யூடியூப்ல வீடியோ போட்ட கொஞ்ச நேரத்துலயே வியூஸ் அப்படியே நின்னுடுதா? இதுக்கு நாமளே அறியாம பண்ற சில சின்னச் சின்ன தப்புகள்தான் காரணம். இதை எப்படி சரி பண்ணி சேனலை வளர்க்கலாம்னு உங்களுக்கு சொல்றேன் கேட்டுக்கோங்க.

முதல் விஷயமே, நாம ஆசையா போட்ட வீடியோவை எப்படி வந்திருக்குன்னு நாமளே நம்ம போன்ல திரும்பத் திரும்ப பாக்குறதுதான். ஒரே வைஃபை பயன்படுத்துறது, இல்லனா ஹாட்ஸ்பாட் ஆன் பண்ணி வேற போன்ல பாக்குறது இதெல்லாம் செஞ்சா யூடியூப் அல்காரிதம் ஈஸியா கண்டுபிடிச்சு உங்க வியூஸை அப்படியே முடக்கிடும். அதனால வீடியோ அப்லோட் பண்ணமா, அதை அப்படியே விட்ருங்க.

அடுத்தது, உங்க சேனலுக்குன்னு ஏதாவது ஒரு கண்டென்ட்ட மட்டும் கெட்டியா புடிச்சுக்கோங்க. இன்னைக்கு ஒரு குக்கிங் வீடியோ ட்ரெண்ட் ஆகுதுன்னு அதை போடுறது, நாளைக்கு வ்லாக் போடுறதுன்னு எல்லாத்தையும் கலந்து மிக்ஸரா கொடுத்தீங்கன்னா,

யூடியூப்க்கு உங்க வீடியோவை யார்கிட்ட கொண்டு போய் சேர்க்கிறதுன்னே தெரியாம கன்பியூஸ் ஆகிடும். அதனால உங்க சேனலோட கேட்டகிரிய எந்த காரணத்துக்காகவும் மாத்தாதீங்க.

வியூஸ் நல்லா வரணும்னா நீங்க போடுற வீடியோ குறைஞ்சது எட்டு நிமிஷத்துக்கு மேல இருக்குற மாதிரி பாத்துக்கோங்க. இது உங்க சேனலோட வாட்ச் டைமை கணிசமா உயர்த்தும். அதே மாதிரி, வீடியோவோட தம்ப்நெயிலைப் பார்த்த உடனே யாருக்கா இருந்தாலும் கிளிக் பண்ண தோணணும். மக்கள் உள்ள வர்றதுக்காக கொஞ்சம் அட்ராக்டிவா தம்ப்நெயில் வச்சாலும், உள்ளே வந்தவங்களுக்கு ஏமாற்றம் தராத மாதிரி அவங்க எதிர்பார்த்த சரியான கண்டென்ட்ட கொடுக்க வேண்டியது ரொம்ப ரொம்ப முக்கியம். எப்பவுமே தொடர்ந்து தரமான வீடியோக்களை கொடுத்துட்டே இருங்க.

இன்னொரு முக்கியமான விஷயம், நிறைய பேர் வீடியோல வியூஸ் வரலைன்னா உடனே அதை டெலீட் பண்ணிட்டு மறுபடியும் புதுசா அப்லோட் பண்ணுவாங்க. இல்லனா, வேற கண்டென்ட் மாத்தலாம்னு பழைய வீடியோக்கள் எல்லாத்தையும் ஒரே நாள்ல பல்க்கா டெலீட் பண்ணிடுவாங்க. இந்த மாதிரி செஞ்சா சேனலோட ஒட்டுமொத்த ரீச்சும் மொத்தமா காலி ஆகிடும்.

பழைய வீடியோக்களை எடுக்கணும்னு உங்களுக்கு தோணுச்சுன்னா, மாசத்துக்கு ஒன்னு ரெண்டுன்னு ரொம்ப மெதுவா அன்லிஸ்டட்ல மாத்துங்க. பேஸ்புக், இன்ஸ்டாகிராம்ல வைரல் ஆகுற வீடியோவை அப்படியே எந்த எடிட்டிங்கும் இல்லாம தூக்கிப் போடுறது இன்னொரு பெரிய தப்பு. உங்களுக்கு அந்த மாதிரி வீடியோக்கள் போடணும்னா, அதுல உங்க சொந்த வாய்ஸ் ஓவர் கொடுத்து, உங்களோட உழைப்பை போட்டு நல்லா எடிட் பண்ணி மாத்திப் போடுங்க. அப்போதான் சேனல் மானிடைஸ் ஆகும்.

இதுக்கு இடையில காப்பிரைட் ஸ்ட்ரைக், கம்யூனிட்டி ஸ்ட்ரைக் எதுவும் வராம ரொம்ப கவனமா பாத்துக்கோங்க. ஏன்னா ஒரு முறை ஸ்ட்ரைக் வந்துடுச்சுன்னா சேனல் திரும்பவும் பழைய நிலைமைக்கு வர மாசக்கணக்காகும். கடைசியா நான் என்ன செட்டப் யூஸ் பண்றேன்னு சின்னதா சொல்லிடுறேன். நான் இப்போ வீடியோ எடுக்க ஆப்ஸ்பாட் (Obsbot) வெப்கேமும், மொபைல் மற்றும் கேமரா ரெண்டுக்கும் செட் ஆகுற மாதிரி நீளமாக்கிக்கக்கூடிய உலாஞ்சி (Ulanzi) ட்ரைபாடும் யூஸ் பண்றேன். இது ரொம்பவே கம்ஃபர்ட்டா இருக்கு. இந்த சின்ன சின்ன விஷயங்களை மாத்திக்கிட்டாலே உங்க சேனல் நல்லா வளர ஆரம்பிச்சிடும், கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க!