பொது அறிவு - புவியியல் - மண், தாது மற்றும் இயற்கை வளங்கள்
1. மீண்டும் மீண்டும் எளிதாக உற்பத்தி செய்யக்கூடிய வளங்களை
வளங்கள் என்கிறோம். - புதுப்பிக்கத்தக்க வளங்கள்
2. பயன்பாட்டிற்குப் பிறகு மீண்டும் கிடைக்க இயலாத வளங்கள்______ வளங்கள் என்கிறோம். - புதுப்பிக்க இயலாத வளங்கள்
3. மண் ஒரு இன்றியமையாத ------ ஆகும். - புதுப்பிக்கத்தக்க இயற்கை வளம்
4. மண்ணில் அடங்கியுள்ள பொருட்கள் - மட்கிய தாவரங்கள், விலங்கின பொருட்கள், சிலிகா, களிமண், சுண்ணாம்பு போன்ற கனிமங்கள் மற்றும்,இலைமட்கு எனப்படும் உயிர்ச்சத்துப்பொருட்கள்
5. தாவரங்களின் வளர்ச்சிக்கு ஆதாரமான மண்ணிலுள்ள சத்துப்பொருட்களின்
அளவினை குறிப்பது ------- எனப்படும். - மண் வளமை
6. மண்ணின் தோற்றத்தின் அடிப்படையில் மண் வகைகள் - மண்டல மண், அயல்
மண்டல மண், உள் மண்டல மண்
7. இந்தியாவில் உள்ள மண் வகைகள் - வண்டல் மண், கரிசல் மண், செம்மண்,
சரளை மண், மலை மண், வறண்ட பாலைவன மண்
8. இயற்கை மற்றும் மனிதனின் செயல்பாடுகளால் மண் நீக்கப்படுவது -------
எனப்படும் - மண் அரிப்பு
9. இந்தியாவில் காடுகளின் மொத்த பரப்பளவு - சுமார் 63.72 மில்லியன் சதுரகிலோமீட்டர்
10. இந்தியாவில் உள்ள இயற்கை தாவரங்களின் வகைகள் - 1.வெப்பமண்டல பசுமை
மாறாக் காடுகள், 2.வெப்பமண்டல பருவகாற்று காடுகள், 3.குறுங்காடு மற்றும் முட்புதர்
காடு, 4.பாலைவனத் தாவரம், 5.மாங்ரோவ் காடுகள் (சதுப்பு நில காடுகள்),
6.மலைக்காடுகள்
11. மண்ணிலுள்ள மிக நுண்ணிய சத்துக்கள் - கந்தகம், குளோரின், செம்பு,
மாங்கனிஸ், மாலிப்தீனம், போரான், இரும்பு, கோபால்டு, துத்தநாகம்
12. மண்ணிலுள்ள பெரிய சத்துப் பொருட்கள் - நைட்ரஜன், பொட்டாசியம் மற்றும்
பாஸ்பேட்
13. வறண்ட நிலப்பகுதியில் காணப்படும் மண் ----.- ஆகும் - பாலைவன மண்
14. பருவக் காற்றுக் காடுகள் -------- என்றும் அழைக்கப்படுகின்றன. - இலையுதிர்க்காடுகள்
15. மோனோசைட் மணலில் காணப்படும் தாது ------ - யுரேனியம்
பொது அறிவு - புவியியல் - மண், தாது மற்றும் இயற்கை வளங்கள்
1. அன்றாட வாழ்வின் தேவைகளை நிறைவு செய்ய இயற்கையிலிருந்து பெறப்படும் அனைத்து பொருட்களையும் ______என்கிறோம் - இயற்கை வளங்கள்
2. இயற்கை வளங்களுக்கு சில எடுத்துக்காட்டுகள் - நிலம், காற்று, நீர், சூரிய ஒளி,மண், கனிமங்கள், நிலக்கரி, கச்சா எண்ணெய், தாவரங்கள் மற்றும் விலங்குகள்
3. பாக்சைட் எதன் தாது? - அலுமினியம்
4.கருப்புத் தங்கம் எனவும் அழைக்கப்படுகிறது. - நிலக்கரி
5. இந்தியாவின் முதல் நீர்மின் நிலையம் 1897ம் ஆண்டில் ------ நிறுவப்பட்டது. -டார்ஜிலிங்கில்
6. இந்தியாவில் வனப்பாதுகாப்புச் சட்டம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு - 1980
7. இந்தியா தேசிய வனக்கொள்கையை ______ஆம் ஆண்டில் ஏற்படுத்தியது. -1894
8. கனிம வளங்களின் இரு வகைகள் - உலோகக் கனிமங்கள், உலோகமல்லாத கனிமங்கள்
9. இந்தியாவின் முக்கிய ஸிசக்தி வளம் - நிலக்கரி
10. நாட்டின் எரிசக்தி தேவையை ட... காடுகள் பூர்த்திசெய்கின்றன - 40 சதவீதம்
11. நாகரீகத்தின் முதுகெலும்பு என வர்ணிக்கப்படும் தாது - இரும்பு
12. இந்தியாவில் உள்ள இரும்புத்தாதுவின் இருப்பு சதவீதம் - 20 சதவீதம்
13. இரும்பு எஃகு தொழிற்சாலைகளில் ------ முக்கிய பங்காற்றுகிறது. - மாங்கனீசு
14. மின்சக்தி வழிகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. - மூன்று
(1.அனல்மின்சக்தி, 2.நீர்மின்சக்தி, 3. அணுமின்சக்தி)
15. யுரேனியம் மற்றும் தோரியம் கனிமத்திலிருந்து ------ உற்பத்தி செய்யப்படுகிறது.
- அணுமின்சக்தி
பொது அறிவு - மண், தாது மற்றும் இயற்கை வளங்கள்
1.______தாவரங்களின் வளர்ச்சிக்கு ஓர் ஊடகமாகவும், புவியிலுள்ள பல்வேறு வகையான உயிரினங்களுக்கு ஆதாரமாகவும் அமைகிறது - மண்
2._____மண் மேற்குத்தொடர்ச்சி, கிழக்குத்தொடர்ச்சி மலைப்பகுதியிலும்
இமயமலையின் அடிவாரத்திலும் அதிகமாக காணப்படுகிறது - சரளை மண்
3. மண்ணின் உயிரி பொருட்களின் அளவு அதிகரிக்க --------- அதிகரிக்கிறது. -
மண்ணின் செழுமையும்
4. ----- மண் இந்திய வேளாண் பொருள் உற்பத்திக்கு பெரும் பங்களிக்கிறது. -
வண்டல் மண்
5. வண்டல் மண்ணின் இரண்டு வகையான பிரிவுகள் - காதர் மற்றும் பாங்கர்
6. வண்டல் மண்______பயிரிடுவதற்கு ஏற்ற மண்ணாகும். - நெல், கோதுமை,
கரும்பு, பருத்தி மற்றும் எண்ணெய் வித்துகள்
7. கங்கை - பிரம்மபுத்திரா தாழ்ந்த ஆற்றுச் சமவெளி ------ பயிரிட பயன்படுகிறது.
- சணல்
8. கரிசல் மண் ______ சிதைவுறுவதால் உருவாகிறது. - தீப்பாறைகள்
9. கரிசல் மண்______முதலிய பயிர் விளைய மிகவும் ஏற்றது. - பருத்தி, நெல்,கோதுமை, சோளம், திணைவகைகள் மற்றும் கரும்பு
10. இரும்புச் சத்து அதிக அளவில் காணப்படுவதால் சிவப்பு நிறமாக
உள்ளது. - செம்மண்
11. தமிழ்நாட்டில் பெரும்பகுதிகள் கர்நாடகாவின் தென்பகுதி கோவா, வடகிழக்கு ஆந்திரா, மத்தியப் பிரதேசம் மற்றும் ஒரிசா ஆகிய பகுதிகளில் ____பரவி
காணப்படுகிறது - செம்மண்
12. மண்வளத்தைத் தக்கவைத்துக் கொள்ளுவதற்காக மனிதர்கள் எடுக்கும் முயற்சியே ------- ஆகும் - மண்வளப்பாதுகாப்பு
13.______மண்ணில் தேயிலை, காபி மற்றும் இரப்பர் பயிரிடப்படுகிறது. - மலைமண்
14. தேயிலை பயிரிடுவதில்_____ முதன்மை வகிக்கின்றன -
அஸ்ஸாமும், மேற்குவங்கமும்
15.வட தீபகற்ப பீடபூமியில் பெருமளவு காணப்படுகிறது. - சரளை மண்