பொது அறிவு - விருதுகளும் மரியாதைகளும்
சரஸ்வதி சம்மன் விருது
விருதைப் பற்றி:
சரஸ்வதி சம்மன் விருது என்பது இந்தியாவின் பட்டியலிடப்பட்ட 22 மொழிகளில்
உள்ள சிறந்த உரைநடை அல்லது கவிதை இலக்கியப் படைப்பிற்கு வழங்கப்படும்
விருதாகும். 1991 ஆம் ஆண்டு கே.கே. பிர்லா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த
விருது இந்தியாவின் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இதன்
மதிப்பு ஐந்து லட்சம் இந்திய ரூபாய் ஆகும்.
முதன் முதலில் சரஸ்வதி சம்மன் விருதைப் பெற்றவர் - ஹரிவன்ஸ்ராய் பச்சன்
(படைப்பு: Autobiography, விருது பெற்ற ஆண்டு: 1991)
முதன் முதலில் சரஸ்வதி சம்மன் விருதைப் பெற்ற பெண் - பலமணி அம்மா
(படைப்பு: நிவேதியம், விருது பெற்ற ஆண்டு: 1995)
தமிழில் முதன் முதலில் சரஸ்வதி சம்மன் விருதைப் பெற்றவர் - டாக்டர். இந்திரா பார்த்தசாரதி (படைப்பு: ராமானுஜர், விருது பெற்ற ஆண்டு: 1999)
ஆஸ்கார் விருது
விருதைப் பற்றி:
ஆஸ்கார் விருது எனப் பரவலாக அறியப்படும் அகாதமி விருதுகள் அமெரிக்காவில்
திரைத்துறைக்கு வழங்கப்படும் மிகவும் முக்கிய விருதாகும். மேலும் உலகிலேயே அதிகளவில் தொலைக்காட்சி மூலம் பார்வையிடப்படும் விருது வழங்கும் விழாக்களில்
முதன்மையான விழாவாகும். இவ்விருது முதன் முதலில் 1929ல் வழங்கப்பட்டது.
இந்தியாவில் முதல் முதலில் ஆஸ்கார் விருதைப் பெற்றவர் - 8॥8ஈப 80௯8
(விருது பெற்ற ஆண்டு: 1987)
தன்னுடைய திரைப்படப் பணிக்காக ஆஸ்கார் விருது பெற்ற முதல் இந்தியர் -சத்யஜித் ராய் (விருது பெற்ற ஆண்டு: 1992)
இந்தியாவில் முதன் முதலில் இரண்டு ஆஸ்கார் விருதுகளைப் பெற்றவர் - ஏ.ஆர்.
ரகுமான் (விருது பெற்ற ஆண்டு: 2009)
ஸீ சக்தி புரஸ்கார் விருது
விருதைப் பற்றி:
ஸீ சக்தி புரஸ்கார் விருதானது இந்தியாவில் தேசிய அளவில் பெண்களுக்கு வழங்கப்படும் மரியாதைக்குரிய ஒரு விருதாகும். இவ்விருது தனிப்பட்ட பெண்களின்
அபூர்வமான சாதனைகளுக்காக 6 வகைகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சகம் மற்றும் இந்திய அரசால் வழங்கப்படுகிறது. ஸரீ சக்தி
புரஸ்கார் விருது 1991ம் ஆண்டு இந்திய குடியரசு தலைவரால் சர்வதேச பெண்கள்
தினத்தன்று நிறுவப்பட்டது. இவ்விருதானது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 (சர்வதேச
பெண்கள் தினம்) அன்று புதுதில்லியில் வழங்கப்படுகிறது. பரிசாக 3 லட்சம் ரூபாயும்
சான்றிதழும் வழங்கப்படுகிறது.