-->

Type something and hit enter

author photo
By On

psychology (உளவியல்)

psychology quiz in tamil 

  • தந்தையின் இசைஞானம் குழந்தைக்கு வருவதும், தாயின் கலைத்திறன் பிள்ளைக்கு வருவதும் மரபுக் கூறுகளின் செல்வாக்கே ஆகும். 
  • ஓர் ஆய்வில் ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்த 14 குழந்தைகளை நல்ல சூழலுள்ள வீட்டில் வைத்து வளர்த்த போது அக்குழந்தைகளின் அறிவாண்மை வளர்ச்சி கூடியதாக லிப்டன் (Lipton) என்பவர் கூறுகிறார். 
  • பெற்றோரிடமிருந்து உடல்வழியாக பெறப்பட்ட பண்புகள் மரபின் மூலம் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படும் உடலுறுப்புகளின் பயன்பாட்டு விதி (Law of use and disuse ) கூறியவர் லமார்க்.
  • பெற்றோரிடமிருந்து பெறப்பட்ட உடல்சார்ந்த பண்புகள் மரபின் மூலமாக தலைமுறைக்கு கடத்தப்படாது அகஸ்ட் வெய்ஸ்மென் (August Weismann).

அறிவு வளர்ச்சியில் சூழல் மரபு பிரச்சனைகள்: 

குழந்தைகள் அறிவாண்மை வளர்ச்சிக்கு சூழல்,மரபு இவ்விரண்டுமே பங்களிக்கிறது என்று பல ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.

1.ஒரு கரு இரட்டையரை ஒரே குழலில் வளர்த்தல் (Tdentical twins reared together) 

ஒரு கரு இரட்டையர் என்பவர்கள் ஒரே பாலணுவும் (sperm) ஒரே முட்டையும் இணைந்து பிறந்த இருவர்
  • இவர்களுக்கு மரபுக்கூறுகள் ஒரே மாதிரியானவை. 
  • இவர்கள் ஒரே சூழலில் வளர்க்கப்பட்டனர்.
  • ஒரு ஒரே சூழலில் வளர்க்கப்பட்ட இரட்டையர்களின் அறிவாண்மை ஈவுகளின் உறவு (correlation measire) r = .87 எனக் காணப்பட்டது. 

2 . ஒரு இரட்டையரை வெவ்வேறு சூழலில் வளர்த்தல் (identical twins reared apart)

இங்கு இரட்டையர்களுக்கு மரபு மட்டும் ஒரே மாதிரியாவிவை, சூழல் வெவ்வேறானவை .
  • இரட்டையர்களின் அறிவாண்மை ஈவுகளின் உறவு r * இத்தகைய சூழலில் வளர்க்கப்பட்ட இரட்டையர்களின் அறிவாண்மை ஈவுகளின் உறவு r =•75 எனக் கணக்கிடப்பட்டது. 

3.உறவில்லாக் குழந்தைகளை ஒரே சூழலில் வளர்த்தல்: (Unrelated children reared together) 

  • எந்த விதத்திலும் உறவு சம்பத்தப்படாத ,சம வயதுள்ள இரு குழந்தைகள் ஒரே சூழயில் வளர்க்கப்பட்டனர். 
  • இங்கு சூழல் ஒன்று ஆனால் மரபுகள் வெவ்வேறானவை 
  • இவர்களின் அறிவாண்மை ஈவுகளின் உறவு r=.25 என்று கணக்கிடப்பட்டது. 

  • 4.உறவில்லாக் குழந்தைகளை வெவ்வேறு சூழலில் வளர்த்தல்: (Unrelated children reared apart) 

இங்கு உறவு சம்பந்தப்படாத சம வயதுள்ள இரண்டு குழந்தைகள் வெவ்வேறு சூழலில் வளர்க்கப்பட்டனர். 
இங்கு மரபும் சூழலும் வெவ்வேறானவை. 
இவர்களின் அறிவாண்மை ஈவு r = 0 எனக் கணக்கிடப்பட்டது .
மேற்கண்ட இத்தகைய ஆய்வுகளிலிந்து குழந்தையின் அறிவு வளர்ச்சிக்கு சூழலும்பங்களிக்கிறது. மேலும் மரபும் காரணமாக அமைகிறது. 

மரபு நிலையின் விதிகள்: (Laws of Heredity) 

 ஆஸ்திரிய நாட்டுத்தாவரவியல் அறிஞர் கிரிகோர் ஜோகன் மெண்டல் (Gregor Johann Mendel) என்பவர் கீழ்காணும் மூன்று மரபு நிலை விதிகளைக் கொடுத்துள்ளார். ஒத்த இயல்பு ஒத்த இயல்பினையே உருவாக்கும் என்பது இவரின் கூற்றாகும். 

1.ஒத்திருக்கும் விதி(Law of variation)  

  • பிறக்கும் குழந்தை பெற்றோர்களை ஒத்திருக்கும்.
  • ஓர் இனத்தின் வழித் தோன்றல்கள் அதே இனத்தை சார்ந்தவையாக இருக்கும்.
  • இதற்கு ஒத்திருக்கும் விதி என்று பெயர்.

2.வேற்றுமை விதி(law of Variation) 

  • ஒரு தாயின் குழந்தைகளில் ஒருவன் நல்லவனாகவும் மற்றொருவன் தீயவனாகவும் இருக்கலாம்.
  • உடலமைப்பால் வேறுபட்டு இருக்கலாம்.
  • ஒற்றுமைக்கு காரணமாக இருக்கும் மரபு நிலையே வேற்றுமைக்கும் காரணமாக உள்ளது. இதற்கு பேற்றுமை விதி என்று பெயர். 

3.பின்னோக்க விதி(law of Regression) 

  • உயரமான பெற்றேர்களின் குழந்தைகள் உயரம் குறைந்தும் காணப்படுவர். 
  • இரண்டு மூன்று தலைமுறைகளில் அப்பரம்பரையைச் சேர்ந்தவர்கள் சராசரி உயரத்தை அடைவர்.
  • ஒரு தலைமுறையில் உள்ள பண்பு அடுத்த தலைமுறையில் குறைந்தோ, மிகுந்தோ காணப்படும். இதற்கு பின்னோக்க விதி என்று பெயர் .
  • மரபு நிலைப் பகுப்பு விதி (law of Biometry theory) 
  • கால்டன்(Galtion) எனும் அறிஞரின் மரபுநிலைப் பகுப்பு விதி கூற்றுப்படி மரபுக்கூறுகள் ஒரு குழந்தையின் பெற்றோர் அக்குழந்தையின் தாத்தா பாட்டி அக்குழந்தையின் கொள்ளுத்தாத்தா, கொள்ளுப்பாட்டி ஆகியோரது மரபு வழி கூறுகளைப் பொறுத்து அமையும். அதாவது பெற்றோர்களைத் தவிர இருவழி மூதாதையர்களிடம் இருந்தும் குழந்தை மரபுக்கூறுகளைப் பெறுகின்றது.
  • ஒரு குழந்தையின் மரபுத்தன்மை பெற்றோரிடமிருந்து அரைப்(1/2 பங்கும், தாத்தா பாட்டியிடமிருந்து கால் (1/4) பங்கும், முப்பாட்டன், முப்பாட்டியிடமிருந்து முந்தைய தலைமுறை முன்னோர்களிடம் இருந்து அரைக்கால் (1/8) பங்கும் பெறுகின்றது எனக் கூறப்படுகிறது. இதற்கு மரபுதிலைப்பகுப்பு விதி என்று பெயர் .
  • ஒரு கரு இரட்டையர்கள் (Identical twins) (or) (Co-twins) 
  • ஒரு கரு முட்டை தோன்றி இரட்டை குழந்தைகள் பிறக்கும் .இவைகள் இரண்டும் ஒரே இளந்தைச் சார்ந்தவர்களாக அதாவது இருவரும் ஆனாகவே!! அல்லது இருவரும் பெண்ணாகவோ இருப்பர்.
  • இவர்களது மரபுநிலை முற்றிலும் ஒரே மாதிரியாக இருக்கும். 
  • இரு கரு இரட்டையர்கள் (Fraternal twins) (or) (Non-identical twins) இது தனித்தனி கரு முட்டைகள் தோன்றி இரட்டைக் குழந்தைகள் பிறக்கும்.
  • இவைகள் இரண்டும் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ அல்லது ஒரு ஆண் மற்றொன்று பெண்ணாகவும் இருக்கலாம்.
  • இவர்களின் மரபுநிலை முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்.
  • மரபு நிலையில் ஒரு கரு இரட்டையர் போல் ஒத்த இயல்பினர் ஆக இருக்க மாட்டார்கள் ஆனால் பெற்றோரின் பிற குழந்தைகளை விட மரபுநிலை ஒற்றுமை அதிகம்.

Click to comment