அம்ல நாசினி
Antacid
இது இரைப்பையில் (ஆமாசையத்தில்) ஏற்படும் புளிப்புத் தன்மையை ( அமிலத் தன்மை) நீக்கும் பொருள்.
A Substance which neutralizes or counteracts acidity
முக்கிய மூலிகைகள்
மூங்கிலுப்பு
கூகை நீறு
பிரண்டை
அதிமதுரம்
உபயோகிக்கும் முறைகள்
மூங்கிலுப்பு :
இதனை வேறு மருந்துகளுடன் சேர்த்துப் பயன் படுத்தும் போது வயிற்றிலுள்ள புளிப்புத் தன்மை அகலும்.
பிரண்டை உப்பு
பிரண்டையில் இருந்து எடுக்கும் உப்பு ஆமாசைய விரணங்களை ஆற்றும் தன்மை வாய்த்தது.
கூகைநீறு :
வயிற்றுப் புளிப்பு நீங்கும். மலத்தை கட்டும் தன்மை இருப்ப தால் வயிற்றுப் போக்குக்கு உபயோகிக்கலாம்.
குறிப்பு: ஆமாசையத்தில் ஏற்படும் அமிலத் தன்மையைக் குறைப் பதில் சங்கு பஸ்பம் முதன்மை பெற்றுள்ளது. பாஸ்கர லவணமும் உபயோகிக்கலாம்.
அழுகலகற்றி
Antiseptics
உடற்கட்டுகளையும் மற்றைய பொருட்களையும் அழுகவிடாமல் தடுக்கின்ற பொருட்கள் இதுவாகும். Substances which destroy or inhibit the growth of micro - organisms in the living tissues.
முக்கிய மூலிகைகள்
வேம்பு
சந்தனம்
மாசிப்பத்திரி
மஞ்சள்
சாம்பிராணி
சித்திரப்பாலாவி
அரிவாள் மூக்குப்பச்சிலை
புகையிலை
புங்கு வெற்றிலை
ஊமத்தை
உபயோகிக்கும் முறைகள்
வேம்பு:
வேப்பிலையை நீர் விட்டரைத்துப் போட நாட் பட்ட புண்கள், மற்றும் தோலைப் பற்றிய விரணங்கள் குணமடையும். இத்துடன் சிறிது மஞ்சளும் சேர்த்து அரைக்கலாம்.
சந்தனம் ;
முகப்பருவுக்கு சந்தனத்தைப் பசும்பால் விட்டு அரைத்து போடலாம்.
260 மி.லி. வெந்நீரில் 8 கிராம் சந்தனத் துளைப் போட்டு ஒரு மணி நேரம் ஊறிய பின் வடிகட்டி எடுத்து 15-30 மி. லி. வீதம் கொடுக்க, சருமரோ கங்கள், தேக எரிவு ஆகியன நீங்கும்.
சாம்பிராணி :
சாம்பிராணிப் பதங்கத்தை 100 மி.லி. நீரில் கலந்து அதனால் புண்களைக் கழுவப் புண்கள் ஆறும்.
புகையிலை:
புகையிலையை எடுத்து எரித்துச் சாம்பலாக்கி. அச் சாம்பலை வெண்ணெயுடன் கலந்து புண்கள் மீது பூச, புண்கள் ஆறும்.
புங்கு:
இதனுடைய வேரை எடுத்துக் கழுவிச் சுத்தம் செய்து, பின் தோலைச் சீவிப் பிழிந்து அதன் பாலை எடுத்துச் சம அளவு தேங்காய்ப் பால் சேர்த்துக் காய்ச்சி மெல்லிய துணியில் நனைத்துக் கட்ட பிளவை, ஆறாத புண்கள், மேகப் புண்கள் முதலியன ஆறும்.
வெற்றிலை :
தீப்பட்ட புண்மீது வெற்றிலையை வைத்துக் கட்ட எளிதில் ஆறும்.
மாசிப்பத்திரி (மாசிப் பச்சை) :
இதன் இலையை உலர்த்திப் பொடித்து புண்ணுக் குப் போட, புண் ஆறும்.
மஞ்சள் :
மஞ்சளைப் பொடித்து நீரில் கரைத்து துணியில் வடிகட்டி எடுத்து அதனால் புண்களைக் கிருமிகள் அகலும்.
சித்திரப்பாலாவி :
இதன் பாலை எடுத்துப் புண்களுக்கும், உதடு, நாக்கு வெடிப்புக்களுக்கும் தடவி வர புண் ஆறும். நகச்சுற்றுக்கும் பூசலாம். கால் ஆணிக்கும் (Corn)போடலாம்.
அரிவாள் மூக்குப்பச்சை
வெட்டுக் காயங்கட்கு இந்த இலையை அரைத்துப் போட காயம் வெகு விரைவில் ஆறும்.
ஊமத்தை
இதன் இலையை வதக்கி கட்டிகளுக்கு ( Boil ) ஒற்றடம் போட, கட்டிகளில் ஏற்படும் வலி நீங்கும்.
இசிவகற்றி
Antispasmodic
நரம்புகள் மூலம் விருப்பத்திற்கேற்ப இயங்க இசிவு எனப்படும். இவ்வாறு ஏற்படுகின்ற இசிவு களைக் கட்டுப்படுத்துகின்ற அல்லது அகற்றுகின்ற பொருட்களை இசிவகற்றிச் செய்கையுள்ள வேண்டிய தசைகள் ஒழுங்கு தவறி இயங்குவதே பொருட்கள் எனலாம்.
Drug used to relieve spasm occuring in the muscles. Spasm - Convulsive, involuntary muscular contraction.
முக்கிய மூலிகைகள் :
அபின்
ஆடாதோடை
கஞ்சா
ஊமத்தை
நஞ்சறுப்பான்
பெருங்காயம்
புதினா
ஓமம்
சதகுப்பை
சிவகரந்தை
வெண்கொடிவேலி
அக்கராகாரம்
மூங்கில்
எருக்கம் பூ
உபயோகிக்கும் முறைகள்
அபின் :
அபின் 1 பங்கு
மிளகுத் தூள் 2 பங்கு
சுக்குத் தூள் 5 பங்கு
நற்சீரகத் தூள்— 6 பங்கு அரைப் பங்கு
பாதாம் பிசின் :
இவற்றை ஒன்று சேர்த்து அரைத்து 65-130 அளவில் உட்கொள்ள கழிச்சல், சூலை, நித்திரையின்மை, இசிவு ஆகியவை நீங்கும்.
ஆடாதோடை :
ஆடாதோடை இலையின் சாறு 10-20 மி.லி. வரை எடுத்து, தேனுடன் கலந்து கொடுக்க சிறப் பாக இசிவு, குருதியழல், இருமல் ஆகியன தீரும்.
இதன் இலையை உலர்த்தி சுருட்டுப் போல் சுற்றி புகைப்பிடிக்க இரைப்பிருமல் குறையும்.
கஞ்சா :
இதனை மிகவும் குறைந்தளவில் கொடுக்க (25 மி.கி. வரை ) வயிற்று வலி, கழிச்சல் நீங்கும்.
ஊமத்தை
இதன் இலையை உலர்த்திப் பொடித்து புகை யாக உள்ளெடுக்க, இரைப்பிருமல் நீங்கும்.
நஞ்சறுப்பான்:
இதன் இலையை உலர்த்திப் பொடித்து 25-50 மி.கி. வரை உள்ளெடுக்க இரைப்பிருமல் நீங்கும். பெருங்காயம் :
இதனுடன் உழுந்து சேர்த்துப் பொடித்துத் தீயிலிட்டுப் புகைத்து, அப்புகையை உள்ளெடுக்க இரைப்புத் தணியும்.