-->

Type something and hit enter

author photo
By On
பொது அறிவு - புவியியல்‌ - விவசாய முறைகள்‌

1. வேளாண்‌ தொழிலை நிர்ணயிக்கும்‌ காரணிகள்‌ - நிலத்தோற்றம்‌, காலநிலை,
மண்வகை, நீர்‌

2. இந்தியாவின்‌ முக்கியமான உணவுப்‌ பயிர்‌ ------ ஆகும்‌ - நெல்‌

3. உலகின்‌ நெல்‌ உற்பத்தியில்‌ இந்தியா ------- இடத்தை வகிக்கிறது - இரண்டாம்‌

4. இந்திய விவசாய ஆராய்ச்சிக்‌ கழகம்‌ _____ஆம்‌ ஆண்டு தொடங்கப்பட்டது. - 1929

5. தமிழ்நாட்டின்‌ நெல்‌ களஞ்சியம்‌ - தஞ்சாவூர்‌

6. நெல்‌ அதிகமாக விளையும்‌ மண்‌ - வண்டல்‌ மண்‌

7. தேயிலை மற்றும்‌ காப்பி பயிர்‌ அதிகமாக விளையும்‌ இடம்‌ --------- - மலைச்‌சரிவுகள்‌

8. வறட்சியிலும்‌ வளரும்‌ பயிர்‌ ------- - தினைவகை

9. பருத்தி ஒரு _______பணப்பயிர்‌

10. நிலையான உணவுப்‌ பயிர்கள்‌ ----அரிசி மற்றும்‌ கோதுமை

வானவில்‌ புரட்சிகள்‌ - புரட்சி மற்றும்‌ அது எந்த உற்பத்தியை சார்ந்தது

11. பசுமைப்‌ புரட்சி - வேளாண்‌ உற்பத்தி

12. வெண்மைப்‌ புரட்சி - பால்‌ பொருட்கள்‌

13. சாம்பல்‌ புரட்சி - முட்டை மற்றும்‌ கோழிப்‌ பண்ணை

14. பொன்‌ புரட்சி - பழங்கள்‌ உற்பத்தி

15. மஞ்சள்‌ புரட்சி - எண்ணெய்‌ வித்துகள்‌

16. நீலப்புரட்சி - கடல்‌ பொருட்கள்‌

பொது அறிவு - விவசாய முறைகள்‌

1. வேளாண்மை ஒரு _____தொழிலாகும்‌ - முதன்மைை

2. வேளாண்‌ பயிர்களை உணவு பயிர்கள்‌ மற்றும்‌ -------- பயிர்கள்‌ என இரு பெரும்பிரிவுகளாகப்‌ பிரிக்கலாம்‌. - பணப்‌ பயிர்கள்‌

3._____பாசன முறையில்‌ நீர்‌ செடிகளின்‌ வேருக்கு அருகில்‌ செலுத்தப்படுகிறது.
- சொட்டு நீர்ப்பாசன முறை

4.________மற்றும்‌ மழையின்‌ அளவு வேளாண்‌ தொழிலைப்‌ பாதிக்கும்‌ கால நிலைக்‌ காரணிகளாகும்‌. - வெப்பநிலை

5. விளைநிலத்தில்‌ ஒரே ஒரு பயிர்‌ மட்டும்‌ ஒரு முறை விளைவிக்கப்பட்டால்‌ அது ____என அழைக்கப்படுகிறது. - ஒரு பயிர்‌ விளைவிக்கும்‌ முறை

6._______வேளாண்தொழிலுக்கு ஏற்ற இடமாகும்‌. - சமவெளிகள்‌

7._________வேளாண்தொழில்‌ வகையில்‌ அதிக அளவு பயிர்கள்‌
விளைவிக்கப்படுகிறது. - வணிக

8. பிரேசில்‌ நாட்டில்‌ இடப்பெயர்வு அல்லது மாற்றிட வேளாண்மை ------- என அழைக்கப்படுகிறது. - ரோக்கோ

9. நெல்‌ ஒரு ----- பயிராகும்‌. - அயன மண்டல

10. மழை குறைவாகக்‌ கிடைக்கப்‌ பெறும்‌ பகுதிகளில்‌ ----- அவசியம்‌. 
நீர்ப்பாசனம்‌

11. உலகின்‌ நெல்‌ உற்பத்தியில்‌ ______ சதவீதம்‌ ஆசியாவில்‌ விளைவிக்கப்படுகிறது. - 98 சதவீதம்‌

12. இந்தியாவில்‌ உத்திரப்‌ பிரதேசம்‌ , பஞ்சாப்‌ மற்றும்‌ அரியானா ஆகிய மாநிலங்கள்‌ அதிக அளவு ______ உற்பத்தி செய்யும்‌ மாநிலங்களாகும்‌ - கோதுமை

13. தேயிலை ஒரு ------ செடியாகும்‌ - அயண மண்டல

14. இந்தியா மற்றும்‌ வங்காளதேசம்‌ _______உற்பத்தியில்‌ முதலிடம்‌ வகிக்கின்றன- சணல்‌

15._________மனிதனது அடிப்படை உணவாகும்‌ - தானியங்கள்‌

பொது அறிவு - புவியியல்‌ - விவசாய முறைகள்‌ தமிழ்நாடு)

1. தேயிலை, காப்பி, இரப்பர்‌, மிளகு மற்றும்‌ முந்திரி போன்றவை தமிழ்நாட்டில்‌
வளரும்‌ _____ பயிராகும்‌. - தோட்டப்‌ பயிர்‌

2. தமிழ்நாட்டின்‌ முதன்மையானதும்‌, மிகப்‌ பழமையானதுமான தொழில்‌ ---
தொழிலாகும்‌. - வேளாண்மை

3.______ஐ மானாவாரிப்‌ பயிர்‌ என்று தமிழ்நாட்டில்‌ கூறுவர்‌. - புன்செய்‌

4_____சேர்ப்பதால்‌ மண்ணின்‌ நீர்‌ கொள்ளும்‌ தன்மை அதிகரிக்கும்‌. -
மணிச்சத்து / தழைச்சத்து

5. தமிழ்நாட்டின்‌ நெல்‌ ஆராய்ச்சி மையம்‌ _____ல்‌ உள்ளது - ஆடுதுறை

6. தமிழ்நாட்டின்‌ சாகுபடி பருவங்கள்‌ - 1.சொர்ண வாரி (சித்திரைப்‌ பட்டம்‌), 2.சம்பாப்‌பருவம்‌ (ஆடிப்‌ பட்டம்‌), 3.நவரை பருவம்‌ (கார்த்திகைப்‌ பட்டம்‌)

7._______தமிழ்நாட்டில்‌ முதன்மையான உணவுப்‌ பயிராகும்‌. - நெல்‌

8. தமிழ்நாட்டின்‌ முதன்மை பணப்பயிரான ------- மிகப்பெரிய பரப்பளவில்‌
பயிரிடப்படுகிறது. - கரும்பு

9. தமிழ்நாட்டின்‌ இரண்டாவது முக்கிய பணப்பயிர்‌ ----- ஆகும்‌. - புகையிலை

10. தேசிய அளவில்‌ தமிழ்நாடு மீன்‌ வளர்ப்பில்‌ --------- மாநிலமாகத்‌ திகழ்கிறது. -நான்காம்‌

11.______தமிழ்நாட்டின்‌ முதன்மை மீன்பிடித்‌ துறைமுகமாகும்‌. - தூத்துக்குடி

12. தமிழ்நாட்டில்‌ 2007 - 2008ம்‌ ஆண்டிற்கான மீன்‌ கொள்முதல்‌ ஆகும்‌. -3,93,266 டன்‌

13. ஆவின்‌ அமைப்பு ஒரு நாளில்‌ சுமார்‌______ பாலைப்‌ பதனம்‌ செய்கின்றது. -26.10 இலட்சம்‌ லிட்டர்‌

14. தமிழ்நாட்டின்‌ 2007 - 2008க்கான பால்‌ உற்பத்தி ட ஆகும்‌ - 55.86
மில்லியன்‌ டன்‌

15. தமிழ்‌ நாட்டில்‌ ____ பருவங்களில்‌ நெல்‌ பயிரிடப்படுகிறது. - மூன்று

Click to comment