-->

Type something and hit enter

author photo
By On

சென்னை, அக். 3-

டி. என். பி. எஸ்.சி., போல, ஆசிரியர் தேர்வு வாரிய கட்டமைப்பை மாற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகா ரிகள் அடங்கிய சீரமைப்பு குழு ஆலோசனை நடத்தி உள்ளது.

அரசு பணிகளுக்கு, டி.என்.பி.எஸ்.சி., என்ற, அரசு பணியாளர் தேர்வாணையம் வழியாக ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

பள்ளி கல்வி துறையில், டி.ஆர்.பி., என்ற ஆசிரியர் தேர்வு வாரியமும், மருத்துவ துறையில், எம்.ஆர். பி., மருத்துவ தேர்வு வாரியமும், தங்கள் துறைக்கான ஆட்களை தேர்வு செய்கின்றன.

பணி நியமனம் மற்றும் போட்டி தேர்வு நடவடிக்கைகளில் அடிக்கடி புகார்கள் வருகின்றன. இதன் காரணமாக, டி.ஆர்.பி.,யை கலைக்கலாம் என்று ஒரு தரப்பும்; அதை சீரமைக்கலாம் என மற்றொரு தரப்பும் கோரிக்கை விடுத்தன.

இதையடுத்து, டி.ஆர். பி.,யை சீரமைக்கும் வகையில், பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமார் தலைமையில், சிறப்பு குழுவை அரசு அமைத்துள்ளது. இக் குழுவின் அவசர ஆலோசனைக் கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது.

அதில், பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமார், டி.ஆர்.பி., தலைவர் லதா, தொழில்நுட்ப கல்வி இதில், டி.ஆர்.பி.,யின் இயக்குனர் லட்சுமிபிரியா,டி.ஆர்.பி., உறுப்பினர் செயலர் பழனிசாமி, உறுப்பினர்கள் உஷாராணி, பொன்னையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

டி.என்.பி.எஸ்.சி. போன்று, நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். டி.ஆர். பி.,யின் ஊழியர் எண்ணிக் கையை அதிகரிக்க வேண்டும். தேர்வு நடத்துவதில், தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை குறைக்க வேண்டும். இணையதள பயன்பாடு மற்றும் நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக ஒரு மாதத்தில், அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய முடிவாகியுள்ளது.

Click to comment