ரீதியாக ஆய்வு செய்தல் கூறியவர் N.L.மன். நடத்தை என்பது ஒரு கண்ணாடி இதில் அனைவரும் அவர்களது உருவத்தை வெளிப்படுத்துகிறார்கள் கூறியவர் கோகன் வொல்ப்காங் வான்கோ.
நடத்தையானது வெளிப்படையான நடத்தை (Observable Over Behavior) உள்ளடங்கிய நடத்தை (Subjective Behavior) என இரண்டு வகைப்படும். வெளிப்படையான நடத்தைகளைக் காண உணவருந்துதல் போன்றவை உள்ளடங்கிய நடத்தைகளில் சிலவகை நடத்தைகளைக் காண இயலாது.(எ.கா) சிந்தித்தல், மனப்பாடம் செய்தல், உணர்தல். உளவியலறிஞர்களின் உளவியல் தொடர்பான வரையறைகள்:
- உளவியல் என்பது உண்மையில் அறிவியல் அல்லது சுய நிகழ்வுகளாகும் ஜான்டூயி உளவியல் என்பது உள அனுபவங்களைப் பற்றி படிக்கும் அறிவியலாகும் –வில்ஹெல்ம் உண்ட்
- உளவியல் என்பது உயிரினங்களின் அவற்றின் வெளியுலகத் தொடர்புகளின் நடத்தை குறித்து ஆராய்வதாகும் –குர்த் ஹோப்ஃஹா
- மனிதனின் இயற்கை பற்றி ஆராய்வதே உளவியலாகும் போரிங் மற்றும் லேங்ஃபீல்டு மனிதனின் நடத்தை மற்றும் மனித உறவுமுறைகளைப் பற்றி ஆராய்வதே உளவியலாகும்.-லெஸ்டர் குரோ மற்றும் ஆலிஸ்குரோ.
- உளவியல் என்றால் சூழ்நிலை சம்பந்தப்பட்ட தனியவனின் நடவடிக்கைகள் பற்றிய ஒரு அறிவியல் R.S. உட்வொர்த்
- உளவியல் என்பது ஓர் அறிவியல் இது உயிரினத்தின் நடத்தை பற்றிய சிறந்த புரிதலையும் கட்டுப்பாட்டையும் நமக்கு அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது வில்லியம் மெக்டூகல்
- நடத்தையினை அறிவியல் முறைப்படி புலனாய்வு செய்வதே உளவியலாகும் – N.L.மன்
- மனிதனின் நடத்தை மற்றும் அனுபவங்களை விவரிக்கும் அறிவியலே உளவியலாகும் B.F.ஸ்கின்னர்.
- மனித நடத்தையை விவரிக்கும் அறிவியலே உளவியல் – J.B.வாட்சன்