வேதியியல் சுய கற்றல் தளம்
12-ஆம் வகுப்பு வேதியியல் முக்கிய வினா விடைகள்
01. உலோகவியல்
01. கனிமம் தாது வேறுபடுத்துக.
| வ.எண் | கனிமம் | தாது |
|---|---|---|
| 1 | இயற்கையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பொருள் உலோகத்தை தனித்த அல்லது உலோக நிலையில் கொண்டிருக்கும். | உலோகத்தின் சதவீதம் அதிகளவில் கொண்டுள்ள கனிமம். |
| 2 | கனிமத்திலிருந்து உலோகத்தை எளிதில் பிரித்தெடுக்க இயலாது. | எளிதில் பிரித்தெடுக்கலாம். |
| 3 | அனைத்து கனிமங்களும் தாதுக்கள் இல்லை. எ.கா. களிமண் | தாதுக்கள் அனைத்தும் கனிமங்களே. எ.கா. பாக்சைட். |
02. உலோகங்களைப் பிரித்தெடுத்தலில் உள்ள படிநிலைகள் யாவை?
1. அடர்ப்பித்தல் 2. பிரித்தெடுத்தல் 3. தூய்மையாக்கல்.
03. நுரைமிதப்பு முறையை விவரி.
1. கலீனா போன்ற சல்பைடு தாதுக்களை அடர்ப்பிக்க பயன்படுகிறது.
2. தூளாக்கப்பட்ட தாது நீருள்ள தொட்டியில் சேர்த்து, அத்துடன் பைன் எண்ணெய், யூகலிப்டஸ் எண்ணெய் போன்ற நுரை உண்டாக்கும் கரணிகள் சேர்க்கப்படுகிறது.
3. சேகரிப்பான் - சோடியம் ஈத்தைல் சாந்தேட்.
4. காற்று செலுத்தி நுரை உண்டாக்கப்படுகிறது.
5. தாது துகள்கள் எண்ணெயினால் கவரப்பட்டு மேற்பரப்பை அடைகிறது.
6. மாசுக்கள் நீரினால் கவரப்பட்டு அடிப்பரப்பை அடைகிறது.
2. தூளாக்கப்பட்ட தாது நீருள்ள தொட்டியில் சேர்த்து, அத்துடன் பைன் எண்ணெய், யூகலிப்டஸ் எண்ணெய் போன்ற நுரை உண்டாக்கும் கரணிகள் சேர்க்கப்படுகிறது.
3. சேகரிப்பான் - சோடியம் ஈத்தைல் சாந்தேட்.
4. காற்று செலுத்தி நுரை உண்டாக்கப்படுகிறது.
5. தாது துகள்கள் எண்ணெயினால் கவரப்பட்டு மேற்பரப்பை அடைகிறது.
6. மாசுக்கள் நீரினால் கவரப்பட்டு அடிப்பரப்பை அடைகிறது.
04. காந்த பிரிப்பு முறையை விவரி?
1. பெர்ரோ காந்த தன்மையுள்ள தாதுக்களை அடர்ப்பிக்க.
2. உல்ப்ரமைட் மாசுவிலிருந்து வெள்ளீயக்கல் தாதுவினை அடர்ப்பிக்க.
3. உல்ப்ரமைட் மாசு காந்தத் தன்மையுடையது. எனவே சுழல் சக்கரத்திற்கு அருகாமையிலும், காந்தத் தன்மையற்ற வெள்ளீயக்கல் தாது சுழல் சக்கரத்திற்கு அப்பாலும் விழுகிறது.
2. உல்ப்ரமைட் மாசுவிலிருந்து வெள்ளீயக்கல் தாதுவினை அடர்ப்பிக்க.
3. உல்ப்ரமைட் மாசு காந்தத் தன்மையுடையது. எனவே சுழல் சக்கரத்திற்கு அருகாமையிலும், காந்தத் தன்மையற்ற வெள்ளீயக்கல் தாது சுழல் சக்கரத்திற்கு அப்பாலும் விழுகிறது.
05. எலிங்கம் வரைபடத்தின் வரம்புகள் யாவை?
1. வினை எவ்வளவு வேகத்தில் நிகழும் என்ற விவரம் இல்லை.
2. வெப்ப இயக்கவியல் கொள்கைகளை மட்டுமே கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
3. எல்லா நிபந்தனைகளிலும் வினைபடுபொருட்கள் விளைபொருட்களுடன் சமநிலையில் இருக்காது.
2. வெப்ப இயக்கவியல் கொள்கைகளை மட்டுமே கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
3. எல்லா நிபந்தனைகளிலும் வினைபடுபொருட்கள் விளைபொருட்களுடன் சமநிலையில் இருக்காது.
06. சுய ஒடுக்கம் என்றால் என்ன?
HgS + O₂ → Hg + SO₂
07. புலத்தூய்மையாக்கலை விவரி?
1. பின்னப் படிகமாக்கல் தத்துவம்.
2. தூய்மையற்ற உলোகம் தண்டு வடிவில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
3. தூண்டு வெப்பப்படுத்தி கொண்டு வெப்பப்படுத்தப்படுகிறது.
4. மந்த வாயு சூழலில் நிகழ்த்தப்படுகிறது.
5. எ.கா. ஜெர்மானியம், சிலிக்கான்.
2. தூய்மையற்ற உলোகம் தண்டு வடிவில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
3. தூண்டு வெப்பப்படுத்தி கொண்டு வெப்பப்படுத்தப்படுகிறது.
4. மந்த வாயு சூழலில் நிகழ்த்தப்படுகிறது.
5. எ.கா. ஜெர்மானியம், சிலிக்கான்.
08. வாயுநிலைத் தூய்மையாக்கலுக்கான அடிப்படை விதிமுறைகள் யாவை?
1. எளிதில் ஆவியாகும் சேர்மத்தை உருவாக்கல்.
2. அச்சேர்மத்தை சிதைத்து உলোகம் பெறப்படுதல்.
2. அச்சேர்மத்தை சிதைத்து உলোகம் பெறப்படுதல்.
09. துத்தநாகத்தின் பயன்கள் யாவை?
1. துத்தநாக பூச்சு செய்ய.
2. ஒளிரும் பெயிண்டுகள் தயாரிக்க.
2. ஒளிரும் பெயிண்டுகள் தயாரிக்க.
10. கொப்புளக் காப்பர் என்றால் என்ன?
உலோகக் காப்பர் திண்மமாக்கப்படும்போது சல்பர்டையாக்சைடு வெளியேறுகிறது. எனவே கொப்புளம் போன்ற அமைப்பு காணப்படுகிறது.
11. நிக்கலை தூய்மை செய்யும் மான்ட் முறையை விவரி.
Ni + 4CO —(350K)→ Ni(CO)₄ (நிக்கல் டெட்ராகார்பனைல்)
Ni(CO)₄ —(460K)→ Ni + 4CO
Ni(CO)₄ —(460K)→ Ni + 4CO
12. வான் ஆர்கல் முறையை விவரி.
Ti + 2I₂ —(550K)→ TiI₄ (டைட்டானியம் டெட்ரா அயோடைடு)
TiI₄ —(1800K)→ Ti + 2I₂ (தூய டைட்டானியம்)
TiI₄ —(1800K)→ Ti + 2I₂ (தூய டைட்டானியம்)
13. மின்னாற்தூய்மையாக்கல் முறையை விவரி.
வெள்ளியை தூய்மை செய்தல்:
நேர்மின்முனை (ஆக்ஸிஜனேற்றம்): Ag → Ag⁺ + e⁻
எதிர்மின்முனை (ஒடுக்கம்): Ag⁺ + e⁻ → Ag
நேர்மின்முனை (ஆக்ஸிஜனேற்றம்): Ag → Ag⁺ + e⁻
எதிர்மின்முனை (ஒடுக்கம்): Ag⁺ + e⁻ → Ag
14. அலுமினினோ வெப்ப ஒடுக்க முறையை விவரி.
Cr₂O₃ + 2Al —(2400°C)→ Al₂O₃ + 2Cr
15. இரும்பை பிரித்தெடுத்தலில் சுண்ணாம்புக் கல்லின் பயன்பாடு யாது?.
CaO (இளக்கி) + SiO₂ (கழிவு) → CaSiO₃ (கசடு)
02. P- தொகுதித் தனிமங்கள் -I
01. அயனியாக்கும் என்தால்பி மதிப்பு 13ம் தொகுதியில் அலுமினியத்திலிருந்து தாலியம் வரை மிகக் குறைந்த அளவே மாறுபடுகிறது ஏன்?.
s மற்றும் p எலக்ட்ரான்களை விட குறைந்த திரைமறைப்பு விளைவு கொண்ட d மற்றும் f எலக்ட்ரான்கள் இருப்பதே காரணம் ஆகும்.
02. முதல் வரிசை தனிமங்களின் முரண்பட்ட பண்புகளுக்கு காரணம் என்ன?
1. சிறிய உருவளவு. 2. அதிக அயனியாக்கும் ஆற்றல் மற்றும் எலக்டரான் கவர் திறன். 3. d ஆர்பிட்டால்கள் இல்லாமை.
03. மந்த இணை விளைவு என்றால் என்ன?
1. p தொகுதி தனிமங்களில் s எலக்ட்ரான்கள் மந்த தன்மை கொண்டவை. 2. s எலக்ட்ரான்கள் பிணைப்பில் ஈடுபடாமல் p எலக்ட்ரான்கள் மட்டுமே பிணைப்பில் ஈடுபடுகின்றன.
04. போராக்ஸின் பயன்கள் யாவை?
1. நிறமுள்ள அயனிகளைக் கண்டறிய. 2. உணவு பதப்படுத்தியாக. 3. உலோகவியலில் இளக்கியாக. 4. கண்ணாடி, எனாமல், மண்பாண்டங்கள் தயாரிக்க.
05. எத்தில்போரேட் ஆய்வினை எழுதுக.
H₃BO₃ (போரிக் அமிலம்) + 3C₂H₅OH —(அடர் H₂SO₄)→ B(OC₂H₅)₃ (ட்ரைஎத்தில்போரேட்) + 3H₂O
06. போரிக் அமிலத்தின் பயன்கள் யாவை?.
1. கண்மருந்து, நிறமிகள், மண்பாண்டங்கள் தயாரிக்க. 2. உணவு பதப்படுத்தியாக. 3. புரை தடுப்பானாக.
07. டைபோரேனின் வடிவமைப்பினை விவரி?
1. டைபோரேனில் எட்டு சகப்பிணைப்புகள் உள்ளன.
2. எனவே 16 எலக்ட்ரான்கள் தேவை.
3. 12 இணைதிற எலக்ட்ரான்கள் மட்டுமே உள்ளன.
4. நான்கு முனைய B-H பிணைப்புகள் (2c-2e-)
5. இரண்டு பால B-H-B பிணைப்புகள் (3c-2e)
6. போரான் sp³ இனக்கலப்பில் உள்ளது.
2. எனவே 16 எலக்ட்ரான்கள் தேவை.
3. 12 இணைதிற எலக்ட்ரான்கள் மட்டுமே உள்ளன.
4. நான்கு முனைய B-H பிணைப்புகள் (2c-2e-)
5. இரண்டு பால B-H-B பிணைப்புகள் (3c-2e)
6. போரான் sp³ இனக்கலப்பில் உள்ளது.
08. படிகாரத்தின் பயன்கள் யாவை?
1. நீர் சுத்திகரிப்பில். 2. நீர் ஒட்டா ஆடைகள் தயாரிக்க. 3. குருதி தடுப்பானாக. 4. சாயமிடுதல், காகிதம், தோல் பதனிடுதலில்.
09. சங்கிலித் தொடராக்கத்திற்கான நிபந்தனைகள் யாவை?
1. இணைதிறன் இரண்டு அதற்கு அதிகமாக இருக்கவேண்டும். 2. சுய பிணைப்பை ஏற்படுத்தும் திறன். 3. சுய பிணைப்பு வலிமையானதாக இருக்க வேண்டும். 4. மற்ற மூலக்கூறுகளுடன் வேதிமந்தத் தன்மை கொண்டிருக்க வேண்டும்.
10. சிலிக்கோன்களின் பயன்கள் யாவை?
1. உயவுப்பொருளாக. 2. நீர்வெறுக்கும் ஆடைகள் தயாரிக்க. 3. மின்காப்பு பொருளாக. 4. பெயிண்ட் எனாமல் தயாரிக்க.
11. போரான் நைட்ரைடு எவ்வாறு தயாரிப்பாய்?
B(OH)₃ + NH₃ —(800-1200K)→ BN (போரான் நைட்ரைடு) + 3H₂O
12. பிஷர் ட்ரோப் முறையினை எழுதுக.
nCO + 2nH₂ —(500-700K, <50 atm)→ C_nH₂n + nH₂O (அல்கீன்)
13. CO ஒரு ஒடுக்கும் காரணி - ஒரு எடுத்துக்காட்டுடன் இக்கூற்றை நிறுவுக.
Fe₂O₃ + 3CO → 2Fe + 3CO₂
14. உதாரணம் தருக: (அ) ஐகோசாஜன், (ஆ) டெட்ராஜன், (இ) நிக்டோஜன், (ஈ) சால்கோஜன்.
(அ) ஐகோசாஜன் - போரான்
(ஆ) டெட்ராஜன் - கார்பன்
(இ) நிக்டோஜன் - நைட்ரஜன்
(ஈ) சால்கோஜன் - ஆக்சிஜன்.
(ஆ) டெட்ராஜன் - கார்பன்
(இ) நிக்டோஜன் - நைட்ரஜன்
(ஈ) சால்கோஜன் - ஆக்சிஜன்.
03. P-தொகுதி தனிமங்கள்-II
01. சிவப்பு பாஸ்பரஸ் வெண்பாஸ்பரஸ் வேறுபடுத்துக.
| வ.எண் | வெண்பாஸ்பரஸ் | சிவப்பு பாஸ்பரஸ் |
|---|---|---|
| 1 | விஷத் தன்மையுடையது | விஷத் தன்மையற்றது |
| 2 | நின்றொளிர்தலைக் காட்டும் | நின்றொளிர்தலைக் காட்டாது |
| 3 | உள்ளிப்பூண்டின் மணமுடையது | மணமற்றது |
| 4 | தானாக பற்றி எரியும் | தானாக எரியாது |
02. ஹோல்ம்ஸ் முன்னறிவிப்பான் (அ) புகைத்திரை என்றால் என்ன?
1. கால்சியம் பாஸ்பைடு மற்றும் கால்சியம் கார்பைடு கலவை ஒரு துளையிடப்பட்ட கலனில் எடுத்துக்கொள்ளப்பட்டு கடலில் வீசியெறியப்படுகிறது.
2. அசிட்டிலீன் பாஸ்பீன் வாயுக்கலவை உருவாகி தானாக பற்றி எரிகிறது.
3. இக்கலவை கப்பல்களுக்கு சமிக்ஞையாக செயல்படுகிறது.
2. அசிட்டிலீன் பாஸ்பீன் வாயுக்கலவை உருவாகி தானாக பற்றி எரிகிறது.
3. இக்கலவை கப்பல்களுக்கு சமிக்ஞையாக செயல்படுகிறது.
03. ஹேலோஜனிடைச் சேர்மங்கள் என்றால் என்ன? அதன் பண்புகள் யாவை?
ஒவ்வொரு ஹேலோஜனும் மற்றொரு ஹேலோஜனும் வினைபுரிந்து ஹேலோஜனிடைச் சேர்மங்களைத் தருகிறது. எ.கா. CIF₃, IF₇.
பண்புகள்:
1. மைய அணு பெரிய அணுவாக இருக்க வேண்டும்.
2. இரு ஹேலோஜன்களுக்கு இடையே மட்டும் உருவாகிறது.
3. இரண்டிற்கும் மேற்பட்ட வெவ்வேறு ஹேலோஜன்கள் இணைவதில்லை.
பண்புகள்:
1. மைய அணு பெரிய அணுவாக இருக்க வேண்டும்.
2. இரு ஹேலோஜன்களுக்கு இடையே மட்டும் உருவாகிறது.
3. இரண்டிற்கும் மேற்பட்ட வெவ்வேறு ஹேலோஜன்கள் இணைவதில்லை.
04. ஹீலியத்தின் பயன்கள் யாவை?
1. நீர் மூழ்கபவர்களால் பயன்படுத்தப்படுகிறது. 2. மிதக்கும் பலூன்களில். 3. கிரையோஜெனிக் தொழில் நுட்பத்தில். 4. உலோகங்களை ஒட்டும் செயல்முறையில் மந்த வினைபுரியா சூழலை உருவாக்க.
05. கந்தகடையாக்சைடின் வெளுக்கும் பண்பினைக் கூறுக.
SO₂ + 2H₂O → H₂SO₄ + 2[H]
X (நிறமுடையது) + 2[H] → XH₂ (நிறமற்றது, தற்காலிகமானது)
X (நிறமுடையது) + 2[H] → XH₂ (நிறமற்றது, தற்காலிகமானது)
06. கந்தக அமிலத்தின் நீர் நீக்கும் பண்பினைக் கூறுக.
HCOOH + H₂SO₄ → CO + H₂SO₄ · H₂O
07. குளோரினின் வெளுக்கும் பண்பினைக் கூறுக.
HOCl → HCl + [O]
நிறமுள்ள பொருள் + பிறவிநிலை ஆக்ஸிஜன் → நிறமற்ற பொருள் (நிரந்தரமானது)
நிறமுள்ள பொருள் + பிறவிநிலை ஆக்ஸிஜன் → நிறமற்ற பொருள் (நிரந்தரமானது)
08. சலவைத்தூள் எவ்வாறு தயாரிப்பாய்?
Ca(OH)₂ + Cl₂ → CaOCl₂ (சலவைத்தூள்) + H₂O
09. செனான் ஹெக்சாபுளூரைடை நீராற்பகுக்க என்ன கிடைக்கும்?
XeF₆ + 3H₂O → XeO₃ (செனான்ட்ரையாக்சைடு) + 6HF
10. டெக்கான் முறையில் குளோரின் எவ்வாறு தயாரிப்பாய்?.
4HCl + O₂ —(723K / Cu₂Cl₂)→ 2H₂O + 2Cl₂
04. இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள்
01. ஹியும்ரோத்தாரி விதியை எழுதுக.
1. கரைபொருள் கரைப்பான் அணு ஆர வேறுபாடு 15% விட குறைவாக இருக்கவேண்டும். 2. ஒரே இணைதிறன் மற்றும் படிக அமைப்பு. 3. எலக்ட்ரான் கவர்திற வேறுபாடு பூஜ்ஜியத்திற்கு அருகாமையில் இருக்க வேண்டும்.
02. இடைசெருகல் சேர்மங்கள் என்றால் என்ன? பண்புகள் யாவை?
உலக அணிக்கோவை தளத்தில் கார்பன் போன்ற சிறிய தனிமங்கள் இடம்பெறுவதால் உண்டாகும் சேர்மங்கள். எ.கா. TiC.
பண்புகள்:
1. அதிக கடினத்தன்மை, உருகுநிலை.
2. வெப்பம், மின்சாரத்தை கடத்தும்.
3. வலிமை மிக்க ஒடுக்கிகள்.
4. வேதி மந்தத் தன்மை கொண்டவை.
பண்புகள்:
1. அதிக கடினத்தன்மை, உருகுநிலை.
2. வெப்பம், மின்சாரத்தை கடத்தும்.
3. வலிமை மிக்க ஒடுக்கிகள்.
4. வேதி மந்தத் தன்மை கொண்டவை.
03. லாந்தனைடு குறுக்கம் என்றால் என்ன? அதன் விளைவுகள் யாவை?
சீரியம் முதல் லுட்டீசியம் வரை அணு எண் அதிகரிக்க அணு ஆரம் குறைகிறது.
விளைவுகள்:
1. சீரித்திலிருந்து லுட்டீசியம் வரை காரத்தன்மை குறைதல்.
2. லாந்தனைடுகள் வேதிப்பண்புகளில் ஒத்துள்ளன.
3. இரண்டாம் மூன்றாம் வரிசை இடைநிலைத் தனிமங்கள் அதிகளவில் ஒத்துள்ளன.
விளைவுகள்:
1. சீரித்திலிருந்து லுட்டீசியம் வரை காரத்தன்மை குறைதல்.
2. லாந்தனைடுகள் வேதிப்பண்புகளில் ஒத்துள்ளன.
3. இரண்டாம் மூன்றாம் வரிசை இடைநிலைத் தனிமங்கள் அதிகளவில் ஒத்துள்ளன.
04. லாந்தனைடுகள் ஆக்டினைடுகளை வேறுபடுத்துக.
| வ.எண் | லாந்தனைடுகள் | ஆக்டினைடுகள் |
|---|---|---|
| 1 | வேறுபடுத்துகின்ற எலக்ட்ரான் 4f ஆர்பிட்டாலில் சேர்கிறது. | வேறுபடுத்துகின்ற எலக்ட்ரான் 5f ஆர்பிட்டாலில் சேர்கிறது. |
| 2 | நிறமற்றவை. | நிறமுள்ளவை. |
| 3 | அணைவுச் சேர்மங்களை உருவாக்குவதில்லை. | உருவாக்கும். |
| 4 | ஆக்சோ நேரயனிகளை உருவாக்காது. | உருவாக்கும். |
05. Fe³⁺ அல்லது Fe²⁺ இதில் அதிக நிலைப்புத் தன்மையுடையது எது? ஏன்?
Fe³⁺ [Ar] 3d⁵ (சரிபாதி நிரம்பிய ஆர்பிட்டால் என்பதால் அதிக நிலைப்புத்தன்மை உடையது).
Fe²⁺ [Ar] 3d⁶ (பகுதியளவு நிரம்பிய ஆர்பிட்டால்).
Fe²⁺ [Ar] 3d⁶ (பகுதியளவு நிரம்பிய ஆர்பிட்டால்).
06. குரோமைல்குளோரைடு சோதனையினை எழுதுக.
K₂Cr₂O₇ + 4NaCl + 6H₂SO₄ → 2KHSO₄ + 4NaHSO₄ + 2CrO₂Cl₂ + 3H₂O (குரோமைல்குளோரைடு சிவப்பு புகை)
05. അണൈവു வேதியியல்
01. அணைவுச்சேர்மங்கள் இரட்டை உப்புக்கள் வேறுபடுத்துக.
| வ.எண் | இரட்டை உப்பு | அணைவுச் சேர்மம் |
|---|---|---|
| 1 | உட்கூறு எளிய அயனிகளாக முற்றிலும் பிரிகையடையும். | எளிய அயனி, அணைவு அயனிகளாக பிரிகையடைகிறது. |
| 2 | தனித்தன்மையை இழக்கின்றன. | இழப்பதில்லை. |
| 3 | எ.கா. பொட்டாஷ் படிகாரம். | பொட்டாசியம் பெர்ரோ சயனைடு. |
02. வெர்னர் கொள்கையின் முக்கிய கருத்துக்கள் யாவை?
1. முதன்மை இணைதிறன் மற்றும் இரண்டாம்நிலை இணைதிறன் என இரண்டு வகை உண்டு.
2. முதன்மை இணைதிறன் ஆக்ஸிஜனேற்ற எண்ணையும், இரண்டாம்நிலை இணைதிறன் அணைவு எண்ணையும் குறிக்கும்.
3. முதன்மை இணைதிறன் திசைப்பண்பற்றது, இரண்டாம்நிலை இணைதிறன் திசைப்பண்புடையது.
2. முதன்மை இணைதிறன் ஆக்ஸிஜனேற்ற எண்ணையும், இரண்டாம்நிலை இணைதிறன் அணைவு எண்ணையும் குறிக்கும்.
3. முதன்மை இணைதிறன் திசைப்பண்பற்றது, இரண்டாம்நிலை இணைதிறன் திசைப்பண்புடையது.
03. அணைவுச் சேர்மங்களின் பயன்கள் யாவை?
1. புற்றுநோயைக் குணப்படுத்த சிஸ் பிளாட்டின் பயன்படுகிறது. 2. இரத்த சிவப்பணுக்களில் நிறமியாக போர்பைரின் அணைவு உள்ளது. 3. பச்சையத்தில் மெக்னீசியம் அணைவு உள்ளது. 4. வைட்டமின் B12-ல் கோபால்ட் உள்ளது.
04. இணைப்பு மாற்றியங்கள் என்றால் என்ன?
இருவழி பிணைப்புறும் ஈனி தன்னிடம் உள்ள வெவ்வேறு வழங்கி அணுக்களின் மூலம் மைய உலோக அயனியுடன் பிணைப்பினை ஏற்படுத்தும் இயல்பு. எ.கா. [Co(NH₃)₅(NO₂)]²⁺
06. திடநிலைமை
01. படிக வடிவமுடைய படிக வடிவமற்ற திடப்பொருட்களை வேறுபடுத்துக.
| வ.எண் | படிகவடிவமுடையவை | படிகவடிவமற்றவை |
|---|---|---|
| 1 | நீண்ட எல்லையில் ஒழுங்குத்தன்மை. | ஒழுங்குத்தன்மையின் எல்லை குறைவு. |
| 2 | குறிப்பிட்ட வடிவமுடையது. | ஒழுங்கற்ற வடிவமுடையது. |
| 3 | திசையொப்பு பண்பற்றவை. | திசையொப்பு பண்புடையவை. |
| 4 | உண்மையான திடப்பொருட்கள். | போலி திடப்பொருட்கள். |
02. ஷாட்கி குறைபாட்டினை விவரி.
1. சம எண்ணிக்கையில் நேர் மற்றும் எதிர் மின் அயனிகள் இல்லாமல் இருப்பது.
2. நேர் மற்றும் எதிர் மின் அயனிகள் ஏறத்தாழ ஒத்த உருவளவு உடையவை.
3. படிக அடர்த்தி குறையும். எ.கா. சோடியம் குளோரைடு.
2. நேர் மற்றும் எதிர் மின் அயனிகள் ஏறத்தாழ ஒத்த உருவளவு உடையவை.
3. படிக அடர்த்தி குறையும். எ.கா. சோடியம் குளோரைடு.
03. பிரங்கல் குறைபாட்டினை விவரி.
1. அயனிகள் இடைசெருகல் நிலையில் அமைந்திருப்பதால் தோன்றுகிறது.
2. உருவளவில் அதிக வேறுபாடுள்ள அயனிகளைக் கொண்ட படிகங்களில் ஏற்படும்.
3. அடர்த்தியை பாதிக்காது. எ.கா. சில்வர்புரோமைடு.
2. உருவளவில் அதிக வேறுபாடுள்ள அயனிகளைக் கொண்ட படிகங்களில் ஏற்படும்.
3. அடர்த்தியை பாதிக்காது. எ.கா. சில்வர்புரோமைடு.
04. பிராக் சமன்பாட்டினை எழுதுக.
nλ = 2d sinθ
07. வேதிவினைவேகவியல்
01. வினைவேகம் வினைவேக மாறிலி வேறுபடுத்துக.
| வ.எண் | வினைவேகம் | வினைவேக மாறிலி |
|---|---|---|
| 1 | வினைபடுபொருள் விளைபொருளாக மாற்றப்படும் வேகம். | விகித மாறிலி. |
| 2 | செறிவு மாற்றத்தால் அளவிடப்படுகிறது. | செறிவு 1 மோல் லி-1 ஆக உள்ளபோது வினைவேகத்திற்கு சமம். |
| 3 | துவக்கச் செறிவினைப் பொறுத்து அமையும். | துவக்கச் செறிவைப் பொறுத்து அமையாது. |
02. போலி முதல்வகை வினை என்றால் என்ன?
ஒரு இரண்டாம்வகை வினையில் ஏதேனும் ஒரு வினைபடுபொருளினை அதிக அளவில் எடுத்துக்கொள்வதன் மூலம் முதல்வகை வினையாக மாற்றியமைக்கப்படும் வினைகள்.
எ.கா. அமில முன்னிலையில் எஸ்டரின் நீராற்பகுப்பு.
எ.கா. அமில முன்னிலையில் எஸ்டரின் நீராற்பகுப்பு.
03. முதல்வகை வினையின் அரைவாழ் காலம் சமன்பாடு.
t₁/₂ = 0.6932 / k (துவக்க செறிவைச் சார்ந்து அமையாது).
08. அயனிச்சமநிலை
01. லூயி அமிலம் லூயி காரம் வேறுபடுத்துக.
| லூயி அமிலம் | லூயி காரம் |
|---|---|
| எலக்ட்ரான் குறை மூலக்கூறுகள். | எலக்ட்ரான் இரட்டையைப் பெற்றுள்ள மூலக்கூறுகள். |
| அனைத்து உலோக அயனிகள். | அனைத்து எதிரயனிகள். |
02. பொதுஅயனி விளைவினைக் கூறுக.
வலிமை குறைந்த அமிலத்தின் உப்பினை அதே அமிலத்துடன் சேர்க்கும்போது அந்த அமிலத்தின் பிரிகை வீதம் மேலும் குறைகிறது. எ.கா. அசிட்டிக் அமிலம் + சோடியம் அசிட்டேட்.
03. தாங்கல் கரைசல் என்றால் என்ன?
சிறிதளவே அமிலம் அல்லது காரத்தைச் சேர்க்கும்போது தன் pH மதிப்பில் மாற்றத்தை ஏற்படுத்தாத கரைசல் தாங்கல் கரைசல் ஆகும்.
எ.கா. அமிலத் தாங்கல்: அசிட்டிக் அமிலம் + சோடியம் அசிட்டேட்.
எ.கா. அமிலத் தாங்கல்: அசிட்டிக் அமிலம் + சோடியம் அசிட்டேட்.
09. மின்வேதியியல்
01. கோல்ராஷ் விதியைக் கூறுக.
அளவிலா நீர்த்தலில் ஒரு மின்பகுளியின் வரம்புநிலை மோலார் கடத்துதிறன் மதிப்பானது அதன் பகுதிக்கூறு அயனிகளின் வரம்புநிலை மோலார் கடத்துதிறன்களின் கூடுதலுக்கு சமம்.
02. பாரடே மின்னாற்பகுப்பு முதல் விதி யாது?
மின்முனையில் விடுவிக்கப்படும் பொருளின் நிறையானது (m) அதன் வழியே பாயும் மின்னூட்டத்திற்கு (q = It) நேர்விகிதத்திலிருக்கும். m = ZIt
03. நெர்ன்ஸ்ட் சமன்பாடு எழுதுக.
E_cell = E°_cell - (0.0591 / n) log [விளைபொருள்] / [வினைபடுபொருள்]
10. புறப்பரப்பு வேதியியல்
01. இயற்பியல் மற்றும் வேதியியல் புறப்பரப்பு கவர்தலை வேறுபடுத்துக.
| வேதிப்புறப்பரப்பு கவர்தல் | இயற்புறப்பரப்பு கவர்தல் |
|---|---|
| மெதுவாக நிகழ்கிறது. | கணப்பொழுதில் நிகழ்கிறது. |
| அதிக தேர்ந்த செயல்முறை. | தேர்ந்த செயல்முறையல்ல. |
| ஒற்றை அடுக்கு உருவாகிறது. | பல அடுக்குகள் உருவாகிறது. |
02. டிண்டால் விளைவு மற்றும் பிரௌனியன் இயக்கம் என்றால் என்ன?
டிண்டால் விளைவு: கூழ்மத் துகள்கள் வழியே ஒளி பயணிக்கும்போது ஒளிக்கற்றை சிதறடிக்கப்பட்டு ஒளிரும் பாதை தோன்றும் நிகழ்வு.
பிரௌனியன் இயக்கம்: கூழ்மத் துகள்களின் தாறுமாறான சீரற்ற தொடர் இயக்கம்.
பிரௌனியன் இயக்கம்: கூழ்மத் துகள்களின் தாறுமாறான சீரற்ற தொடர் இயக்கம்.
11. ஹைட்ராக்சி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள்
01. லூகாஸ் சோதனையை எழுதுக.
ஆல்கஹால்களுடன் நீரற்ற ZnCl₂ + அடர் HCl சேர்க்கப்படும் போது:
1. மூவிணைய ஆல்கஹால் - உடனடி கலங்கல் தன்மை.
2. ஈரிணைய ஆல்கஹால் - 5-10 நிமிடங்களில் மெதுவான கலங்கல் தன்மை.
3. ஓரிணைய ஆல்கஹால் - அறை வெப்பநிலையில் வினை இல்லை.
1. மூவிணைய ஆல்கஹால் - உடனடி கலங்கல் தன்மை.
2. ஈரிணைய ஆல்கஹால் - 5-10 நிமிடங்களில் மெதுவான கலங்கல் தன்மை.
3. ஓரிணைய ஆல்கஹால் - அறை வெப்பநிலையில் வினை இல்லை.
02. கோல்ப் வினையை எழுதுக.
பீனால் சோடியம் ஹைட்ராக்சைடுடன் வினைபுரிந்து சோடியம் பீனாக்சைடு உருவாகிறது. இது CO₂ உடன் 400K, 4-7 bar அழுத்தத்தில் சாலிசிலிக் அமிலத்தைத் தருகிறது.
03. ரீமர்-டீமன் வினையினை எழுதுக.
பீனால் குளோரோபார்ம் மற்றும் காரத்துடன் வினைபுரிந்து சாலிசிலால்டிஹைடு உருவாக்குகிறது.
12. கார்பனைல் சேர்மங்கள் மற்றும் கார்பாக்சிலிக் அமிலங்கள்
01. யூரோட்ரோபின் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? அதன் பயன் யாது?
பார்மால்டிஹைடு அம்மோனியாவுடன் வினைபுரிந்து யூரோட்ரோபினைத் தருகிறது.
6HCHO + 4NH₃ → (CH₂)₆N₄ + 6H₂O
பயன்: சிறுநீரக தொற்று நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது.
6HCHO + 4NH₃ → (CH₂)₆N₄ + 6H₂O
பயன்: சிறுநீரக தொற்று நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது.
02. ரோசன்முன்ட் ஒடுக்க வினையினை எழுதுக.
CH₃COCl + H₂ —(Pd / BaSO₄)→ CH₃CHO + HCl
03. கன்னிசாரோ வினையை எழுதுக.
α-ஹைட்ரஜன் இல்லாத ஆல்டிஹைடுகள் (எ.கா. பென்சால்டிஹைடு) 50% NaOH உடன் சுய ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினைக்கு உட்பட்டு ஆல்கஹால் மற்றும் அமில உப்பைத் தரும்.
13. கரிமநைட்ரஜன் சேர்மங்கள்
01. கார்பைலமீன் சோதனை எழுதுக.
ஓரிணைய அமீன்கள் குளோரோபார்ம் மற்றும் KOH உடன் வெப்பப்படுத்தும் போது அருவருப்பான மணமுடைய ஐசோசயனைடைத் தரும்.
C₂H₅NH₂ + CHCl₃ + 3KOH → C₂H₅NC + 3KCl + 3H₂O
C₂H₅NH₂ + CHCl₃ + 3KOH → C₂H₅NC + 3KCl + 3H₂O
02. கடுகுஎண்ணெய் வினையினை எழுதுக.
மெத்தில் அமீன் CS₂ மற்றும் HgCl₂ உடன் வினைபுரிந்து கடுகு எண்ணெயின் மணமுடைய மெத்தில் ஐசோதயோசயனேட்டைத் தருகிறது.
14. உயிரியல் மூலக்கூறுகள்
01. மியூட்டா சுழற்சி என்றால் என்ன?
α-D குளுக்கோஸ் மற்றும் β-D குளுக்கோஸ் ஆகியன திறந்த சங்கிலி அமைப்பின் வழியாக மெதுவாக ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாற்றமடையும் சமநிலை நிகழ்வு.
02. டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏ வேறுபடுத்துக.
| பண்பு | டி.என்.ஏ | ஆர்.என்.ஏ |
|---|---|---|
| சர்க்கரை | டீ ஆக்ஸிரிபோஸ் | ரிபோஸ் சர்க்கரை |
| காரங்கள் | A, T, G, C | A, U, G, C |
| இழை | இரட்டை இழை | ஒற்றை இழை |
03. சுவிட்டர் அயனி என்றால் என்ன?
அமினோ அமிலங்களில் உள்ள அமிலத் தொகுதியும் காரத் தொகுதியும் ஒரே மூலக்கூறில் உள் மூலக்கூறு புரோட்டான் மாற்றத்தால் நேர் மற்றும் எதிர் மின்சுமைகளை ஒரே நேரத்தில் பெற்று நடுநிலையாக இருக்கும் அமைப்பு.
15. அன்றாட வாழ்வில் வேதியியல்
01. புரை தடுப்பான் கிருமி நாசினி வேறுபடுத்துக.
| புரைதடுப்பான் | கிருமி நாசினி |
|---|---|
| உயிருள்ள செல்கள் (தோல்) மீது பயன்படுத்தப்படும். | உயிரற்ற பொருட்கள் (தரை) மீது பயன்படுத்தப்படும். |
| எ.கா. ஹைட்ரஜன் பெராக்சைடு | எ.கா. குளோரின் |
02. இரப்பர் உரனூட்டல் (வல்கனையாக்கல்) என்றால் என்ன?
இயற்கை இரப்பரை 3-5% சல்பருடன் சேர்த்து 100-150°C வெப்பநிலையில் வெப்பப்படுத்தும் போது டைசல்பைடு குறுக்கு பிணைப்புகள் உருவாகி இரப்பரின் வலிமை அதிகரிக்கிறது.
03. தொகுப்பு பலபடிகள் தயாரித்தல்:
டெப்லான்: டெட்ராபுளூரோஎத்திலீனை வெப்பப்படுத்தும் போது கிடைக்கிறது.
பியூனா-S: பியூட்டா 1,3-டையீன் மற்றும் ஸ்டைரீன் பலபடியாக்கல் மூலம் கிடைக்கிறது.
பியூனா-S: பியூட்டா 1,3-டையீன் மற்றும் ஸ்டைரீன் பலபடியாக்கல் மூலம் கிடைக்கிறது.