-->

Type something and hit enter

author photo
By On

சித்த வைத்தியம் மூலிகை


  1. பேரீச்சம்பழத்தில் இரும்புச்சத்து அதிகமாகவுள்ளது. எக்காரணம் பற்றி உடல் இளைத்திருந்தாலும், அவர்கள் பேரீச்சம்பழத்தைத் தாராளமாகச் சாப்பிடலாம். பேரீச்சம்பழத்தை முறையாக உணவோடு சேர்த்துக் கொள்வதால், மெலிந்த உடல் தேறும். போகக் களைப்பு நீங்கும். தாது விருத்தியும் பலமும் உண்டாகும்.
  2. 100 எறுக்கம்பூக்களை எடுத்து நன்றாய் உலர்த்தி, சாதிக்காய், லவங்கம், சாதிப்பத்திரி வகைக்கு ஒரு தோலா சேர்த்து, பன்னீர் விட்டு அரைத்து குன்றிமணி அளவுள்ள மாத்திரைகளாக செய்து கொண்டு, ஒரு நாளைக்கு ஒருவேளை ஒரு மாத்திரையாக சாப்பிட்டுவர தாது விருத்தியாகும். உடல் பலமும் ஏற்படும்.
  3. முருங்கை ஈர்க்குகளை நறுக்கி, மிளகு ரசத்தில் போட்டு கொதிக்க வைத்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், கை கால் உடல் அசதிகள் நீங்கும். உடலில் பலமும் ஏறும். உடலைத் தேற்றும் நல்ல டானிக் இது.
  4. அருகம்புலலை வேரோடு பறித்து சுத்தம் செய்து சிறிது நீர் சேர்த்து அம்மியில் வைத்து ஒட்ட ஒட்ட அரைத்து, சம அளவு வெண்ணையையும் கலந்து காலை-மாலை சாப்பிடவும். நீண்ட நாட்கள் சாப்பிட்டு வந்தால்தான் உடலில் பலம் ஏறும்.
  5. வெந்தயக்கீரையை அடிக்கடி சமைத்துச் சாப்பிடுவது நல்லது. உடலுக்கு பலத்தைக் கொடுக்கும். கண் சம்பந்தமான கோளாறுகள் நீங்கும். பார்வை தெளிவடையும். சொரி சிறங்கை அகற்றும். அஜீரணத்தைப் போக்கும்.
  6. வில்வப்பழத்தின் சதைப்பாகத்தை எடுத்து அத்துடன் சீனாக் கற்கண்டையும் சேர்த்து கலந்து ஒரு கோலி உருண்டை அளவு காலை மட்டும் சாப்பிட்டுவர, உடல் வலுப்பெறும். இரண்டொரு வாரங்கள் சாப்பிடுங்கள். பலம் கூடிவிடும். அந்த நாட்களில் புளி, காரம் சேர்ப்பது கூடாது.
  7. வேப்பம்பூ ஒரு அவுன்ஸ், நிலவேம்பு ஒரு அவுன்ஸ் இரண்டையும் நன்றாக நசுக்கி, அதில் டம்ளர் கொதிக்கும் நீரை ஊற்றி வைக்கவும். 2 மணி நேரத்திற்குப்பின், வடிகட்டி வேளைக்கு 2 அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வந்தால் எல்லா பலஹீனங்களும், முக்கியமாக காய்ச்சலுக்குப் பின் உண்டாகும் பலஹீனம் சரியாகிவிடும்.
  8. அரிசித் தவுட்டுடன் பனை வெல்லத்தையும் கலந்து, சிறு உருண்டை செய்து வாயில் போட்டு சாப்பிடுங்கள். இரண்டொரு வாரங்கள் சாப்பிட்டாலே நல்ல பலம் ஏறும்.
  9. கல்யாணிப்பூசணி சாறு 1 டம்ளர் எடுத்து, அதில் பனை வெல்லத்தைப் போட்டுக் கலக்கி, ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டு வந்தால், உடம்பில் ஏற்படும் தளர்ச்சி, களைப்பு, மூளச்சோர்வு, அத்தனையும் சரியாகிவிடும்.
  10. உடல் மெலிந்து கிடப்பவர்கள். பெருக்க வேண்டுமானால், வேப்பம்பூவை ஊற வைத்து, குடிநீர் தயாரித்து, காலையில் பருகி வந்தால், சிறுகச் சிறுக உடல் மெலிவு நீங்கி பெருக்கத் தொடங்கும்.
  11. நீண்டநாள் வியாதியில் கஷ்டப் படுவோருக்கு, ஆரஞ்சுப்பழ ரசமும், ஆரஞ்சுத்தோல் சத்து நீரும் தக்காளிப்பழ ரசமும், மூன்றும் சமமாகக் கலந்து கொடுத்தால் அதிக சீக்கிரத்தில் இரத்தம் அபிவிருத்தி அடைகிறது. நல்ல பலத்தையும், சுறுசுறுப்பையும் தைரியத்தையும் பெறலாம்.
  12. சிவப்பு முள்ளங்கியை, வாதுமைப் பருப்புடன் சேர்த்து நனறாக அரைத்து, நெய், தேன் சேர்த்து அல்வாவாகச் செய்து சாப்பிடலாம். தேகத்திற்கு அபரிமிதமான பலனைத் தரும். வெந்தயமும், வறுத்த கோதுமையும் சமமாக எடுத்து பொடி செய்து (காப்பிக்குப் பதிலாக) பாலும் சர்க்கரையும் சேர்த்துப் பருகி வர உடல் மேன்மையடையும்.
  13. இளமைக்குரிய பொலிவு இல்லாததால் சில பெண்கள் இளமையிலேயே முதுமை தோற்றத்துடன் இருப்பர். இவர்கள் மஞ்சள் சீவி தோலை மட்டும் எடுத்து இடித்துப் பொடியாக்கி தேனில் குழைத்துச் சாப்பிட சருமம் பளபளக்க இளமைத் தோற்றம் அடைவார்கள்.
  14. காலையில் பாக்கு அளவு தோல் சீவிய இஞ்சியை வாயில்போட்டு நன்றாக மென்று விழுங்க வேண்டும். மத்தியானம் கொஞ்சம் சுக்குத் துண்டு வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்க வேண்டும். மாலையில் கொஞ்சம் கடுக்காயத் துண்டு மென்று தின்று விட வேண்டும். 40-நாட்கள் சாப்பிட்டால் எந்த வியாதியும் வராமல் தேகம் பலப்படும்.
  15. 5 பேரீச்சம்பழத் கொட்டை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி காய்ச்சிய பசும்பாலில் சேர்த்துக் கலந்து, தேன் 2 ஸ்பூன், ஏலக்காய்-3, குங்குமப்பூ-5 இதழ் கூடடிக் கலந்து பருகலாம். இதற்கு இணையான ஒரு டானிக் கிடையாது. சிறுவர், சிறுமியர் இளைஞர். தாய்மார்கள், நோயுற்றவர்கள், படுக்கையிலேயே கிடக்கும் நீண்டநாள் நோயாளிகள் என எல்லோருக்கும் கொடுக்கலாம். இது ஒரு சத்துள்ள நல்ல டானிக்.
  16. வறண்டு மெலிந்த தேகம் வளர்ச்சியடைய, பொன்னாங்கண்ணிக் கீரையை உலர்த்தி பொடி செய்து, 400 கிராம் தூளுடன், 70கிராம் கடுக்காய்த் தூள், 30 கிராம் ஏலக்காய்த்தூள், 400 கிராம் சீனாக் கற்கண்டு, இவைகளை ஒன்று சேர்த்துக் கலந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். காலை-மாலை இருவேளையும் மூன்று விரல் பிரமானம் எடுத்து நெய்விட்டுக் குழைத்துச் சாப்பிட்டு வந்தால், உடல் பருமன் ஆகும். கண் ஒளி பிரகாசம் அடையும், உடல் பொன்னிறமாகும்.
  17. 7 பாதாம்பருப்பு, 2 தேக்கரண்டி கசகசா இரண்டையும் இரவு தண:ணீரில் ஊற வைக்கவும். காலையில் பாதாம்பருப்பின் தோலை எடுத்துவிட்டு மற்றவைகளை பசும்பால் விட்டு நன்றாக அரைத்து சர்க்கரை கலந்த ஒரு டம்ளர் பாலில் கலந்து காய்ச்சி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவும், உடல் சோர்வு நீங்கும். ஆண்மை குறையுள்ளவர்களுக்கு விந்து பெருகும். உடல் நன்கு தேறும்.
  18. செம்பருத்தி சர்பத் - 100 பூக்களுக்கு ஒரு படி சுத்த நீர் விட்டு, சரி பாதியாகும் வரை காய்ச்சி, ஒரு வீசை சீனாக்கற்கண்டு சேர்த்து சர்பத்தாக நன்றாகக் காய்ச்சி, காலை-மாலை அரை அவுன்ஸ் சிறுவர் முதல் பெரியோர் வரை பருகிவர, கணைச் சூடு உஷ்ணம் உடனே போகும். ஒரு மண்டலம் சாப்பிட சரீரம் பருத்துவிடும். மன உற்சாகம் தரும். சிறுவர் சிறுமியர் கவர்ச்சியான தோற்றம் பெறுவர்.
  19. செம்பருத்தி குல்கந்து - கண்ணாடிப் பாத்திரத்தில் பூவின் மெல்லிய இதழ்களைப் போட்டு, அதன் மேல் சீனாக்கற்கண்டுத் தூளை நிறையத் தூவி வெயிலில் காய வைத்து விடவேண்டும். சில தினங்கள் பக்குவமாகக் காய்ந்தபின் கொஞ்சம் குங்குமப்பூ கலந்து வேறு பாட்டிலில் பத்திரப்படுத்த வேண்டும். இதை ஒரு தோலா அளவு நாளதோறும் சாப்பிட்டு வந்தால், நல்ல ஆரோக்கியத்தையும் இரத்த புஷ்டியையும் தரும். மனதுக்கு விவரிக்க முடியாத உற்சாகத்தைத் தரும்.
  20. செம்பருத்திக் காபி - இரண:டு அல்லது 3 புஷ்பங்கள் ஒரு பாத்திரத்தில் போட்டு, பின் அதில் நனறாகக் கொதிக்கும் தண்ணீரை ஊற்றி 5 முதல் 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு எடுத்து வடிகட்டினால் முதல் தர டிகாகசன் கிடைக்கும். இத்துடன் பாலும் சர்க்கரையும் சேர்த்துப் பருகினால் ருசியாக இருக்கும். இரத்த புஷ்டியும், அதனால் ஆரோக்கியம் உண்டாகும்.
  21. ஒருநாள் விட்டு ஒருநாள் பிடி பார்லி அரிசியை லேசாக வறுத்துப் பொடி செய்து கால் லிட்டர் கொதிநீரில் போட்டு வேகவைக்கவும். வேகுமபோது 50 கிராம் அத்திப்பழம், 25 கிராம் கர்ஜுன் எனப்படும் உலர்ந்த திராட்சைப்பழம், அதிமதுரம் 25 கிராம், சுக்குப்பொடி 1 எஸ்பூன், நசுக்கிய 5 ஏலக்காய் இவைகளைப் போட்டுக் காய்ச்சி, நன்றாகக் குழைந்ததும் இறக்கி ஆறவைத்து வடிகட்டி பாலும் பனங்கற்கண்டும் சிறிது கூடடிப் பருக வேண்டும். உடலுக்கு வேண்டிய சத்தினைப் பெறலாம். சுவையாக இருப்பதால் அளவுக்கு அதிகமாக அருந்துதல் கூடாது. அளவோடு பார்லி கஞ்சி சாப்பிட வளமாக வாழலாம்.
  22. கொத்துமல்லியின் விதை தனியா எனப்படும். 100கிராம் தனியா, 100 கிராம் தோல் சீவிய சுக்கு, கிராம் ஏலக்காய் இம்மூன்றையும் லேசாக வறுத்துப் பொடி செய்து 1 ஸ்பூன் அளவு தினசரி எடுத்து காபி டிகாக்சன் போல் தயாரித்து, பால், தேன் கலந்து பருகிவர உடலின் உஷ்ண நிலை சீராகச் செயல்படும். இரத்த அழுத்தம் சம நிலையில் இருக்கும். பசி உரிய நேரத்தில் எடுத்து உணவு செரிமானம் ஆகும். பித்தம் தணியும். வெண்பூசணி, வெங்காயம், உருளைக்கிழங்கு, உளுத்தம் பருப்பு. முழுக்கடலை, நெய், பால், தயிர் உலர்ந்த பழங்கள், பருப்பு வகைகள், பாதாம்பருப்பு, திராட்சை, ஆரஞ்சு ஆகியவைகள் சாப்பிட்டு உடல் பருமனாகும்.
  23. எள் 100 கிராம், ஜாதிக்காய் 5 கிராம், சுத்தமான வேலம்பிசின் 5 கிராம், பாதாம் பருப்பு 5கிராம், பேரீச்சம்பழம் 10 கிராம், திராட்சை 10 கிராம். ஏலக்காய் 2 கிராம் எல்லாவற்றையும் கல் உரலில் இட்டு இடிக்கவும். 200 கிராம் வெல்லம் சேர்த்து இடித்துக் கொண்டே வந்தால் லேகிய பதமாகிவிடும். பாடடிலில் அடைத்து வைத்துக்கொண்டு, காலை-மாலை கொட்டைப்பாக்கு அளவு சாப்பிட்டு வர உடல் பருமனாகும்.
  24. தூதுவளைப்பூ, முருங்கைப்பூ, இரண்டையும் 10 எடுத்து, 1 டம்ளர் பாலில் போட்டுக் காய்ச்சி குடித்துவர சுக்கிலம் பெருகும். தேக வலிமை ஏற்படும்.
  25. மஞ்சள் கரிசலாங்கண்ணி அரைத்து 40-நாட்கள், தினமும் நெல்லிக்காயளவு சாப்பிட தேகம் வலுக்கும். உடல் காயசித்தியாகும். நோய் அணுகாது. சீமை அத்திப்பழம் ஒன்று, 1 பிடி முழுக் கடலை, இரண்டையும் ஒரு மண் சடடியில் ஊறவைத்து, விடிந்ததும் நன்றாகக் கொதிக்கக் காய்ச்சி, அந்த நீரை வடி கட்டிககொண்டு. சர்க்கரை பாலுடன் சேர்த்துக் காபி போல் 40-நாட்கள் குடிக்க உடல் பலம் பெறும். நெல்லிக்காயை கொட்டை நீக்கி வெயிலில் உலர வைக்க வேண்டும். 15-நாட்கள் கழித்து உரலில் இட்டு இடித்துத் தூள் செய்து பாடடிலில் போட்டு வைத்து, தினசரி காலை பல் துலக்கியபின் 1 ஸ்பூன் வாயிலிட்டு மென்று விழுங்கி நீர் குடிக்கவும். 6 மாதங்கள் தொடர்ந்து செய்துவந்தால் உடலில் எதிர்ப்பு சக்தி பலப்படும். ஆஸ்த்மா தொல்லை அறவே இருக்காது.
  26. பூமி சர்க்கரைக் கிழங்கு, நிலப் பனங்கிழங்கு, தண்ணீர் விட்டான் கிழங்கு. இம்மூன்றையும் பொடி செய்து, கற்கண்டு சேர்த்து, நெய் விட்டு, இரு வேளை சாப்பிட்டு வந்தால். உடல் குண்டாகும். பார்லி டானிக் - வயதானவர்களுக்கும், நாட்பட்ட நோயாளிகளுக்கும், சீராக வளர்ச்சி பெறவேண்டிய குழந்தைகளுக்கும், தாய்ப் பாலற்ற குழந்தைகளுக்கும் நல்லது.தினமும் இரவு பாலுடன் தேனைக் கலந்து அருந்தவும்.


தேரையர் கூறும் தினசரி காயகல்பம்.

  1. காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் கடும்பகல் சுக்கு என்பது பகல் உணவில் சுக்கு சேர்ப்பது ஆகும். தேர்ந்த 'மாவு சுக்கு' என்பது எல்லா ஊர்களிலும் கிடைக்கும். பூச்சி அரிப்பு, சொத்தை இல்லாத சுக்கு அரை கிலோ வாங்கி வெயிலில் உலர்த்தி மேல் தோலை சீவி - நன்றாக இடித்துப் பொடி செய்து சலித்து 1 பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். பகலுணவில் 1 பிடி சாதத்துடன், 1 ஸ்பூன் மேற்படி சுக்குப் பொடியைக் கலந்து பிசைந்து சாப்பிடவும். ஒரு மண்டலம் இவ்விதம் சாப்பிட்டு நிறுத்தவும். ஆண்டுக்கு 4 முறை இவ்விதம் சாப்பிடுவது தினசரி காயகல்பமாகும்.
  2. சுக்கு போலவே ‘கடுக்காயும்' நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும். இதனை 1 கிலோ வாங்கி உள்ளிருக்கும் கொட்டையை நீக்கிப் பின் உலர்த்தி - பொடி செய்து கலந்து வைத்துக் கொள்ளவும். முாலை 6 மணிக்கு அரை ஸ்பூன் அளவு எடுத்து பசும் பாலுடன் அல்லது தேனுடன் கலந்து சாப்பிட, உடல் நோய் அணுகாமல் ‘கல்பம்' போல் இறுகும்.
  3. நாள் தோறும் சாப்பிட்ட பிறகு இரண்டொரு நெல்லிக் காய்களை மென்று தின்று வாருங்கள். அத்துடன் தினம் ஒரு முறை ஒரு சிட்டிகை கடுக்காய்ப் பொடியையும் சாப்பிட்டு வரவும். எப்பொழுதும் சுறுசுறுப்பாக இளமையாக இருக்கலாம்.
  4. கேழ்வரகு மாவுடன் எள்ளும் சிறிது வெல்லமும் சேர்த்து இடித்து அடை செய்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் ஆக இருக்கும்.
  5. உடல் பருமன் நம் நாட்டில் பொற்கொடி என்னும் பொற்றாலைப் பாவை என்னும் கரிசலாங்கண்ணியை அடிக்கடி பருப்பு, நெய் சேர்த்து பொரியல், குழம்பு கடையல் ஆக உணவு பதார்த்தமாக உண்பது வழக்கம். இதனால் உடம்பில் தேங்கிய கெட்ட நீர்கள் வெளியாவதுடன் உடல் பலம் பெற்று மலச்சிக்கல்நீங்கி புத்திக்குத் தெளிவும், ஆரோக்கியமும் தரும். உடல் கனமும், பருமனையும், தொந்தியையும் கறைக்க விரும்புபவர்கள் நாள் தோறும் பகல் உணவில் இரண்டு முதல் நான்கு வாரம் தொடர்ந்து உண்டு வர, நல்ல பலனுண்டு.
  6. வாழைத் தண்டு, வெள்ளை முள்ளங்கி இவைகளைப் பொடியாக நறுக்கி, எலுமிச்சைச் சாறு, உப்பு இவை சேர்த்து, பச்சையாக வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டு வர, அங்கங்கே விழும் சதை மடிப்புகள் மறையும். வாழைத் தண்டை வாரத்திற்கு இரண்டு முறையாவது உணவுடன் சேர்த்துக் கொள்ள உடல் பருமன் குறையும்.
  7. உடல் பலத்திற்கு: காலையில் எழுந்ததும் தேன் 2 ஸ்பூன் எடுத்து கால் டம்ளர் பசும்பாலில் கலந்து பருகவும். இரவில கொண்டைக் கடலை 1 பிடி எடுத்துத் தண்ணீரில் ஊற வைத்து, காலையில் வேக வைத்து, அதனை வடிகட்டி அதில் சீமை அத்திப் பழம் 2, பசும்பால் அரை டம்ளர் கலந்து காய்ச்சி, கல்கண்டு சிறிது சேர்த்து, 7 மணிக்குப் பருகவும்.
  8. ராகி, கோதுமை, புழுங்கல் அரிசி இவற்றை அரை கிலோ எடுத்து லேசாக வறுத்துப் பொடி செய்து, கஞ்சி செய்து, அதில் கால் ஸ்பூன் பொடியைக் கலந்து தினம் 1 வேளை பருகி வரவும்.
  9. எல்லாவற்றுக்கும் மேலாக கீழ்க்கண்ட முறைப்படி கஞ்சி செய்து தினம் ஒரு வேளை கட்டாயம் பருக வேண்டும். பாதாம் பருப்பு -2, பிஸ்தா பருப்பு 5, கசகசா 1 ஸ்பூன் ஆக இம்மூன்றையும் மாலை 3 மணிக்கு கால் டம்ளர் பசும்பாலில் ஊற வைக்க வேண்டும். ஒரு மணி நேரம் ஊறிய பின் அதனை அப்படியே அரைத்து ஒரு டம்ளர் பசும்பாலில் காய்ச்சி பனங்கற்கண்டு சேர்த்துப் பருக வேண்டும். இப்படி 3 மாதம் சாப்பிட, உடம்பு கல் போன்று வலிமை பெறும்.
  10. நீண்ட கால நோயாளிகளுக்கு கடுமையான நாள்பட்ட நோயால் பாதிக்கப் படுபவர்களுக்கு, அடிக்கடி சோர்வு, தூக்கமின்மை, அதிகமான உஷ்ணம், ஆகியன உண்டாகும். சப்போட்டாப் பழம் தினம் 5 சாப்பிட்டு பால் அருந்தி வர, தூக்கமும் குளிர்ச்சியும் உண்டாகி, உடலில் போதுமான சக்தி வளர்ந்து, விரைவில் சுகம் பெறுவர்.
  11. உடல் வளருதல் (உயரம்) உயரமாக வளருவது குடும்பத்தின் இயற்கை வளர்ச்சி. அதைத் தடுக்க விரும்பினால், படுக்கும் போது கால்களை நீட்டாமல், மடக்கிக் கொண்டு படுக்கவும். அத்துடன் உணவில் உருளைக் கிழங்கு, உளுத்தம் பருப்பு இவைகளைத் தவிர்த்து, உணவு கொள்க.
  12. வெகு நேரம் உட்கார்ந்து, வேலை செய்பவர்களுக்கு (வியாபாரம் செய்பவர்கள்) நோய்கள் அணுகாமலிருக்க: வாரம் 2 முறை பிரண்டைத் துவையலும், 15 நாளைக்கு ஒரு தரம் அகத்திக் கீரையும் உணவில் சேர்ப்பதுடன், விடியற்காலை 1 மைல் குறு நடையில் பயிற்சி செய்தல். அப்படி இன்றி உட்கார்ந்த இடத்தில் இருந்து வந்தால், பெருங்குடல் அசைவின்றி முதலில் மூலச்சூடு உண்டாகி, மூலம், பௌத்திரம் நோய்கள் உண்டாகிவிடும்.

  1. மயக்கம்: அதிமதுரம், சிறுதேக்கு, பனங்கற்கண்டு, வகைக்கு 20 கிராம் சிதைத்துப் போட்டு, 200 மில்லி தண்ணீர் விட்டு கொதிக்கக் காய்ச்சி, 100 மில்லியாக சுண்ட வைத்த குடிநீரை தினமும் காலை உட்கொள்ள மயக்கம், தாகம், உட்சூடு, மூர்ச்சை போட்டு மயக்கத்தால் கீழே விழுதல் ஆகியன நீங்கும்.
உடல் இளைக்க

  1. உடற்பருமன் ஏற்பட்டு விட்டதா? ஆமணக்குச் செடி வேரைக் கொண்டு வந்து, நன்றாகப் பொடித்து, அத்துடன் தேனைக் கூட்டிப் பிசைந்து, ஒரு டம்ளர் தண்ணீரில் அப்படியே ஊற வைத்து விடுங்கள். இரவு முழுவதும் ஊறினதும், காலையில் அதைக் கலக்கி வடிகட்டி அந்த நீரை மட்டும் சாப்பிட்டு வாருங்கள். நாலு வாரத்திற்குள் உங்களுக்கு நல்ல பலன் தெரியும்.
  2. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவரம் பருப்புடன் மிளகு சேர்த்து சமைத்து உண்டு வந்தால், 3 மாதங்களில், பெருத்த உடல் பருமன் குறைந்து, நல்ல கெட்டியடைந்து ஆரோக்கியமடையும். நல்ல தேஜஸும், வீரிய விருத்தியும் உண்டாகும். நேத்திர ரோகமும் விலகும்.
  3. தூல சரீரம் கறைந்து கெட்டிப்பட நில ஆவாரை இலையை நிழலில் உலர்த்தி இடித்துத் தூளாக்கி, துணியில் சலித்து, ஒரு ஜாடியில் போட்டு வைத்துக் கொண்டு, தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் போதும். தன்னில் தானே, உடல் வற்றிக் கெட்டிப் படும்.
  4. பச்சை வாழைத் தண்டை நறுக்கி, அதில் எலுமிச்சைச் சாற்றினைக் கலந்து சாப்பிட்டு வந்தால்,உடல் பருமன் குறையும்.
  5. காலையில் எலுமிச்சைப் பழச் சாற்றை உப்பு சேர்த்துக் கலந்து, ஒரு மாதம் வரை வெறும் வயிற்றில் அருந்தினால், தேவையற்ற கொழுப்புச் சத்தும், ஊளைச் சதையும் குறையும். ரத்தமும் சுத்தப் படும்.
  6. அகில் கட்டையை பசும்பால் விட்டு சந்தனம் அரைப்பது போல அரைத்து, அதை உடம்பில் பூசிக்கொள்ள, உடல் தளர்ந்து சதையெல்லாம் தொள தொள என்று ஆடும், தொண்டு கிழவர்களின் தசை நார்கள் கெட்டிப்படும்.
  7. கொழுப்பு உணவையும், அரசி உணவையும் குறைத்துக் கொண்டு தினம் எலுமிச்சம்பழச் சாறு 1 அவுன்ஸ், தேன் அரை அவுன்ஸ், தண்ணீர் 4 அவுன்ஸ் மூன்றையும் கலந்து, சிறிது சூடு செய்து, காலையில் ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு வர, எடை குறையும். சக்தி கிடையாது.
  8. 50 கிராம் கொள்ளு எடுத்து, 400 மில்லி தண்ணீரில் இரவே ஊற வைத்து விடவும். காலையில் அதைக் கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் கால் தேக்கரண்டி இந்துப்பு சேர்த்துக் குடிக்கவும். அதே போல் காலையில் ஊற வைத்து, மாலையில் கொதிக்க வைத்து வடிகட்டி, இந்துப்பு சேர்த்துச் சாப்பிடவும். ஒரு மாதத்தில் தூல சரீரம் இளைக்கும்.
  9. வாழைத்தண்டு சூப்: வாழைத்தண்டை சிறு துண்டுகளாக வெட்டி, மிளகு, சீரகம், பூண்டு, சிறிது எலுமிச்சை பழச் சாறும் (ஒரு அவுன்ஸ் சூப்பிற்கு ஒரு தேக்கரண்டி எலுமிச்சம் பழச்சாறு கலந்தால், போதுமானது) கலந்து, மூடிக் கொதிக்க வைத்து, உப்பிட்டு முறைப்படி தாளித்துக் கொள்ளவும். இதனை காலைபகல் உணவுக்கு முன் அருந்தவும். உடல் கனம் குறையும். இரத்த அழுத்தம் கூடுதலானவரகளுக்கு மிகவும் சிறந்த உணவு இது.
  10. வேறு முறை சூப் - வாழைத் தண்டை இடித்துத் தேவையளவு சாற்றை எடுத்து, மண் சட்டியில் ஊற்றிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, இவைகளைத் தட்டிப் பச்சைக் கொத்தமல்லியும் போட்டு மூடிக் கொதிக்க விட்டு, இறக்கிச் சிறிது எலுமிச்சம்பழச் சாற்றைக் கலந்து உப்பிட்டு அருந்தி வரலாம். 3 மாதங்களில் உடல் கனம் குறையும்.
  11. கல்யாண முருங்கை என்ற முள் முருங்கை இலைச் சாற்றைத் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று மாதங்கள் காலை, மாலை 2 வேளையும் 40 மில்லி அளவு அருந்தி வர, மிகப் பருத்த உடலை

                      Click to comment