-->

Type something and hit enter

author photo
By On

psychology (உளவியல்)

psychology quiz in tamil 

  • உடல் முதிர்ச்சி (நடக்கக் கற்றல்) . பண்பாட்டின் செல்வாக்கு(படிக்க, எழுதக் கற்றல்) 
  • தனிப்பட்டோரின் மதிப்புகளும் விருப்பங்களும் (தொழிலைத் தேர்ந்தெடுத்தல்). குழவிப்பருவம்(Infancy)பிறப்பு முதல் (5 ஆண்டுகள் வரை): பிறந்தகுழந்தையின் எடை 6 பவுண்டு இருக்க வேண்டும் .
  • பால் பற்கள் 2 வயதில் தோன்றுகின்றன. 
  • குழந்தையின் தலை உடம்பில் 4ல் ஒரு பகுதியாக இருத்ததல்வேண்டும். குழந்தையின் தசைவளர்ச்சி 3வயதில் தோன்றகிறது. 
  • 5 வயதில் குழந்தையின் எடை 5 மடங்காக உயரவேண்டும். பிறரைச்சார்ந்தும், தன்னலமாகவும், பிடிவாதமாகவும் இருக்கும் பருவம் இதுவாகும்.
  • அன்பு, பாசம் போன்றவற்றை அதிகமாக எதிர்பார்க்கும் பருவம்.  விரல் சூப்புதலுக்கு முக்கியக் காரணம் அன்பு, பாசம் இல்லாமை.
  • இது கேள்வி கேட்கும் பருவம் என்றும் அழைக்கப்படும். குழந்தைப்பருவம்(childhood) பொதுவாக 6 வயது முதல் 12 வயது வரை உள்ள பருவம் சிறு குழந்தைப் பருவம் என அழைக்கப்படும் .
  • உடலின் அனைத்து பாகங்களிலும் நிலையான வளர்ச்சி ஏற்படும்.  இப்பருவத்தில் குழந்தையானது தானாகவே சிந்திக்க விரும்பும் .
  • இது கூட்டாளிப்பருவம் என்னும் அழைக்கபடும். 
  • இப்பருவமானது போட்டிக்குரிய பருவமாகும் என்று கில்பாட்ரிக் என்பவர் குறிப்பிடுகிறார். குமரப்பருவம் (Adolescence) 
  • 13-20 ஆண்டுகள் வரை உள்ளபருவமாகும் .
  • இது வளர்ச்சி காணும் பருவம் எனப்படும்.
  •  இப்பருவத்தில் உடல் உறுப்புகள் வளர்தல் - சுரப்பிகள் சுரத்தல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாதல் போன்றவை ஏற்படும்.
  • பாலுணர்வு முதிர்ச்சிக்கும், சட்டப்படியான முதிர்ச்சிக்கும் இடைப்பட்ட காலமே குமரப்பருவம் ஆகும் என்று குறிப்பிடுகிறார் ஹர்லாக் (Hurlock).
  • குமரப்பருவம் என்பது மனக்குமுறலும் கொந்தளிப்பும் நிறைந்த பருவமாகும் அல்லது புயலும் அலையும் நிறைந்த பருவமாகும் அல்லது சிக்கலான அமைதியற்ற பருவம் ஆகும் ஸ்டான்லிஹால்.
  • குமரப் பருவம் என்பது உணர்ச்சிகள் மிகுந்த உற்சாகமான காலமாகும்.
  • இரண்டாம் நிலை பால் பண்புகள் இப்பருவத்தில் ஏற்படும்.
  • இப் பருவத்தினரின் நல்ல உடல் வளர்ச்சிக்கு ஏற்ற பயிற்சி நடனமாகும் என்று குறிப்பிடுகிறார் ஸ்டான்லி ஹால்.
  • இப்பருவத்தினருக்கு வழிகாட்டலும் அறிவுரை பகர்தல் வழங்க வேண்டியது அவசியம் என்று ஸ்டான்லிஹால் வலியுறுத்துகிறார்.

Click to comment