-->

Type something and hit enter

author photo
By On
12-ஆம் வகுப்பு தமிழ் - முழுமையான ஆன்லைன் வினாடி வினா

12-ஆம் வகுப்பு தமிழ்

பாடப்புத்தகத்தில் உள்ள அனைத்து ஒரு மதிப்பெண் வினாக்களும் விடைகளும்
இயல் 1 - இலக்கணத் தேர்ச்சிகொள்
1. பிழையான தொடரைக் கண்டறிக.
  • அ) காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்.
  • ஆ) மலைமீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்.
  • இ) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது.
  • ஈ) நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.
இயல் 1 - இலக்கணத் தேர்ச்சிகொள்
2. பேச்சுத்தமிழில் அமைந்த தொடரைத் தெரிவு செய்க.
  • அ) அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்.
  • ஆ) புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.
  • இ) வறட்சி எல்லா இடங்களையும் பாதித்துள்ளது.
  • ஈ) மயில்கள் விறலியரைப் போல் ஆடுகின்றன.
இயல் 1 - பலவுள் தெரிக
3. ச.த. சற்குணரின் உரை ஏற்படுத்திய ஆர்வத்தினால் மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய நூல்:
  • அ) பௌத்தமும் தமிழும்
  • ஆ) இசுலாமும் தமிழும்
  • இ) சமணமும் தமிழும்
  • ஈ) கிறித்துவமும் தமிழும்
இயல் 1 - பலவுள் தெரிக
4. "மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்குதற்கு" கவிஞர் குறிப்பிடும் பழமைநலம் என்பது: 1) பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது 2) பொதிகையில் தோன்றியது 3) வள்ளல்களைத் தந்தது
  • அ) 1 மட்டும் சரி
  • ஆ) 1, 2 இரண்டும் சரி
  • இ) 3 மட்டும் சரி
  • ஈ) 1, 3 இரண்டும் சரி
இயல் 1 - பலவுள் தெரிக
5. "மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது தன்னேர் இலாத தமிழ்!" - இவ்வடிகளில் பயின்று வந்துள்ள தொடை நயங்களைத் தேர்க.
  • அ) அடிமோனை, அடிஎதுகை
  • ஆ) சீர்மோனை, சீர்எதுகை
  • இ) அடிஎதுகை, சீர்மோனை
  • ஈ) சீர்எதுகை, அடிமோனை
இயல் 1 - பலவுள் தெரிக
6. "செம்பரிதி..." எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள கவிதைத் தொகுப்பு:
  • அ) ஒளிப்பறவை
  • ஆ) நிலவுப்பூ
  • இ) சர்ப்பயாகம்
  • ஈ) சூரியநிழல்
இயல் 1 - பலவுள் தெரிக
7. மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய சொல்லாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு:
  • அ) மத்த விலாசம்
  • ஆ) தமிழ்நாட்டு வரலாறு
  • இ) அஞ்சிறைத் தும்பி
  • ஈ) திசை எட்டும்
இயல் 2 - இலக்கணத் தேர்ச்சிகொள்
8. தமிழில் திணைப்பாகுபாடு ______________ அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது.
  • அ) பொருட்குறிப்பு
  • ஆ) சொற்குறிப்பு
  • இ) தொடர்க் குறிப்பு
  • ஈ) எழுத்துக்குறிப்பு
இயல் 2 - இலக்கணத் தேர்ச்சிகொள்
9. "உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே அஃறிணை என்மனார் அவரல பிறவே" - இந்நூற்பா இடம்பெற்ற இலக்கண நூல்:
  • அ) நன்னூல்
  • ஆ) தொல்காப்பியம்
  • இ) அகத்தியம்
  • ஈ) இலக்கண விளக்கம்
இயல் 2 - இலக்கணத் தேர்ச்சிகொள்
10. யார்? எது? ஆகிய வினாச்சொற்கள் பயனிலையாய் அமைந்து, உணர்த்தும் திணைகள் முறையே:
  • அ) அஃறிணை, உயர்திணை
  • ஆ) உயர்திணை, அஃறிணை
  • இ) விரவுத்திணை, அஃறிணை
  • ஈ) விரவுத்திணை, உயர்திணை
இயல் 2 - இலக்கணத் தேர்ச்சிகொள்
11. பொருத்தி விடை தேர்க: அ) அவன், அவள், அவர் - 1) உளப்படுத்தாத் தன்மைப் பன்மை ஆ) நாங்கள் முயற்சி செய்வோம் - 2) உளப்பாட்டுத் தன்மைப் பன்மை இ) நாம் முயற்சி செய்வோம் - 3) தன்மைப் பன்மைப் பெயர்கள் ஈ) நாங்கள், நாம் - 4) பதிலிப் பெயர்கள்
  • அ) 4, 1, 2, 3
  • ஆ) 2, 3, 4, 1
  • இ) 3, 4, 1, 2
  • ஈ) 4, 3, 1, 2
இயல் 2 - பலவுள் தெரிக
12. பொருத்துக: அ) குரங்குகள் - 1) கன்றுகளைத் தவிர்த்தன ஆ) விலங்குகள் - 2) மரங்களிலிருந்து வீழ்ந்தன இ) பறவைகள் - 3) குளிரால் நடுங்கின ஈ) பசுக்கள் - 4) மேய்ச்சலை மறந்தன
  • அ) 1, 3, 4, 2
  • ஆ) 3, 4, 2, 1
  • இ) 3, 2, 1, 4
  • ஈ) 2, 1, 3, 4
இயல் 2 - பலவுள் தெரிக
13. "நரம்புகளுக்குள் வீணை மீட்டிக்கொண்டிருக்கிறது" என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது:
  • அ) சூரிய ஒளிக்கதிர்
  • ஆ) மழை மேகங்கள்
  • இ) மழைத்துளிகள்
  • ஈ) நீர்நிலைகள்
இயல் 2 - பலவுள் தெரிக
14. சென்னை வெறும் நகரம் மட்டுமன்று, அது நம்பிக்கை மையம் - காரணம்:
  • அ) நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகளின் களம்
  • ஆ) மென்பொருள், வன்பொருள், வாகன உற்பத்தியில் பங்கு
  • இ) மென்பொருள் ஏற்றுமதியில் முன்னிலை
  • ஈ) அ, ஆ, இ - அனைத்தும்
இயல் 2 - பலவுள் தெரிக
15. 'பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென' - அடிக்கோடிட்ட (பொய்யா) சொல்லின் இலக்கணக் குறிப்பைத் தேர்க.
  • அ) வினைத்தொகை
  • ஆ) உரிச்சொல் தொடர்
  • இ) இடைச் சொல் தொடர்
  • ஈ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
இயல் 2 - பலவுள் தெரிக
16. கூற்று: இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர். காரணம்: கிழக்கிந்திய நிறுவனத்தின் வணிகம், துணி சார்ந்தாகவே இருந்தது.
  • அ) கூற்று சரி, காரணம் தவறு
  • ஆ) கூற்று தவறு, காரணம் சரி
  • இ) கூற்று தவறு, காரணம் தவறு
  • ஈ) கூற்று சரி, காரணம் சரி
இயல் 2 - திருக்குறள் கற்பவை கற்றபின்
17. கடலின் பெரியது எது?
  • அ) உற்ற காலத்தில் செய்த உதவி
  • ஆ) பயன் ஆராயாமல் ஒருவர் செய்த உதவி
  • இ) தினையளவு செய்த உதவி
  • ஈ) காலத்தினால் செய்த நன்றி
இயல் 2 - திருக்குறள் கற்பவை கற்றபின்
18. வையகமும் வானகமும் ஆற்றலரிது - எதற்கு?
  • அ) செய்யாமல் செய்த உதவி
  • ஆ) பயன் தூக்கார் செய்த உதவி
  • இ) தினைத்துணை நன்றி
  • ஈ) காலத்தினால் செய்த நன்றி
இயல் 2 - திருக்குறள் கற்பவை கற்றபின்
19. பொருத்துக: அ) வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் - 1) சேர்ந்ததாரைக் கொல்லி ஆ) பயன்தூக்கார் செய்த உதவி - 2) ஞாலத்தின் மாணப் பெரிது இ) சினம் - 3) தெய்வத்துள் வைக்கப்படும் ஈ) காலத்தினாற் செய்த நன்றி - 4) நன்மை
  • அ) 3, 4, 1, 2
  • ஆ) 1, 2, 3, 4
  • இ) 4, 3, 2, 1
  • ஈ) 3, 1, 4, 2
இயல் 2 - திருக்குறள் கற்பவை கற்றபின்
20. பொருத்துக (இலக்கணக் குறிப்பு): அ) அன்பும் அறனும் - 1) பண்புத்தொகை ஆ) நன்கலம் - 2) வினையாலணையும் பெயர் இ) மறத்தல் - 3) எண்ணும்மை ஈ) உலகு - 4) தொழிற்பெயர்
  • அ) 2, 1, 4, 3
  • ஆ) 3, 1, 4, 2
  • இ) 4, 2, 3, 1
  • ஈ) 2, 3, 4, 1
இயல் 3 - இலக்கணத் தேர்ச்சிகொள்
21. பொருள் குழப்பமின்றி எழுதுவதற்குரிய காரணங்களுள் பொருந்துவதைத் தேர்க.
  • அ) தேவையான இடங்களில் இடைவெளி விடாமல் எழுதுதல்
  • ஆ) தேவையற்ற இடங்களில் இடைவெளி விட்டு எழுதுதல்
  • இ) நிறுத்தக்குறிகளை உரிய இடங்களில் இட்டு எழுதுதல்
  • ஈ) வல்லின மெய்களைத் தேவையான இடங்களில் இடாமல் எழுதுதல்
இயல் 3 - இலக்கணத் தேர்ச்சிகொள்
22. வல்லினம் மிகும், மிகாத் தொடர்களின் பொருளறிந்து பொருத்துக: அ) பாலை பாடினான் - 1) தேரை என்னும் உயிரினத்தைப் பார்த்தான் ஆ) பாலைப் பாடினான் - 2) தேரினைப் பார்த்தான் இ) தேரை பார்த்தான் - 3) பாலினைப் பாடினான் ஈ) தேரைப் பார்த்தான் - 4) பாலைத் திணை பாடினான்
  • அ) 4, 1, 3, 2
  • ஆ) 2, 3, 1, 4
  • இ) 4, 3, 1, 2
  • ஈ) 2, 4, 1, 3
இயல் 3 - பலவுள் தெரிக
23. 'குடும்பம்' என்னும் சொல் முதன்முதலில் இடம்பெற்றுள்ள நூல்:
  • அ) தொல்காப்பியம்
  • ஆ) திருக்குறள்
  • இ) குறுந்தொகை
  • ஈ) புறநானூறு
இயல் 3 - பலவுள் தெரிக
24. பொருத்தி விடையைத் தேர்ந்தெடுக்க: அ) செற்றார் - 1) மகிழ்ச்சி ஆ) கிளை - 2) காடு இ) உவகை - 3) பகைவர் ஈ) கானம் - 4) உறவினர்
  • அ) 2, 4, 3, 1
  • ஆ) 3, 4, 1, 2
  • இ) 3, 1, 4, 2
  • ஈ) 3, 2, 4, 1
இயல் 3 - பலவுள் தெரிக
25. "இவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் வரவேற்பாயாக" என்று ஜலாலுத்தீன் ரூமி குறிப்பிடுவது:
  • அ) வக்கிரம்
  • ஆ) அவமானம்
  • இ) துக்கம்
  • ஈ) இவை அனைத்தும்
இயல் 3 - பலவுள் தெரிக
26. "தந்தனன் தாதை தன்னைத் தடக்கையான் எடுத்துச் சார்வான்" - அடிக்கோடிட்ட (தந்தனன்) சொல்லின் இலக்கணக்குறிப்பு:
  • அ) உரிச்சொல் தொடர்
  • ஆ) வினைத்தொகை
  • இ) உம்மைத்தொகை
  • ஈ) இடைச்சொல் தொடர்
இயல் 3 - பலவுள் தெரிக
27. "எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே" - என்னும் பாரதியின் பாடல் வெளிப்படுத்துவது:
  • அ) தனிக்குடும்ப முறை
  • ஆ) விரிந்த குடும்ப முறை
  • இ) தாய் வழிச் சமூகமுறை
  • ஈ) தந்தை வழிச் சமூகமுறை
இயல் 4 - இலக்கணத் தேர்ச்சிகொள்
28. கல்வியை நிலக்களனாகக் கொண்ட மெய்ப்பாடு:
  • அ) பெருமிதம்
  • ஆ) உவகை
  • இ) நகை
  • ஈ) அழுகை
இயல் 4 - இலக்கணத் தேர்ச்சிகொள்
29. 'நகை' என்னும் மெய்ப்பாடு தோன்றும் நிலைக்களன்களுள் ஒன்று:
  • அ) கொடை
  • ஆ) பிணி
  • இ) பேதைமை
  • ஈ) புகழ்
இயல் 4 - பலவுள் தெரிக
30. 'கண்ணாடியாகும் கண்கள்' என்னும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்:
  • அ) நகுலன்
  • ஆ) பிரமிள்
  • இ) அய்யப்ப மாதவன்
  • ஈ) சிற்பி
இயல் 4 - பலவுள் தெரிக
31. "ஏழ் ஆண்டு இயற்றி ஓர் ஈராறு ஓர் ஆண்டில் சூழ்கழல் மன்னற்குக் காட்டல்..." - இத்தொடர்களில் வெளிப்படும் செய்திகள்: 1) மாதவி ஏழு ஆண்டுகள் வரை நாட்டியம் பயின்றாள். 2) ஈராறு வயதில் அரங்கேற்றம் செய்ய விரும்பினாள்.
  • அ) 1 சரி; 2 தவறு
  • ஆ) 1 தவறு; 2 சரி
  • இ) 1 தவறு; 2 தவறு
  • ஈ) 1 சரி; 2 சரி
இயல் 4 - பலவுள் தெரிக
32. பொருத்தி விடை தேர்க: அ) ஆமந்திரி - 1) முத்து ஆ) நித்திலம் - 2) மூங்கில் இ) கழஞ்சு - 3) இடக்கை வாத்தியம் ஈ) கழை - 4) எடை அளவு
  • அ) 2, 1, 3, 4
  • ஆ) 3, 1, 4, 2
  • இ) 1, 3, 4, 2
  • ஈ) 4, 3, 2, 1
இயல் 4 - பலவுள் தெரிக
33. சுவடியோடு பொருந்தாத ஒன்றை கீழே உள்ளவற்றுள் தேர்வு செய்க.
  • அ) வசம்பு
  • ஆ) மணத்தக்காளியிலைச் சாறு
  • இ) கடுக்காய்
  • ஈ) மாவிலைக்கரி
இயல் 4 - பலவுள் தெரிக
34. 'குழிமாற்று' என்னும் சொல்லோடு தொடர்புடைய துறை:
  • அ) இலக்கியம்
  • ஆ) கணிதம்
  • இ) புவியியல்
  • ஈ) வேளாண்மை
இயல் 4 - திருக்குறள் கற்பவை கற்றபின்
35. அல்லல் படுப்பதூஉம் இல் - எவரோடு பழகினால்?
  • அ) வாள்போல் பகைவர்
  • ஆ) தீயினத்தார்
  • இ) எண்ணியாங்கு எய்துபவர்
  • ஈ) அறிவினார்
இயல் 4 - திருக்குறள் கற்பவை கற்றபின்
36. திண்ணியர் என்பதன் பொருள்:
  • அ) அறிவுடையவர்
  • ஆ) மன உறுதியுடையவர்
  • இ) தீக்காய்வர்
  • ஈ) உறவினர்
இயல் 4 - திருக்குறள் கற்பவை கற்றபின்
37. ஆராய்ந்து சொல்கிறவர்:
  • அ) அரசர்
  • ஆ) சொல்லியபடி செய்பவர்
  • இ) தூதுவர்
  • ஈ) நல்லினத்தார்
இயல் 4 - திருக்குறள் கற்பவை கற்றபின்
38. பொருத்துக: அ) பாம்போடு உடன் உறைந்தற்று - 1) உடம்பாடு இல்லாதவரோடு வாழ்தல் ஆ) செத்தார் - 2) கல்லாதவர் இ) வறுமை தருவது - 3) கள் உண்பவர் ஈ) இகல்வேந்தர் சேர்ந்து ஒழுகுவார் - 4) சூது
  • அ) 1, 2, 3, 4
  • ஆ) 2, 3, 4, 1
  • இ) 4, 1, 3, 2
  • ஈ) 1, 3, 4, 2
இயல் 4 - திருக்குறள் கற்பவை கற்றபின்
39. நடுங்கும்படியான துன்பம் இல்லாதவர் யார்?
  • அ) வரப்போவதை முன்னரே அறிந்து காத்துக்கொள்ளக் கூடியவர்
  • ஆ) மனத்திட்பம் உடையவர்
  • இ) அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர்
  • ஈ) நல்லினத்தின் துணையுடையவர்
இயல் 4 - திருக்குறள் கற்பவை கற்றபின்
40. எளியது, அரியது என்பன முறையே:
  • அ) சொல்வது, சொல்லியபடி செய்வது
  • ஆ) பகைவர் தொடர்பு, நல்லினத்தின் துணை
  • இ) சிறுமை பல தருவது, பெருமை தருவது
  • ஈ) மெய்ப்பொருள் காண்பது, உருவுகண்டு எள்ளாதது
இயல் 5 - இலக்கணத் தேர்ச்சிகொள்
41. "ஒட்டுப் போடாத ஆகாயம் போல - இந்த உலகமும் ஒன்றேதான்..." - இக்கவிதையில் பயின்றுவருவது:
  • அ) உவமை
  • ஆ) உருவகம்
  • இ) உள்ளுறை
  • ஈ) இறைச்சி
இயல் 5 - இலக்கணத் தேர்ச்சிகொள்
42. 'ஐம்பெருங்காப்பியம்' என்னும் சொற்றொடரை நூல் உரையில் குறிப்பிட்டவர்:
  • அ) சிவஞான முனிவர்
  • ஆ) மயிலைநாதர்
  • இ) ஆறுமுகநாவலர்
  • ஈ) இளம்பூரணர்
இயல் 5 - இலக்கணத் தேர்ச்சிகொள்
43. சரியானவற்றைப் பொருத்தித் தேர்க: அ) காதை - 1) கந்தபுராணம் ஆ) சருக்கம் - 2) சீவகசிந்தாமணி இ) இலம்பகம் - 3) சூளாமணி ஈ) படலம் - 4) சிலப்பதிகாரம்
  • அ) 4, 3, 2, 1
  • ஆ) 3, 4, 1, 2
  • இ) 3, 4, 2, 1
  • ஈ) 4, 1, 2, 3
இயல் 5 - பலவுள் தெரிக
44. திரைப்படத்தில் கதையும் சொல்லலாம் என்பதை முதன்முதலில் நிகழ்த்திக் காட்டியவர்:
  • அ) லூமியர் சகோதரர்கள்
  • ஆ) ஜார்ஜ் மிலி
  • இ) தாமஸ் ஆல்வா எடிசன்
  • ஈ) சாமிக்கண்ணு வின்சென்ட்
இயல் 5 - பலவுள் தெரிக
45. 'மனித குலத்திற்குத் தேவை போரல்ல; நல்லுணர்வும் அன்பும்தான்' என்பதை மையக்கருவாகக் கொண்ட சார்லி சாப்ளின் திரைப்படம்:
  • அ) தி கிட் (The Kid)
  • ஆ) தி சர்க்கஸ் (The Circus)
  • இ) மாடர்ன் டைம்ஸ் (Modern Times)
  • ஈ) தி கிரேட் டிக்டேட்டர் (The Great Dictator)
இயல் 5 - பலவுள் தெரிக
46. மாசித் திங்களில் நிகழும் விழாவாக மயிலைப் பதிகம் சுட்டுவது:
  • அ) விளக்குத் திருவிழா
  • ஆ) ஓண விழா
  • இ) கடலாட்டு விழா
  • ஈ) திருவாதிரை விழா
இயல் 5 - பலவுள் தெரிக
47. "உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்" - இத்தொடர் உணர்த்தும் பண்பு:
  • அ) நேர்மறைப் பண்பு
  • ஆ) தயக்கப் பண்பு
  • இ) முரண்பண்பு
  • ஈ) இவை அனைத்தும்
இயல் 5 - பலவுள் தெரிக
48. "வாளால் அறுத்துச் சுடினும்..." - இவ்வடியின் மூலம் குலசேகராழ்வார் வெளிப்படுத்துவது:
  • அ) விளையாட்டு
  • ஆ) மருத்துவம்
  • இ) போர்
  • ஈ) வேளாண்மை
இயல் 6 - இலக்கணத் தேர்ச்சிகொள்
49. பின்வருவனவற்றுள் தொன்மத்திற்குப் பொருந்ததாத ஒன்றைத் தேர்க.
  • அ) கர்ணன் தோற்றான் போ.
  • ஆ) வயதில் சிறியவர், ஆனாலும் தலைவர்!
  • இ) இந்த நாரதரிடம் எச்சரிக்கையாக இரு.
  • ஈ) இந்தா போறான் தருமன்.
இயல் 6 - இலக்கணத் தேர்ச்சிகொள்
50. தொன்மத்தைப் பற்றிய கூற்றுகளுள் தவறான ஒன்றைத் தேர்க.
  • அ) உருவாக்கப்பட்டு இறுகிவிட்ட வடிவங்கள்
  • ஆ) பழங்கதையைக் கொண்டு கருத்தை விளக்குவது.
  • இ) நம்ப முடியாததுபோல் தோன்றும் நிகழ்ச்சிகள், செய்திகள்.
  • ஈ) விளங்காத கருத்துகளைப் பழமொழியின் மூலம் விளக்குவது.
இயல் 6 - இலக்கணத் தேர்ச்சிகொள்
51. 'சாப விமோசனம்', 'அகலிகை' கதைகளில் தொன்மங்களைப் பயன்படுத்தியவர்:
  • அ) கு. அழகிரிசாமி
  • ஆ) புதுமைப்பித்தன்
  • இ) ஜெயமோகன்
  • ஈ) எஸ். இராமகிருஷ்ணன்
இயல் 6 - இலக்கணத் தேர்ச்சிகொள்
52. பண்புக் குறியீடுகளைக் கதைமாந்தர்களோடு பொருத்துக: அ) அறம் - 1) கர்ணன் ஆ) வலி - 2) மனுநீதிச்சோழன் இ) நீதி - 3) பீமன் ஈ) வள்ளல் - 4) தருமன்
  • அ) 3, 2, 1, 4
  • ஆ) 4, 3, 2, 1
  • இ) 2, 4, 3, 1
  • ஈ) 4, 3, 1, 2
இயல் 6 - பலவுள் தெரிக
53. 'ஏற்ற காலத்தை அறிந்து ஏற்ற இடத்தையும் தெரிந்து ஒரு செயலை மேற்கொண்டால் உலகத்தையே அடைய நினைத்தாலும் கைகூடும்' என்று திருவள்ளுவர் குறிப்பிடும் அதிகாரம்:
  • அ) ஊக்கமுடைமை
  • ஆ) காலமறிதல்
  • இ) அறிவுடைமை
  • ஈ) செங்கோன்மை
இயல் 6 - பலவுள் தெரிக
54. 'பில்கிரிம்ஸ் புராகிரஸ்' (Pilgrim's Progress) என்னும் ஆங்கில நூலின் தழுவல் நூல் எது?
  • அ) தேம்பாவணி
  • ஆ) இயேசு காவியம்
  • இ) இரட்சணிய யாத்திரிகம்
  • ஈ) இரட்சணிய மனோகரம்
இயல் 6 - பலவுள் தெரிக
55. 'கிறித்துவக் கம்பர்' என்று அழைக்கப்படுபவர் யார்?
  • அ) கால்டுவெல்
  • ஆ) ஜி.யு.போப்
  • இ) வேதநாயகர்
  • ஈ) எச்.ஏ.கிருட்டினனார்
இயல் 6 - பலவுள் தெரிக
56. புறநானூற்றை முதன்முதலாக அச்சில் பதிப்பித்தவர் யார்?
  • அ) உ.வே. சாமிநாதர்
  • ஆ) மாயூரம் வேதநாயகர்
  • இ) மா.இராசமாணிக்கனார்
  • ஈ) சி.வை. தாமோதரனார்
இயல் 6 - பலவுள் தெரிக
57. சோழநாட்டில் இறக்குமதிப் பொருள்களுக்குச் சுங்கம் விதித்த செய்தியைக் கூறும் நூல் எது?
  • அ) பதிற்றுப்பத்து
  • ஆ) பட்டினப்பாலை
  • இ) கலித்தொகை
  • ஈ) நெடுநல்வாடை

தேர்வு முடிந்தது!

உங்களது மதிப்பெண்:

0 / 57

``` html பன்னிரண்டாம் வகுப்பு - பொதுத்தமிழ் மாதிரி வினாத்தாள்

பன்னிரண்டாம் வகுப்பு

பொதுத்தமிழ் - மாதிரி வினாத்தாள் - 3

⏱ காலம்: 3 மணி நேரம்
🎯 மதிப்பெண்கள்: 90
பகுதி - I
அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. (14 x 1 = 14)
1. "மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது தன்னேரிலாத தமிழ்" - இவ்வடிகளில் பயின்று வந்துள்ள தொடை நயங்களை தேடுக.
2. பின்வருவனவற்றுள் தொன்மத்திற்கு பொருந்தாத ஒன்றை தேர்க.
3. ‘திராவிட வித்தியா பூஷணம் ' என்னும் பட்டம் பெற்றவர் யார்?
4. "வினாதல் வினாயவை விடுத்தல் என்றிவை கடனாக் கொளினே மடநனி இகக்கும்" - இந்நூற்பா இடம்பெற்ற நூல் எது?
5. சவரி பிறப்பு நீங்கு படலம் இடம்பெற்றுள்ள காண்டம் எது?
``` ``` html பன்னிரண்டாம் வகுப்பு - பொதுத்தமிழ் மாதிரி வினாத்தாள்

பன்னிரண்டாம் வகுப்பு - பொதுத்தமிழ்

மாதிரி வினாத்தாள் - பொதுத்தேர்வு 2026

காலம் : 3 மணி நேரம்
மதிப்பெண்கள் : 90

பகுதி - I

14 x 1 = 14

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக.

  • 1. 'கிறித்தவக் கம்பர்' என்று அழைக்கப்பட்டவர் யார்?

  • 2. 'சாபவிமோசனம்', 'அகலிகை' கதைகளில் தொன்மங்களைப் பயன்படுத்தியவர் யார்?

  • 3. மாசி திங்களில் நிகழும் விழாவாக மயிலை பதிகம் சுட்டுவது எது?

  • 4. "ஒட்டுப் போடாத ஆகாயம் போல - இந்த உலகமும் ஒன்றேதான்..." - இக்கவிதையில் பயின்றுவருவது எது?

  • 5. சுவடியோடு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.

  • 6. ஆராய்ந்து சொல்கிறவர் யார்?

  • 7. நகை என்னும் மெய்ப்பாடு தோன்றும் நிலைக்களன்களுள் ஒன்று எது?

  • 8. 'சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்' என்று குறிப்பிட்டவர் யார்?

  • 9. நகுலன் அவர்களின் இயற்பெயர் என்ன?

  • 10. “எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே” என்னும் பாரதியின் பாடல் வெளிப்படுத்துவது எது?

  • 11. கம்பர் தம் நூலுக்கு இட்ட பெயர் என்ன?

  • 12. பொருத்துக:

    அ) அன்பும் அறனும்1) பண்புத்தொகை
    ஆ) நன்கலம்2) ஆகுபெயர்
    இ) மறத்தல்3) எண்ணும்மை
    ஈ) உலகு4) தொழிற்பெயர்
  • 13. கூற்று: இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர்.
    காரணம்: கிழக்கிந்திய நிறுவனத்தின் வணிகம், துணி சார்ந்ததாகவே இருந்தது.

  • 14. மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய சொல்லாய்வு கட்டுரைகளின் தொகுப்பு எது?

பகுதி - II

மதிப்பெண்கள்: 24
பிரிவு - 1 (எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை தருக) 3 x 2 = 6
  • 15. அணி இலக்கணத்தை மட்டுமே கூறும் இலக்கண நூல்கள் யாவை?
  • 16. சினத்தை ஏன் காக்க வேண்டும்?
  • 17. மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.
  • 18. கலிவிழா, ஒலிவிழா - விளக்கம் தருக.
பிரிவு - 2 (எவையேனும் இரண்டனுக்கு விடை தருக) 2 x 2 = 4
  • 19. தமிழர் வளர்த்த அழகுக்கலைகள் நூல் பற்றி குறிப்பு வரைக?
  • 20. புக்கில், தன்மனை - குறிப்பு வரைக.
  • 21. பருவத்தே பயிர்செய் - நேர மேலாண்மையோடு பொருத்தி எழுதுக.
பிரிவு - 3 (எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடை தருக) 7 x 2 = 14
  • 22. பத்தியைப் படித்து தேவையான இடங்களில் நிறுத்தக்குறிகளை இட்டு எழுதுக.
    இளங்கோவடிகள் சாதனாரிடம் முன் செய்த வினை நிறைவேறும் காலம் என்றீர்களே அவர்களுடைய முந்தைய வினை யாது அதன் விளைவு என்ன நிகழ்ந்த காலம் யாது அதை நீங்கள் அறிந்திருந்தால் கூறுக எனக் கேட்டார்
  • 23. கீழ்காணும் தொடர்களில் அடைப்புக்குள் உள்ள பெயர்ச்சொல்லைத் தொடர்களுக்கு ஏற்றவாறு மாற்றி எழுதுக.
    அ) நேற்று முதல் அணை (நீர்) மட்டம் உயர்ந்து வருகிறது.
    ஆ) முருகன் (வேகம்) சென்றும் பேருந்தை பிடிக்க இயலவில்லை.
  • 24. பொருள் வேறுபாடு அறிந்து தொடர் அமைக்க: அ) கான் / காண் ஆ) ஊண் / ஊன்
  • 25. எண் வகை மெய்ப்பாடுகள் யாவை?
  • 26. தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக:
    அ) மானம் பார்த்த பூமியில் பயிறு வகைகள் பயிரிடப்படுகின்றன.
    ஆ) ஐப்பசி அடமழையில் ஊருனி நிறைந்தது.
  • 27. பொருத்தமான வேற்றுமை உருபுகளைச் சேர்த்து முறையான தொடர்களாக ஆக்குக:
    அ) மாறன் பேச்சுத்திறன் யார் வெல்ல முடியும்.
    ஆ) சான்றோர் மதிப்பு கொடுத்து வாழ்வு உயரலாம்.
  • 28. கலைச்சொல் தருக: அ) EMOTION ஆ) ANTHROPOLOGY
  • 29. ஏதேனும் ஒன்றனுக்கு புணர்ச்சி விதி தருக: அ) பெருந்தேர்
  • 30. ஏதேனும் ஒன்றனுக்கு உறுப்பிலக்கணம் தருக: அ) கலங்கி ஆ) பொலிந்தான்

பகுதி - III

மதிப்பெண்கள்: 24
பிரிவு - 1 (எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை தருக) 2 x 4 = 8
  • 31. புறநானூற்றுப் பாடலின் கருத்திற்கு இணையான குறட்பாக்களைக் குறிப்பிடுக.
  • 32. “ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும்” - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
  • 33. ஒருமுக எழினி, பொருமுக எழினி, கரந்துவரல் எழினி - விளக்குக.
  • 34. சினத்தால் வரும் கேட்டினைக் கூறுக.
பிரிவு - 2 (எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை தருக) 2 x 4 = 8
  • 35. பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக் குடும்பம் - விளக்கம் எழுதுக.
  • 36. திரைப்படத்தின் காட்சி ஆற்றலை எடுத்துக்காட்டுடன் புலப்படுத்துக.
  • 37. சென்னையின் பண்பாட்டு அடையாளங்களில் இன்றும் நிலைத்து இருப்பனவற்றைக் குறிப்பிடுக.
  • 38. மணலில் எழுதியது முதல் தற்காலம் வரை எழுதும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை தொகுத்துரைக்க.
பிரிவு - 3 (எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை தருக) 2 x 4 = 8
  • 39. அ) “சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் பணையைச் சுடும்." - இக்குறளில் வரும் அணியை விளக்குக.
    அல்லது
    ஆ) உவமை அணியை விளக்கு.
  • 40. அ) பொதுவியல் திணையை விளக்குக.
    அல்லது
    ஆ) பொருண்மொழிக் காஞ்சித் துறையை விளக்குக.
  • 41. கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படத்தைப் புரிந்துகொண்டு பத்தியாக எழுதுக.
    சங்க இலக்கியம் (ஈராயிரம் ஆண்டுகள் பழமையுடையது):
    எட்டுத்தொகை: அகம் (நற்றிணை, ஐங்குறுநூறு, அகநானூறு, கலித்தொகை, குறுந்தொகை), புறம் (பதிற்றுப்பத்து, புறநானூறு), அகம்+புறம் (பரிபாடல்)
    பத்துப்பாட்டு: அகம் (குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, பட்டினப்பாலை), புறம் (மதுரைக்காஞ்சி, திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை)
  • 42. மாற்றுச் சான்றிதழ் வேண்டி விண்ணப்பம் ஒன்றினை எழுதுக.
  • 43. பின்வரும் பழமொழியை வாழ்க்கை நிகழ்வோடு பொருத்தி எழுதுக:
    அ) எறும்பு ஊறக் கல்லும் தேயும்.
    அல்லது
    ஆ) வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.

    குறிப்பு (செவி மாற்றுத்திறனாளிகளுக்கான மாற்று வினா): சொற்றொடர்ப் பிழைகளை நீக்கி எழுதுக.
    அ) கோவலன் மதுரைக்குச் சென்றது. ஆ) பறவைகள் நெல்மணிகளை வேகமா கொத்தி தின்றது.
    இ) குதிரையும் யானையும் வேகமாக ஓடியது. ஈ) அவன் வெண்மதியிடம் பேசினாய்.

பகுதி - IV

3 x 6 = 18

அனைத்து வினாக்களுக்கும் விரிவான விடை தருக.

  • 44. அ) “சினத்தைக் காத்தல்” வாழ்வை மேன்மைப்படுத்தும் - இக்கூற்றை முப்பால் வழி விரித்துரைக்க.
    அல்லது
    ஆ) நாட்டிய அரங்கின் அமைப்பை சிலப்பதிகாரத்தின் வழி விளக்கி எழுதுக.
  • 45. அ) குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது - எவ்வாறு? விளக்குக.
    அல்லது
    ஆ) திரைப்படத்துறை என்பது ஆயிரம் பேரைக் காப்பாற்றும் தொழிலா? அல்லது கலைகளின் சங்கமமா? உங்கள் கருத்தை கட்டுரையாக்குக.
  • 46. அ) சூரியனைப் பிரசவிக்கும் பாறை எனும் சிறுகதை உணர்த்தும் கருத்துக்களைச் சுவை குன்றாமல் சுருக்கி வரைக.
    அல்லது
    ஆ) கோடை மழை கதை வாயிலாக விளக்கப்படும் மனிதநேய பண்புகளை விளக்குக.

பகுதி - V

4 + 2 = 6

47. அடிபிறழாமல் செய்யுள் வடிவில் விடை தருக.

  • அ) ‘குழல்வழி...’ எனத் தொடங்கும் சிலப்பதிகாரப் பாடலை எழுதுக.
  • ஆ) 'சினம்' என முடியும் திருக்குறளை எழுதுக.

வினாத்தாள் வடிவமைப்பு © 2026 | மாணவர்களின் கல்வி நலனுக்காக

``` ``` html 12th Tamil - Public Exam - Model Question Paper 1

பன்னிரண்டாம் வகுப்பு - பொதுத்தமிழ்

பொதுத்தேர்வு - 2026 | மாதிரி வினாத்தாள் - 1

காலம் : 3 மணி நேரம் மதிப்பெண்கள் : 90
பகுதி - I 14 × 1 = 14

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக

1. ச. த. சற்குணரின் உரை ஏற்படுத்திய ஆர்வத்தினால் மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல்:

2. தமிழில் திணைப்பாகுபாடு ____________ அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது.

3. “நரம்புகளுக்குள் வீணை மீட்டிக்கொண்டிருக்கிறது” என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது:

4. வையகம் வானகமும் ஆற்றலறிது - எதற்கு?

5. குடும்பம் என்னும் சொல் முதன்முதலில் இடம்பெற்றுள்ள நூல்:

6. கல்வியை நிலைக்களன்களாகக் கொண்ட மெய்ப்பாடு:

7. கண்ணாடியாகும் கண்கள் என்னும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்:

8. திண்ணியர் என்பதன் பொருள்:

9. “வாளால் அறுத்துச் சுடினும்..” - இவ்வடியின் மூலம் குலசேகராழ்வார் வெளிப்படுத்துவது:

10. புறநானூற்றை முதன்முதலாக அச்சில் பதிப்பித்தவர்:

11. 'சாபவிமோசனம் ', 'அகலிகை ' கதைகளில் தொன்மங்களைப் பயன்படுத்தியவர்:

12. பிழையான தொடரைக் கண்டறிக:

13. உத்தம சோழன் நடத்தி வரும் திங்களிதழ்:

14. 14 நரம்புகளைக் கொண்ட யாழ்:

பகுதி - II
பிரிவு - 1
3 × 2 = 6

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக

15. கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட, தமிழின் துணை வேண்டும் என்கிறார்?
16. இராமன் சுக்ரீவனிடம் கூறிய செய்திகளை எழுதுக.
17. வறுமையும் சிறுமையும் தருவது எது?
18. இறைமகனாரின் இன்னலைக் கண்டு மக்கள் எவ்விதம் புலம்பினர்?
பிரிவு - 2
2 × 2 = 4

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை தருக.

19. பின்னணி இசை, படத்தின் காட்சியமைப்புக்கு எவ்வாறு உயிரූட்டும்? சான்று தருக.
20. அக்காலத்துக் கல்விமுறையில் மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்கள் எவை?
21. இந்தோ - சாரசனிக் கட்டடக்கலை - குறிப்பு வரைக.
பிரிவு - 3
7 × 2 = 14

எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடை தருக.

22. ஏதேனும் ஒன்றனுக்கு புணர்ச்சி விதி தருக.

அ) புதுப்பெயல்
( அல்லது )
ஆ) ஒருமையுடன்

23. ஏதேனும் ஒன்றனுக்கு உறுப்பிலக்கணம் தருக.

அ) களைந்து
( அல்லது )
ஆ) விம்முகின்ற

24. மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.

அ) அலை, அளை, அழை
( அல்லது )
ஆ) தலை, தளை, தழை

25. பொருள்கோள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
26. தொடரில் இடம்பெற்றுள்ள மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக:

அ) பனை மட்டையால் கூரை வைத்திருந்தனர்.
ஆ) முருகன் சோறு சாப்பிட்டுப் பால் குடித்தான்.

27. பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக:

அ) வூட்டாண்ட வெளையாண்ட கொயந்தையை அப்பா எங்க இஸ்துகினு போனாரு.

28. மரபுச் சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.

அ) ஆற அமர
ஆ) ஆணி அடித்தாற் போல

29. கலைச் சொல் தருக:

அ) SOUND EFFECT
ஆ) HABITAT

30. இலக்கணக் குறிப்பு வரைக:

அ) உயர்ந்தோர்
ஆ) ஒரீஇ

பகுதி - III
பிரிவு - 1
2 × 2 = 4

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை தருக

31. வாடைக்காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர்?
32. இராமலிங்க அடிகள் கந்தவேளிடம் எத்தகையோர் உறவு வேண்டுமெனக் கேட்கிறார்?
33. அறிவின் மேன்மை பற்றித் திருக்குறள் வழி நீவிர் கருதுவன யாவை?
34. “வருபவர் எவராயினும் நன்றி செலுத்து” - இடம் சுட்டிப் பொருள் விளக்குக.
பிரிவு - 2
2 × 2 = 4

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை தருக

35. மயிலை சீனி. வேங்கடசாமியின் வரலாற்று ஆய்வுகள் பற்றி விளக்குக.
36. வேளாண் மேலாண்மை குறித்து நீவிர் பரிந்துரைப்பனவற்றை எழுதுக.
37. மணலில் எழுதியதுமுதல் தற்காலம்வரை எழுதும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தொகுத்துரைக்க.
38. சென்னை ‘அறிவின் நகரம்' என்பதைச் சான்றுகளுடன் விளக்குக.
பிரிவு - 3
3 × 4 = 12

எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை தருக.

39. அ) “அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது” - இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.
அல்லது
ஆ) தொழில் உவமையணியைச் சான்றுடன் விளக்குக.
40. இலக்கிய நயம் பாராட்டுக. (மையக்கருத்துடன் ஏற்புடைய நயங்கள் மூன்றை எழுதுக.)
முச்சங்கக் கூட்டி
முதுபுலவர் தமைக் கூட்டி
அச்சங்கத் துள்ளே
அளப்பரிய பொருள்கூட்டி
சொற்சங்க மாகச்
சுவைமிகுந்த கவிகூட்டி
அற்புதங்க ளெல்லாம்
அமைத்த பெருமாட்டி!
- கண்ணதாசன்
41. அ) வாகைத் திணையைச் சான்று தந்து விளக்குக.
அல்லது
ஆ) கூதிர்ப்பாசறை சான்றுடன் விளக்குக.
42. தமிழாக்கம் தருக:

A) LEARNING IS A TREASURE THAT WILL FOLLOW IT'S OWNER EVERYWHERE.
B) A NEW LANGUAGE IS A NEW LIFE.
C) IF YOU WANT PEOPLE TO UNDERSTAND YOU, SPEAK THEIR LANGUAGE.
D) OLD IS GOLD.

43. பின்வரும் பழமொழிகளை வாழ்க்கை நிகழ்வோடு பொருத்தி எழுதுக:

அ) ஆனைக்கும் அடி சறுக்கும்
( அல்லது )
ஆ) அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

செவி மாற்றுத்திறனாளர்களுக்கான மாற்று வினா

கீழ்க்காணும் பத்தியைப் படித்து ஐந்து வினாக்களை உருவாக்குக:

மொழி என்பது மக்கள் படைத்துக் காக்கும் அரியதொரு கலை. மொழியே மக்களின் அறிவை வளர்த்து உயர்த்தும் அரிய கருவியாகவும் உள்ளது. பெற்ற தாயின் முதல் வேட்கை தன் குழந்தையுடன் பேசுதல். அவள் முதலில் அடையுமு் பெரிய மகிழ்ச்சி, குழந்தையின் பேச்சைக் கேட்பதே ஆகும்.குழந்தையின் மனவளர்ச்சியோடு தொடர்புடையது மொழி வளர்ச்சியே ஆகும். மனம் என்பது பெரும்பாலும் மொழியால் வளர்ந்து அமைந்தது. மனத்தின் வளர்ச்சிக்கு ஏற்பவே பேசுவோரின் மொழியும் வளர்ச்சி பெற்று நிற்கும். மக்கள் அனைவரும் மொழிக்கு ஆசிரியராகவும் உள்ளனர்; மாணவராகவும் உள்ளனர். மொழியை வளர்ப்பவரும் மக்களே; மொழியால் வளர்பவரும் மக்களே.
- மொழி வரலாறு (மு. வரதராசனார்)
பகுதி - IV 3 × 6 = 18

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக

44. அ) பண்பின் படிமமாகப் படைக்கப்பட்ட இராமன், பிற உயர்களுடன் கொண்டிருந்த உறவுநிலையைப் பாடப்பகுதிவழி நிறுவுக.
அல்லது
ஆ) செய்ந்நன்றியறிதலே அறம் என்பதை வாயுறை வாழ்த்தின் துணைகொண்டு நிறுவுக.
45. அ) நிருவாக மேலாண்மை குறித்து வெ. இறையன்பு கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
அல்லது
ஆ) 'மயிலை சீனி. வேங்கடசாமி ஓர் ஆராய்ச்சிப் பேரறிஞர் ' என்பதனைச் சான்றுகளுடன் விளக்குக.
46. அ) பொறுப்புணர்ச்சியின்றி இருந்த ஊரைத் தன் பொறுப்புணர்வால் மாற்றிய மருதனின் பண்பu நலத்தை விவரிக்க.
அல்லது
ஆ) நடிகர் திலகத்தைக் கண்ட பாலசந்திரனின் நினைவலைகளை நயத்துடன் விவரிக்க.
பகுதி - V 4 + 2 = 6

அடிபிறழாமல் செய்யுள் வடிவில் விடை தருக

47. அ) "ஒருமையுடன் நினது..." எனத் தொடங்கும் தெய்வமணிமாலைப் பாடலை அடிபிறழாமல் எழுதுக.
ஆ) "பவர்" என முடியும் குறளை அடிபிறழாமல் எழுதுக.
Interactive Mode Active
``` 12-ஆம் வகுப்பு தமிழ் மாதிரி வினாத்தாள்

அறைப்பாடத் தேர்வு - 2

12-ஆம் வகுப்பு | பொதுத் தமிழ்

காலம்: 3 மணி நேரம்
மதிப்பெண்கள்: 90

பகுதி - I

அனைத்து வினாக்களுக்கும் விடையளி (14 × 1 = 14)
1. சுவடியோடு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க:
அ) இலக்கியம்
ஆ) கணிதம்
இ) புவியியல்
ஈ) வானியல்
2. சுவடியோடு பொருந்தாத இன்னொன்றைத் தேர்வு செய்க:
அ) வசம்பு
ஆ) கருக்காய்
இ) மாவிலைக்கரி
ஈ) மணத்தக்காளி
3. ஆராய்ந்து சொல்கிறவர் யார்?
அ) அரசர்
ஆ) சொல்லியபடி செய்பவர்
இ) தூதுவர்
ஈ) உறவினர்
4. 'நகை' என்னும் மெய்ப்பாடு தோன்றும் நிலைக்களன்களுள் ஒன்று எது?
அ) கொடை
ஆ) பிணி
இ) பேதைமை
ஈ) செல்வம்
5. பின்வருவனவற்றுள் தொன்மத்திற்குப் பொருந்தாத ஒன்றைத் தேர்க:
அ) கர்ணன் தோற்றான் போ
ஆ) போறான் தருமன்
இ) இந்த நாரதரிடம் எச்சரிக்கையாக இரு
ஈ) வயதில் சிறியவர், ஆனாலும் தலைவர்
6. 'கிறித்துவுக் கம்பர்' என்று அழைக்கப்படுபவர் யார்?
அ) கால்டுவெல்
ஆ) ஜி. யு. போப்
இ) வேதநாயகர்
ஈ) எச். ஏ. கிருட்டினனார்
7. சோழநாட்டில் இறக்குமதிப் பொருள்களுக்குச் சுங்கம் வசூலித்த செய்தியைக் கூறும் நூல் எது?
அ) பதிற்றுப்பத்து
ஆ) பட்டினப்பாலை
இ) நன்னூல்
ஈ) நெடுநல்வாடை
8. பொருத்துக:
பிரிவு அ பிரிவு ஆ
அ) அறம் 1) கர்ணன்
ஆ) வலிமை 2) மனுநீதிச்சோழன்
இ) நீதி 3) பீமன்
ஈ) வள்ளல் 4) தருமன்

பகுதி - II

எவையேனும் மூன்றனுக்கு மட்டும் விடையளி (3 × 2 = 6)
15. இறைமகனாரின் இன்னலைக் கண்டு மக்கள் எவ்விதம் புலம்பினர்?
16. கலிவிழா - ஒலிவிழா விளக்கம் தருக.
17. வறுமையும் சிறுமையும் தருவது எது?
18. யாழின் வகைகள் யாவை?
"மதிப்பெண் உயர்ந்தால் - உன் மதிப்பும் உயரும்"

பகுதி - III

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளி (2 × 4 = 8)
30. "ஈசன் மகன் நின்றனர் ஓர் ஏழையென ஓர்மின்" - இடம் சுட்டிப் பொருள் விளக்குக.
31. இராமலிங்க அடிகள் கந்தவேளிடம் எத்தகையோர் உறவு வேண்டுமெனக் கேட்கிறார்?
32. அறிவின் மேன்மை பற்றித் திருக்குறள் வழி நின்று விளக்குக.

வடிவமைப்பு: தமிழ்த்துறை ஆசிரியர்கள்

மாணவர்கள் தேர்விற்கு வாழ்த்துகள்!

 

மேல்நிலை இரண்டாம் ஆண்டு - தமிழ்

காலாண்டுத் தேர்வு - முக்கிய வினாக்கள் 2026 - 27

https://tamilpuz.blogspot.com/

இயல் ஒன்று: தன்னேர் இலாத தமிழ்

தண்டியலங்கார உரை மேற்கோள் பாடல்:
"ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும்
ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் (று) ஏனையது
தன்னேர் இலாத தமிழ்!"

பா வகை: நேரிசை வெண்பா
அணி: பொருள் வேற்றுமை அணி

குறுவினா

  • 1. விடியல், வனப்பு இரு சொற்களையும் ஒருங்கிணைத்துத் தொடர் அமைக்க.

  • 2. கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட, தமிழின் துணை வேண்டும் என்கிறார்?

  • 3. தமிழில் பிழையின்றி எழுதுவதற்கு மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் யாவை?

  • 4. "விரிபெரு தமிழர் மேன்மை ஓங்கிடச் செய்வதொன்றே உயிர்ப்பணியாக் கொண்டோன்” யார், யாரைப் பற்றி எதற்காகக் கூறுகிறார்?

சிறுவினா

  • 1. 'ஏங்கொলিநீர் ஞாலத்து இருளகற்றும்'- இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.

  • 2. "செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்துப் பூக்காடாம் வானமெல்லாம்" தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக.

நெடுவினா

  • 1. பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்துகொண்ட மொழிப்பற்று, சமூகப்பற்று ஆகியவற்றை விவரிக்க.

  • 2. தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.

அணி விளக்கம்: பொருள் வேற்றுமை அணி

விளக்கம்: இருவேறு பொருள்களுக்கிடையே ஒற்றுமையை முதலில் கூறிப் பின் வேறுபடுத்திக் காட்டுவது பொருள் வேற்றுமை அணி எனப்படும்.

கலைச் சொல் அறிவோம்

  • Anthropology - மானுடவியல்

  • Archaeology - தொல்லியல்

  • Fine Arts - கவின்கலைகள்

  • Field Study - கள ஆய்வு

  • Epigraphy - கல்வெட்டியல்

இயல் இரண்டு: நெடுநல்வாடை (நக்கீரர்)

"மாமேயல் மறப்ப மந்தி கூரப்
பறவை படிவன வீழக் கறவை
கன்றுகோள் ஒழியக் கடிய வீசிக்
குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள்."

பா வகை: நேரிசை ஆசிரியப்பா

திருக்குறள் - வாழ்வியல்

இல்வாழ்க்கை

1. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. (நிரல்நிறை அணி)

2. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

செய்ந்நன்றி அறிதல்

1. செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்ற லரிது.

2. நன்றி மறப்பது நன்றன்று; நன்றல்லது அன்றே மறப்பது நன்று.

3. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

வெகுளாமை

1. தன்னைத்தான் காக்கின் சினம்காக்க; காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்.

2. சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையைச் சுடும்.

ஊழ்

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவே மிகும்.

குறுவினா

  • 1. இனநிரை - பிரித்துப் புணர்ச்சி விதி எழுதுக.

  • 2. 'நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது' - விளக்கம் தருக.

  • 3. ஞாலத்தின் பெரியது எது?

  • 4. சினத்தை ஏன் காக்க வேண்டும்?

சிறுவினா

  • 1. வாடைக் காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர்?

  • 2. சென்னை 'அறிவின் நகரம்' என்பதைச் சான்றுகளுடன் விளக்குக.

  • 3. "அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது" - இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.

  • 4. இல்வாழ்க்கை சிறப்புற அறநெறியோடு வாழ்தலின் முக்கியத்துவத்தை வள்ளுவர் வழி நின்று விளக்குக.

  • 5. கீழ்க்காணும் குறளில் ஏகதேச உருவக அணி எவ்வாறு பயின்று வருகிறது என்பதை விளக்குக. "சினம்என்னும் சேர்ந்ததாரைக் கொல்லி இனம்என்னும் ஏமப் புணையைச் சுடும்".

நெடுவினா

  • 1. நெடுநல்வாடையில் நக்கீரர் காட்டும் மழைக்கால வருணனையைத் தொகுத்து எழுதுக.

  • 2. புயல்தாக்கத்தினால் குடியிருப்புகளுக்கு அருகில் அறுந்துகிடக்கும் மின் இணைப்புகளைச் சரி செய்யக்கோரி உங்கள் ஊர் மின்வாரியப் பொறியாளருக்குக் கடிதம் எழுதுக.

  • 3. செய்ந்நன்றியறிதலே அறம் என்பதை வாயுறை வாழ்த்தின் துணைகொண்டு நிறுவுக.

திருக்குறள் அமைப்புக் குறிப்பு



பால்

அதிகாரம்

இயல்

இயல்களின் பெயர்கள்

அறம்

38

4

பாயிரவியல் 4, இல்லறவியல் 20, துறவறவியல் 13, ஊழியல் 1

பொருள்

70

3

அரசியல் 25, அமைச்சியல் 32, ஒழிபியல் 13

இன்பம்

25

2

களவியல் 07, கற்பியல் 18

அணி விளக்கங்கள்

1. நிரல் நிறை அணி (குறள் எண்-1):
விளக்கம்: சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி, அவ்வரிசைப்படியே பொருள் கொள்ளச் செய்வது நிரல்நிறை அணி ஆகும்.
பொருத்தம்: அன்பும் அறனும் உடைய இல்வாழ்க்கை என்று கூறிவிட்டு அதற்கு இணையாகப் பண்புடையதாகவும் பயன் மிக்கதாகவும் அது அமையும் என வரிசை முறைப்படி பொருள் கொள்ளுமாறு வருவதால், இது நிரல்நிறை அணிக்குப் பொருத்தமாயிற்று.

2. ஏகதேச உருவக அணி:
விளக்கம்: ஒரு பொருளை உருவகம் செய்து, அதற்கு இணையான மற்றொரு பொருளை உருவகம் செய்யாமல் விட்டுவிடுவது ஏகதேச உருவக அணி ஆகும்.
பொருத்தம்: இனத்தைத் தெப்பமாக உருவகம் செய்த வள்ளுவர், உலக வாழ்க்கையைக் கடலாக உருவகப்படுத்தவில்லை. எனவே இது ஏகதேச உருவக அணிக்குப் பொருத்தமாயிற்று.

கலைச் சொல் அறிவோம்

  • Museum - அருங்காட்சியகம்

  • Archive - ஆவணக்காப்பகம்

  • Hardware - வன்பொருள்

  • Green Belt Movement - பசுமை வளாக இயக்கம்

இயல் மூன்று: கம்பராமாயணம் (கம்பர்)

குகனோடு ஐவரான பாடம்:
"முன்பு; பின் குன்று சூழ்வான்
மகனொடும் அறுவர் ஆனேம்;
எம்முழை அன்பின் வந்த
அகன் அமர் காதல் ஐய!
நின்னொடும் எழுவர் ஆனேம்;
புகல் அருங் கானம் தந்து
புதல்வரால் பொலிந்தான் நுந்தை." (6507)

பா வகை: அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

இராமன் கூற்றுப் பாடல்:
"துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது? அது அன்றிப்
பின்பு உளது; இடை மன்னும் பிரிவு உளது என உன்னேல்;
முன்பு உளெம் ஒரு நால்வேம் முடிவு உளது என உன்னா
அன்பு உள, இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்" (1995)

பா வகை: கலி விருத்தம்

குறுவினா

  • 1. புக்கில், தன்மனை - சிறு குறிப்பு எழுதுக.

  • 2. "துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது" என்ற இராமனின் கூற்று பின்வரும் இரு பழமொழிகளில் எதற்குப் பொருந்தும்?

  • 3. சங்க காலத்தில் தாய்வழிச் சமூகமுறையில் பெண்கள் பெற்றிருந்த உரிமைகள் யாவை?

  • 4. சல சல, வந்து வந்து, கல கல, விம்மி விம்மி - இவற்றில் இரட்டைக்கிளவித் தொடர்களை எழுதி, அவற்றை எழுதும் முறையைக் கூறுக.

  • 5. திருவளர்ச்செல்வன், திருவளர் செல்வன் இவற்றில் சரியான தொடர் எது? அதற்கான இலக்கண விதி யாது?

சிறுவினா

  • 1. குகனோடு ஐவராகி, வீடணனோடு எழுவரான நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டுக.

  • 2. "வருபவர் எவராயினும் நன்றி செலுத்து" - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.

  • 3. மணந்தகம் விளக்குக.

நெடுவினா

  • 1. 'உரிமைத்தாகம்' கதையில் சகோதரர்கள் இருவரும் ஒன்றிணையாமல் இருந்திருந்தால் கதையைத் தொடர்ந்து எழுதி முடிக்க.

  • 2. குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது - எவ்வாறு? விளக்குக.

கலைச் சொல் அறிவோம்

  • Nuclear family - தனிக்குடும்பம்

  • Matriarchy - தாய்வழிச்சமூகம்

  • Culture - பண்பாடு

  • Habitat - வாழிடம்

விண்ணப்பங்கள் & படிவங்கள்

  • தட்டச்சர் பணி வேண்டி விண்ணப்பம்

    அனுப்புநர்:
    க.இனியன்,
    63. குறிஞ்சி நகர் முதல் தெரு,
    மதுரை.

    பெறுநர்:
    வசந்தம் பதிப்பகம்,
    திரு.வி.க நகர்,
    மதுரை.

    பொருள்: தட்டச்சர் பணி வேண்டி விண்ணப்பித்தல் சார்பு.

    ஐயா,
    தங்கள் அலுவலகத்தில் காலியாக உள்ள தட்டச்சர் பணிக்குத் தகுதியான நபர்கள் தேவை என 04.01.2025 அன்று வெளியான நாளிதழ் விளம்பரம் மூலம் அறிந்தேன்.
    நான் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன். தட்டச்சுத் தேர்வில் முதுநிலையில் தேர்ச்சி பெற்றுள்ளேன்.
    எனக்குப் பணியாற்ற வாய்ப்பளித்தால், செம்மையாகவும் சிறப்பாகவும் பணியாற்றுவேன். எனது சான்றிதழ்களின் நகல்களைத் தங்களின் பார்வைக்கு இத்துடன் அனுப்பியுள்ளேன்.

    இணைப்பு:
    1. தன் விவரக் குறிப்பு.
    2. கல்விச் சான்றிதழ்
    3. தட்டச்சு தேர்ச்சிச் சான்றிதழ் (தமிழ், ஆங்கிலம்)

    இடம்: மதுரை தேதி: 04.01.2025

    இப்படிக்கு,
    உண்மையுள்ள,
    இனியன்

Click to comment