வேண்டுகோள் விண்ணப்பம்
அனுப்பதல்:
பெறுதல்:
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்,
தமிழக முதல்வர்-தனிப்பிரிவு, தலைமைச் செயலகம், சென்னை 600009
பொருள்: 2021- சட்டமன்ற தேர்தல் - திராவிடமுன்னேற்றக் கழகம் தேர்தல் வாக்குறுதி - பெண்கள் இட ஒதுக்கீடு 30 விழுக்காட்டில் இருந்து 40 விழுக்காடாக உயர்த்துவது தொடர்பாக,
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம்,
2021 சட்டமன்ற தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளதற்கு முதற்கண் தங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தாங்கள் 2021ம் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வானையம் (TNPSC) மற்றும் அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு தனியாக இட ஒதுக்கீடு 30% லிருந்து 40% ஆக உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளீர்கள். அதற்கு நான் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால் தற்பொழுது உள்ள நடைமுறையில் பெண்களுக்கான 30% இட ஒதுக்கீடு இல்லாமல் பொது இட ஒதுக்கீடு (0pen Quota) மற்றும் இன வாரியான பொது இட ஒதுக்கீட்டையும் (BC, MBC, SC, ST) கணக்கில் எடுத்துக்கொண்டால் பெண்கள் 50%க்கும் கூடுதலான இடங்களை பெற்று வருகிறார்கள் என்பதே உண்மைநிலையாகும்.
இந்நிலையில் மேலும் கூடுதலாக 10% சேர்த்து 40% இட ஒதுக்கீடு செய்யும் போது ஒட்டுமொத்தமாக சேர்த்து சுமார் 65% முதல் 75% இடங்களை பெண்கள் பெறக்கூடும். இதனால் அரசு வேலை பெறுவதில் ஆண்கள் வெகுவாக பாதிக்கும் சூழ்நிலை உருவாகும். ஆகவே தாங்கள் அருள்கூர்ந்து ஆண்கள் மற்றும் பெண்கள் பாதிக்காத வகையில் இருபிரிவினருக்கும் தலா 50% இட ஒதுக்கீடு செய்தீர்களேயானால் நல்ல பலன் கிடைக்கும்.
ஆகவே தாங்கள் அருள்கூர்ந்து அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்குகான இட ஒதுக்கீட்டு முறையை நன்கு கனிவுடன் பரீசீலனை செய்து ஆண்கள் வெகுவாக பாதிக்காத வகையில் நடைமுறை படுத்த வேண்டுமாய் தங்களை இருகரம் கூப்பி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி
இப்படிக்கு
TNPSC மற்றும் அரசு வேலைக்கு படித்துவரும்.ஆண்கள் அனைவரும் தமிழக முதல்வர் தனிப்பிரிவுக்கு தங்களுடைய முகவரியுடன் இ-மெயில் மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நண்பர்கள் அனைவருக்கும் இதனை கண்டிப்பாக தெரிவிக்கவும். CM MAIL ID: cmbclplinc@tn.gov.in.cmcell@tn.gov.in