தமிழ் மொழித்தாளில் 45 மதிப்பெண் எடுத்தால் மட்டுமே பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம்?
சென்னை, செப். 25 டிஎன்பிஎஸ்சி தேர்வில் விரைவில் அறிவிப்பு வெளியாகிறது புதிய முறையை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அரசு துறைகளில் குரூப் 1, குரூப் 2. குரூப் 4 உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வை ஒவ்வொருஆண்டும் நடத்தி வருகிறது. கொரோனா பாதிப்பால் காலியிடங்களுக்கான தேர்வுகளை நடத்துவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதை அடுத்து தேர்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் டிஎன்பிஎஸ்சி மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகு தியாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் தேர்வு எழுதுபவர்களுக்கான புதிய அறிவுரைகள் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் தேர்வு முறைகளில் மேலும் பல்வேறு புதிய மாற்றங்களை கொண்டுவர டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் அண்மையில் டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.
இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. அதாவது தமிழகத்தில் உள்ள அரசுப் பணிகளில் பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் கடந்த சில ஆண்டுகளாக சேர்ந்து வருகின்றனர். இதனால் தமிழர்களின் வேலை வாய்ப்பு பறிபோவதாக பல்வேறு தரப்பிலும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.
எனவே. தமிழக அரசுத்துறை மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்களுக்கு நடத்தப்படும் அனைத்து போட்டித்தேர்வுகளிலும் தமிழ்மொழி பாடத்தாள் தகுதித்தேர்வாக கட்டாயமாக்கப்ப டும் என்று சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது. அதன்படி டிஎன்பிஎஸ்சி தேர்வில் புதிய மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது.
இந்த புதிய முறையில் அனைத்து தேர்வுகளுக்கு முன்பும் தமிழ்மொழித் தாள் தேர்வு முதலில் நடத் தப்படும். அந்தத் தேர் வில் 45 மதிப்பெண்கள் எடுத்து தகுதி பெற்றால் மட்டுமே. பொது தேர்வுக்குரிய விடைத்தாள்களை திருத்த பரிசீலிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பெண்களுக்கான நியமனங்களில் 40 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணை வெளியான உடன், அதையும் நடைமுறைப்படுத்தவும் டி.என்.பி.எஸ்.சி. முடிவுசெய்துள்ளது. அர சுத்துறைகளில் குரூப் 1, 2, 4 தேர்வுகள் மூலம் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்புவதற்கு புதிய திருத்தங்கள் மேற்கொள்வதற்கு கருத்துருக்கள் தேர்வாணையத்தின் மூலம் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இவற்றுக்கான அனுமதிகள் அரசிடமிருந்து கிடைத்தவுடன், அக்டோ பர்மாதம் துறைவாரியாக உள்ள காலிப்பணியிடங் களின் பட்டியலுடன், தேர்வு குறித்த அறிவிப்புகளும், தேர்வு நடைபெறும் தேதிகளும் வெளியிடப்பட வாய்ப்புள்ள தாக தகவல்கள் வெளியாகி உள்ளது.