பொது அறிவு - இந்திய அரசியல் - இந்திய அரசியலமைப்பு
1._______ நாள் டாக்டர். சச்சிதாநந்த சின்கா தலைமையில் அரசியல்
நிர்ணயசபையின் முதல் கூட்டம் நடைபெற்றது. - 1946 டிசம்பர் 9ம் நாள்
2. டாக்டர்.சின்காவிற்குப் பிறகு -------- அரசியல் நிர்ணயசபையின் தலைவராகத்
தேர்ந்தெடுக்கப்பட்டார். - டாக்டர். இராஜேந்திரபிரசாத்
3. இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் -------ஆவார். - டாக்டர்.
இராஜேந்திரபிரசாத்
4. அரசியல் நிர்ணயசபையானது, அரசியலமைப்பு சட்டமியற்றும் பணியை ------அளித்தது. - வரைவுகுழுவிற்கு
5. 1947 ஆகஸ்டு 29ம் நாள் வரைவுக்குழுவின் தலைவராக____ நியமனம்
செய்யப்பட்டார். - டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கார்
6. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சிற்பி ------- ஆவார். - டாக்டர்.அம்பேத்கார்
7. அரசியலமைப்பு நிர்ணய சபை ____ ம் நாள் கடைசியாக கூடியது. - 1950 ஜனவரி 24ம் நாள்
8._______ம் நாளில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.- 1950 ஜனவரி 26
9. அரசியலமைப்பு என்பது ______ அரசியல் முறைகளின் அடிப்படைக்
கோட்பாடுகளுடைய தொகுப்பாகும்
10. அரசியலமைப்புச் சட்டம் இயற்றும் பணி---------நடைபெற்றது. - 2 ஆண்டுகள் 11 மாதங்கள் 18 நாட்கள்
11. இந்திய அரசியல் அமைப்பு ----- பாகங்களை கொண்டது, - 22.
12. இந்திய அரசியல் அமைப்பில் உள்ள அட்டவணைகள் - 12
13. இந்திய அரசியல் அமைப்பு - சரத்துகளை உடையது. - 449
14. அரசியல் அமைப்புச் சட்டத்தின் சிறப்பியல்புகள் - 1.முகப்புரை, 2.இறையாண்மை,
3.மதச்சார்பின்மை, 4.நாடாளுமன்ற மக்களாட்சி அரசு, 5.அடிப்படை உரிமைகள் மற்றும்
கடமைகள், 6.அரசு நெறிமுறைக்கோட்பாடுகள், 7.வயதுவந்தோர் வாக்குரிமை
15. 11 திட்டமிட்டக் கூட்டங்களில் அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றி கலந்துரையாட_______நாட்கள் ஆயிற்று, - 114