-->

Type something and hit enter

author photo
By On

psychology (உளவியல்)

psychology quiz in tamil 

மனநோய் பிரிவுகள்:

மனநோய்களை, 
  1. தொடக்கநிலை மனநோய்கள்/நரம்புத் தளர்ச்சி நோய்கள்,
  2. தீவிர உளத்தடுமாற்ற நோய்கள் 
  3. உள உடல் நோய்கள் 
  4. ஆளுமைக் கோளாறு நோய்கள் எனும் நான்கு பெரும் பிரிவுகளாக வகைப்பாடு செய்வதும் வழக்கத்தில் உள்ளது.

  • அன்சைடி நியூரோசிஸ்(Anxiety Neurosis)
  • பீதி நோய்கள்
  • அப்சசிவ் கம்பல்சிவ் நியூரோசிஸ்(Obsessive Compulsive Neurosis) 
  • கற்பனைப் பிணிகளில் ஈடுபாடு காட்டுதல்
  • வலிப்பு நோய் போன்றவை தொடக்கநிலை மன நோய்கள் என்பதில் இடம் பெறுகின்றன.

உணர்ச்சி விண்டநிலை (ஸ்கீசோ பெரினியா(Schizophronia), மேனிக் டிப்ரசிவ் சைக்கோஸிஸ்(Manic Depressive Psychosis), பெர்னோயா போன்றவை தீவிர உளத்தடுமாற்ற நோய்களாகும்.

மது மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிப்படையாதல், பாலுணர்வு முரண்பாடு அல்லது மாறுபட்ட பாலுணர்வு கொண்டிருத்தல். குற்றம் புரிவதை வழக்கமாகக் கொண்டிருத்தல் ஆகியவை ஆளுமைக் கோளாறு நோய்களாகும்.

மனநோய் ஏற்படுவதற்கான காரணங்கள் 


மனநோய் ஏற்படுவதற்கு இருவகைக் காரணங்கள் உள்ளன. முற்சார்பு காரணங்கள்(Prodisposing Factors) திடீரெனத் தோன்றி தூண்டுதலாக அமையும் காரணங்கள்(Precipitative causes) அதாவது சீர்கேட்டினை வெடிக்கச் செய்யும் உடனடிக் காரணிகள்.

முற்சார்பு காரணிகள்:


தனிப்பட்ட வளர்ச்சி (மத்திய நரம்பு மண்டலம் போதிய வளர்ச்சி பெறாமை, மனமுதிர்ச்சியின்மை, தேவையான திறன்களில் தேர்ச்சி பெறாமை, தவறான கற்றலால் ஏற்படும் நிலை ஆகியவற்றை அடங்கியது.

வருத்திரிந்த வளர்ச்சி(Disterted Development) பொருத்தமில்லாத உடலமைப்பை பெற்று தவறான விழுமங்களைக் கற்றல்.

எளிதில் வடுப்படும் நிலை மனக்கோளாறுகளைத் தடுக்கும் சக்தி குறைவாயிருத்தல் ஆளுமைச் சமநிலையை குலைக்கும் மனப் போராட்டங்களை உருவாக்கிவிடும் தன்மை அதிகரித்துக் காணப்படுதல் ஆகியவற்றை உள்ளடக்கியதே எளிதில் வடுப்படும் நிலை.

உடனடிக் காரணிகள்:


உடல் சார்ந்த அழுத்தங்கள் விபத்து, நோய், நீடித்த உணர்ச்சி சார் மன திரட்டல். மூளை இயக்க பாதிப்புகள் போன்றவற்றால் ஏற்படுபவை.

உளம் சார்ந்த மன அழுத்தங்கள்:


தோல்வியால் ஏற்படும் கடும் ஏமாற்றங்கள். இழப்புகள். தனிமனிதக் குறைபாடுகள். குற்ற உணர்வு அர்த்தமுள்ள உறவுகளில்லாமை, போட்டி, படிப்பு, வேலை மற்றும் திருமணம் சம்பந்தப்பட்ட எதிர்பார்ப்புகளால் ஏற்படும் மனவழுத்தங்கள் போன்றவை இவ்வகையில் அடங்கும்.

சமூக கலாச்சாரம் சார்ந்த மன அழுத்தங்கள்:


இவை போர், சமூக வன்முறைகள், பொருளாதார நெருக்கடி, வேலையிழப்பு குடும்பப் பிரச்சனைகள், சமூக புறக்கணிப்பு போன்றவற்றால் ஏற்படுகின்றன.

Click to comment