-->

Type something and hit enter

author photo
By On

இன்பம் பெருக்கி (காமவர்த்தநி)

Aphrodisiac

கலவி இன்பத்தைப் பெருக்கும் பொருள். Drug that stimulates excitement.

முக்கிய மூலிகைகள்


பூனைக்காலி வித்து 

மதனகாமப் பூ

வெங்காயம்

வெற்றிலை

அமுக்கிராக் கிழங்கு

உழுந்து

வாதுமைப் பருப்பு 

வெண்டை

தண்ணீர்விட்டான் கிழங்கு 

நிலப் பூசணி

ஓரிதழ்த் தாமரை 

சீந்தில்

உபயோகிக்கும் முறைகள் 

பூனைக்காலி வித்து :


இதனை எடுத்துப் பொடித்து 500 - 1000 மி. கி. பசுப்பாலில் கலந்து உள்ளெடுக்க ஆண்மை பெருகும். 

மதனகாமப் பூ :


இதனை உலர்த்தி வேறு மருந்துகளுடன் சேர்த் துப் பொடித்துக் காலை மாலை உண்டுவர உடல் வன்மை பெற்று ஆண்மை உண்டாகும்.

வெங்காயம்:


இதனை உலர்த்தி, பொடித்துச் சீனியுடன் கலந்து வேளைக்கு 3-4 கிராம் உண்டுவர ஆண்மை பெருகும். வெங்காயத்தை நெய்யில் அல்லது தேவையான எண்ணெய்யில் பொரித்து உணவுடன் சேர்த்து உண்ண ஆண்மை பெருகும்.

வெற்றிலை :


காமப் பெருக்கை உண்டாக்கும் பொருட்களுடன் வெற்றிலையையும் சேர்த்து உண்டு வந்தால் கலவியில் இச்சை உண்டாகும்.

அமுக்கிராக் கிழங்கு : 


இதன் சூரணம் அல்லது லேகியத்தை உண்டுவர நரம்பு மண்டலம் பலமடைந்து இன்பம் பெருகும்.

உழுந்து:


உழுந்தை மாவாக்கி உணவுப் பண்டங்களாகச் செய்து உண்டுவர உடம்பு வன்மையாகி இன்பம் பெருகும்.

வாதுமைப் பருப்பு (இனிப்பு வகை):


இதனை லேகியங்களில் அல்லது மணப்பாகில் சேர்த்து உண்டுவர உடல் பலமடைந்து ஆண்மை பெருகும்.

வாதுமைப் பருப்பை பதப்படுத்தி பசுப்பாலுடன் சேர்த்து உண்டுவர நரம்பு மண்டலம் விருத்தியடையும்.

வெண்டை :


பிஞ்சு வெண்டைக்காயை எடுத்துச் சமைத்து உண்ணத் தேகம் பலம் பெற்று இன்பம் பெருகும்.

தண்ணீர்விட்டான் கிழங்கு:


இதன் கிழங்குச் சாறு 4 பங்கு

வெண்ணெய் 1 - 10

பசுப்பால் 12

இவற்றை நெய்யாகத் தயாரித்துச் சர்க்கரை, தேன், திற்பலி சேர்த்து உண்ண ஆண்மை பெருகும்.

நிலப்பூசணி :


இதன் பச்சைக் கிழங்குச் சாற்றுடன் பசுப்பால் சம அளவு கூட்டி, சர்க்கரையும் கலந்து 60 -120 மி. லி. வரை காலையில் உண்டுவரத் தேகம் பலம் அடைந்து ஆண்மை பெருகும்.

ஓரிதழ்த் தாமரை :


ஒரு பழகிய மட்பாண்டம் எடுத்து, அதனுள் 700 மி. லி. பசும்பால் விட்டு, வாயை வெள்ளைத் துணியால் மூடி வேடு கட்டவும். பின்பு ஓரிதழ்த் தாமரை மலரையும் அதன் இளம் தளிரையும் தூய்மை யாக்கி 250 கிராம் அளவு வேடு கட்டிய துணியில் வைத்து இன்னொரு மண் சட்டியால் மூடி அடுப் பேற்றி எரிக்கவும். மலரும், இளந் தளிரும் நன்கு வெந்தவுடன் எடுத்து நன்கு உலர வைத்து இடித்துத் தூளாக்கி கண்ணாடிப் பாத்திரத்தில் பத்திரப்படுத்த வும். இத் தூளில் நாள் தோறும் 30 - 50 மி. கிராம் வரை 200 மி.லி. காய்ச்சின பசுப் பாலுடன் கலந்து சாப்பிட்டு வர கலவியில் திருப்தி உண்டாகும்.

சீந்தில் :


சீந்தில் சர்க்கரையை கிருஷ்ண அப்பிரக செந்தூ ரத்துடன் கலந்து கொடுக்க உடலுக்கு ஊட்டம் தந்து விந்து ஊறும்.

Click to comment