-->

Type something and hit enter

author photo
By On
பொது அறிவு - இந்திய அரசியல்‌ - அரசியல்‌ அமைப்பின்‌ முகப்புரை மற்றும்‌ சிறப்பியல்புகள்‌

1. இந்திய மக்களுக்கு முழு உரிமையையும்‌ இந்திய வழங்குகியுள்ளது. -
அரசியலமைப்பு

2. சட்ட அறிமுகமே இந்திய அரசியலமைப்புச்‌ சட்டத்தின்‌ ------ ஆகும்‌. -
முகப்புரை

3 வடட்டடடடட என்று இந்திய அரசியலமைப்புச்‌ சட்டத்தின்‌ முகப்புரை கூறுகிறது. -
மக்களே அதிகாரத்தின்‌ தோற்றுவாய்‌

4. இந்திய அரசின்‌ தேசிய குறிக்கோள்களுள்‌ ஒன்று --------- ஆகும்‌. -மதச்சார்பின்மை

5. பாராளுமன்ற அரசு முறையை டட என்றும்‌ அழைப்பர்‌. - பொறுப்பு அரசு
அல்லது காபினேட்‌ அரசு

6. அடிப்படை உரிமைகளின்‌ ஆறு வகைகள்‌ - 1.சமத்துவ உரிமை, 2.சுதந்திர உரிமை, 3.சுரண்டலிலிருந்து பாதுகாக்கும்‌ உரிமை, 4.மதச்சுதந்திர உரிமை, 5.பண்பாட்டு மற்றும்‌ கல்வி உரிமை, 6.அரசியலமைப்பின்படி தீர்வுகாணும்‌ உரிமை

7. சட்டங்கள்‌ இயற்றும்‌ போதும்‌, அவற்றை நடைமுறைப்படுத்தும்‌ போதும்‌ பின்பற்ற
வேண்டிய வழிகாட்டுதல்கள்‌ ______ எனப்படும்‌. - அரசு நெறிமுறைக்கோட்பாடுகள்‌

8. எந்தவொரு சட்டத்தை இயற்றும்போதும்‌ அரசு கண்டிப்பாக_____
கடைபிடிக்க வேண்டும்‌. - அரசு நெறிமுறைக்கோட்பாடுகள்‌

9. அரசியல்‌ அமைப்பு சட்டத்தில்‌ வயதுவந்தோர்‌ வாக்குரிமைத்‌ திட்டத்தின்படி, சாதி,
நிறம்‌, மதம்‌, பாலினம்‌, படித்தோர்‌, சொத்து உடைமை ஆகிய வேறுபாடுகளின்றி ______ நிரம்பிய அனைவரும்‌ தேர்தலில்‌ வாக்களிக்க உறுதி செய்யப்பட்டுள்ளது. - 18
வயது

10. அரசு நெறிமுறைக்‌ கோட்பாடுகளை -------- வகைகளாக பிரிக்கலாம்‌. - நான்கு
(1.சமூக நலனை அடைய வழிகாட்டும்‌ கோட்பாடுகள்‌, 2.காந்தியக்‌ கோட்பாடுகளைச்‌
செயல்படுத்த வழிகாட்டும்‌ கோட்பாடுகள்‌, 3.பன்னாட்டுக்‌ கோட்பாடுகள்‌, 4.பல்வகையான
நெறிக்‌ கோட்பாடுகள்‌)

11. 1929ஆம்‌ ஆண்டு லாகூறில்‌ நடைபெற்ற இந்தியதேசியக்‌ காங்கிரஸ்‌ மாநாட்டு
தீர்மானத்தின்படி, பூரண சுயராஜ்யம்‌ ட ம்‌ நாள்‌ கொண்டாடப்பட்டது. - 1930ம்‌
ஆண்டு ஜனவரி 26

12. இந்திய அரசு எந்தவொரு ட சார்ந்ததல்ல. - மதத்தையும்‌
13. சமத்துவ உரிமையின்‌ படி டட - சட்டத்தின்‌ முன்‌ அனைவரும்‌ சமம்‌
14. தனிமனிதனின்‌ முழு பாதுகாப்பு, முன்னேற்றத்திற்கு அவசியமாகிறது. -

அடிப்படை உரிமைகள்‌

15. இந்திய அரசியல்‌ அமைப்புச்‌ சட்டத்தில்‌ இந்தியக்‌ குடிமக்கள்‌ ஆற்றவேண்டிய
பல்வேறு கடமைகள்‌ அடங்கியுள்ளன, இக்கடமைகள்‌ -------- எனப்படும்‌. -
அடிப்படைக்‌ கடமைகள்‌

பொது அறிவு - இந்திய அரசியல்‌ - அடிப்படை உரிமைகள்‌
1. அடிப்படை உரிமைகள்‌ _______ தலைப்புகளில்‌ பிரிக்கப்பட்டுள்ளது. - 6

2. சிறுபான்மையினர்‌ கல்வி நிறுவனங்களை அனுமதிக்கும்‌ அரசியலமைப்புச்‌
சட்டப்பிரிவு - 30

3. அரசியலமைப்புச்‌ சட்டப்பிரிவு 19 குடிமக்களுக்கு -------- உரிமைகளை
வழங்குகிறது. - 6

4. இந்திய அரசியலமைப்பு மூன்றாவது பகுதியில்‌, அரசியலமைப்பு சட்ட பிரிவு 12,
முதல்‌ 35 வரை உள்ள பிரிவுகள்‌ சில உரிமைகளை அடிப்படை உரிமைகளாக
அங்கீகரிக்கிறது. அவை  

1.சமத்துவ உரிமை (சரத்து 14-18), 

2.சுதந்திர உரிமை (சரத்து 19-22),
 
3.சுரண்டலுக்கெதிரான உரிமை (சரத்து 23-24), 

4.சமய சுதந்திர உரிமை (சரத்து 25-28),

5.பண்பாடு மற்றும்‌ கல்வி உரிமை (சரத்து 29-30),

6.அரசியலமைப்பிற்கு தீர்வு காணும்‌ உரிமை (சரத்து 32)

5. இந்திய ஒரு _______ நாடு. - சமயசார்பற்ற

6. இந்திய அரசியலமைப்பு சட்டம்‌, --------------- தனி மனித வாழ்வு மற்றும்‌ தனி
மனித சுதந்திரத்தை உறுதி செய்கிறது. - பிரிவு - 21

7. இந்திய அரசியலமைப்பு --------- குடிமக்களின்‌ அடிப்படை உரிமைகள்‌ மீறப்படும்போது, நேரிடையாக மக்கள்‌ உச்ச நீதிமன்றத்தில்‌ வழக்குகள்‌ தொடர்ந்து
பாதுகாப்பினைப்‌ பெற உதவுகிறது. - பிரிவு 32.

8.______இல்‌ மதத்தைப்‌ பின்பற்றி, பரப்புவதற்கான சுதந்திரம்‌ உண்டு என்று உத்தரவாதம்‌ அளிக்கிறது. - பிரிவு 25

9. ________2009-ல்‌ இலவச கட்டாயக்‌ கல்வி 6 வயதிலிருந்து 14
வயதிற்குட்பட்டவர்களுக்கு அளிக்க சட்டம்‌ வெளியிட்டுள்ளது. - பிரிவு 21-

10. அரசியலமைப்பு ----------- ன்‌ படி சிறுபான்மையினர்‌ மொழி, எழுத்து
பண்பாட்டைப்‌ பாதுகாக்கிறது. - பிரிவு 29

11. இந்திய அரசியலமைப்பு _______ சுதந்திர உரிமைக்கு உத்திரவாதம்‌, அதன்‌ குடிமக்களுக்கு அளிக்கப்பட வேண்டும்‌ என்று அறிவிக்கிறது. - பிரிவு 19

12. இந்திய அரசியலமைப்பு சட்டப்‌ பிரிவு ------ ன்‌ படி ஒருவரைத்‌ தகுந்த
காரணமின்றி கைது செய்வதற்கு தடை விதிக்கிறது. - 20

13. இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு --------- -ன்‌ படி எவரையும்‌
விசாரணையின்றி கைது செய்யக்கூடாது. - 22.

14. ஒருவரை கட்டாயமாகவோ அல்லது ஊதியமின்றியா வேலை செய்ய வைத்தல்‌
கூடாது என்று இந்திய அரசியலமைப்பு ----- கூறுகிறது. - 23வது பிரிவு

15.___________மதச்சார்பான நிறுவனங்களை நிறுவவும்‌, நடத்தவும்‌, தர்மப்பணிகளை
மேற்கொள்ளவும்‌ உறுதியளிக்கிறது. - பிரிவு - 26

பொது அறிவு - இந்திய அரசியல்‌ - மனித உரிமை சாசனம்‌

1. சமுதாயத்தில்‌ மனிதன்‌ சுமூகமாக வாழத்‌ தேவையான நிலையை ______ என அழைக்கிறோம்‌. - உரிமை

2. ஒவ்வொரு ஆண்டும்‌, ______ஆம்‌ நாள்‌ ஐ.நா. தினமாகக்‌
கொண்டாடப்படுகிறது. - அக்டோபர்‌ 24

3.______ஆம்‌ நாள்‌ ஐக்கிய நாடுகளின்‌ சபை தோற்றுவிக்கப்பட்டது. - 1945ம்‌
ஆண்டு அக்டோபர்‌ 24

4. ஐ.நா சபையின்‌ முக்கியமான கோட்பாடுகளில்‌ ஒன்று --------ஆகும்‌. - மனித உரிமைகளை பாதுகாப்பதும்‌, அதனை மதிப்புறச்செய்வதும்‌

5. ஐ.நா. சபையின்‌ மனித உரிமைகள்‌ குழு மனித உரிமைகள்‌ மசோதாவைத்‌ தயாரித்து வழங்கியது. இம்மசோதா ஐக்கிய நாடுகள்‌ பொதுச்‌ சபையில்‌______
ஆம்‌ நாள்‌ நிறைவேற்றப்பட்டது. - 1948 ஆம்‌ ஆண்டு டிசம்பர்‌ 10

6. மனித உரிமைகள்‌ மசோதாவே _____ என்று அழைக்கப்படுகிறது. -
அனைத்துலக மனித உரிமைகள்‌ பிரகடனம்‌

7. ஒவ்வொரு ஆண்டும்‌ ______ஆம்‌ நாள்‌ மனித உரிமைகள்‌ தினமாகக்‌
கடைப்பிடிக்கப்படுகிறது. - டிசம்பர்‌ 10

8. ______அனைத்துலக மனித உரிமைகள்‌ பிரகடனம்‌, மக்களிடையே உறுதி செய்கிறது. - சமத்துவத்தை

9. அனைத்துலக மனித உரிமைகள்‌ பிரகடனம்‌ சரத்துகளைக்‌ கொண்டது. -30
10. அனைத்துலக மனித உரிமைகள்‌ பிரகடனம்‌ ----------- பகுதிகளாகப்‌ பாகுபாடு செய்யப்பட்டுள்ளது. - இரண்டு

11. அனைத்துலக மனித உரிமைகள்‌ பிரகடனத்தின்‌ இரண்டு பகுதிகள்‌ - 1.
வாழ்வியல்‌ மற்றும்‌ அரசியல்‌ உரிமைகள்‌, 2. பொருளாதாரம்‌, சமூக மற்றும்‌ பண்பாட்டு
உரிமைகள்‌

12. அனைத்துலக மனித உரிமைகள்‌ பிரகடனம்‌, -------.- நாடுகளுக்கும்‌
ஏற்புடையதாகும்‌. - அனைத்து

13. 1966ம்‌ ஆண்டு ஐ.நா.சபை மனித உரிமைகளைப்‌ பாதுகாக்க ----- ஒப்பந்தங்களை உருவாக்கியது. - இரண்டு

14. 1966ம்‌ ஆண்டு ஐ.நா.சபை மனித உரிமைகளைப்‌ பாதுகாக்க உருவாக்கிய இரு ஒப்பந்தங்கள்‌ - 1. அனைத்துலகப்‌ பொருளாதார, சமூக மற்றும்‌ பண்பாட்டு உரிமைகள்‌
ஒப்பந்தம்‌, 2. அனைத்துலக வாழ்வியல்‌ மற்றும்‌ அரசியல்‌ உரிமைகள்‌ 

15._________உலக அளவில்‌ மனித உரிமைப்‌ பாதுகாப்பில்‌ முக்கிய
பங்கினை ஆற்றி வருகிறது. - ஐ.நா.சபை

Click to comment