-->

Type something and hit enter

author photo
By On

psychology (உளவியல்)

psychology quiz in tamil 

காலிகாக் குடும்ப ஆய்வு (Kallikak family) .

  • H.H.காட்டார்டு (H.H Goddard) என்பவர் இந்த ஆய்வை மேற்கொண்டார். 
  • காலிகாக் எனும் இராணுவவீரரைக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது.
  • அவரது மனவளர்ச்சி குன்றிய மனைவி வழி வந்தவர்களில் 480 பேர்களில் 48 பேர்(10%) சராசரி அறிவுடையவர்களாக இருந்தனர். 
  • 432 பேர் மற்றவர்கள் குற்றவாளிகளாகவும், மனவளர்ச்சி குன்றியவர்களாகவும் இருந்தன. சராசரி மனைவியின் வழித்தோன்றல்களில் அதிகமானோர்(49%) சராசரி அறிவுடையோராக இருந்தனர்.
  • இதன் மூலம் இவர் மரபுநிலை மனிதனை உருணக்குகிறது என்றார்.

ஜீக் குடும்ப ஆய்வு(Juke family) 

  •  இவ்வாய்வை டக்கேல் என்பவர் மேற்கொண்டார். கார்ல்பியர்சன் (Carl pearson) என்பவரும் இதே போன்றதொரு ஆய்வை மேற்கொண்டுள்ளார்.
  • அறிவுத் திறன் போலவே குற்றம் புரியும் இயல்பு பரம்பரைப் பண்பாகும் என்பது கால்பியர்சளின் கூற்றாகும். ஜீக் எனும் மீன்வியாபாரி கீழத்தர நடத்தைகள் கொண்ட பெண்ணைத் திருமணம் செய்தார். 
  • அவரது வழித்தோன்றலில் வந்த ஐந்து தலைமுறையினர் (சுமார் 1260 போர்) ஏழ்மையாகவும், தண்டனை அடைந்தவர்களாகவும் இருந்தனர். 

கால்டன்-டார்வின்-வெட்ஜ்வுட் குடும்ப ஆராய்ச்சி:

  • இவ்வாய்வை மேற்கொண்டவர்-கார்ல் பியாசன் (Karl Pearsoon) .
  • தன் ஆசிரியராகிய கால்டனின் குடும்பத்தை ஆய்வு செய்தார். 
  • கால்டனின் குடும்ப உறவினர்களாக சார்லஸ் டார்வின் (Charles Darwin), வெட்ஜ்வுட்(Wedgewood) போன்ற அறிஞர்கள் இருப்பதைக் கண்டறிந்தார். 

கால்டன் பிரான்சிஸ் ஆய்வு(Galton Francis) 

  • 800 ஆங்கிலக் குடும்பங்களில் 977 மதைகளின் உறவினர்களை ஆராய்ந்தார். அதில் 537 பேர் புகழ்மிக்கவர்களாக இருந்தனர். 
  • சராசரியாக உள்ள 977 நபர்களில் 4 பேர் மட்டுமே புகழ்மிக்கவர்கள் மேதைகளிடமிருந்து மேதைகள் மரபுவழியாக தோன்றுகிறார்கள் என்பதே இவரது ஆய்வின் முடிவு மனிதன் ஒருவன் பெற்றுள்ள அறிவுத்திறனின் அளவு அவனது மரபு நிலையினால் முழுவதும் கட்டுப்படுத்தப்படுவது ஆகும் என்பதை பிரான்சிஸ் கால்டன் கார்ல் பியர்சன் ஆகியோர் நடத்திய சோதனைகள் விளக்கியுள்ளனர். 
  • கால்டன் பியர்சன் ஆகியோரின் ஆராய்ச்சிகளுக்கு எதிராக டீகான் டோல் வாட்சன் ஆகியோர் ஆராய்ச்சிகள் நடத்தியுள்ளனர்.

சூழ்நிலை தொடர்பான ஆய்வுகள்(Experiments on Environment) 

  • ராமுவின் வாழ்க்கை பற்றிய ஆய்வு(Case History of Ramu) நீண்டகாலம் ஓநாயுடன் இருந்ததால் ஓநாய் போன்ற பழக்கங்களை மேற்கொண்டிருந்தான்.

அமலா, கமலா ஆய்வு (Story of Amala & kamala) 

  • அமலா கமலா எனும் சிறுமிகள் 1920ல் வங்காளத்தில் ஒரு ஓநாயின் குகைக்குள் இருக்க வைக்கப்பட்டனர். அமலா விரைவிலேயே மரணமடைந்த பின்பு 9 வயதுடைய கமலாவை மட்டும் சிகிச்சைக்குப்பின்பு பயிற்சியின் காரணமாக அவளது பழக்க வழக்கங்கள் மாறின. 
  • மனித ஆளுமை வளர்ச்சிக்கு சமூக கலாச்சார சூழ்நிலை மிகவும் இன்றியமையாதது என்பதை இவ்வாய்வு எடுத்துரைக்கிறது. 

காண்டல் ஆராய்ச்சி (Candole Study) 

  • ஐரோப்பாவில் 500 அறிவியல் அறிஞர்களை ஆராய்ச்சிசெய்தார் சூழ்நிலையே அறிஞர்கள் உருவாகக் காரணம் என்றார். 

அயோவா (IOWA) பல்கலைக்கழக சோதனை: 

  • ஒரே மரபினைச் சார்ந்த ஒரு கரு இரட்டையரில் ஒரு குழந்தைக்கு மட்டும் நாசரி பள்ளிக்கல்வி அளிக்கப்பட்டது. 
  • பயிற்சி பெற்ற குழந்தை மட்டுமே கல்வி அடைவில் தேர்ச்சி பெற்றது.

சிரில்பர்ட் சோதனை: 

  • இந்தியாவில் டில்லியைச் சேர்ந்த சங்கர் என்பவரும் இவ்வாய்வை மேற்கொண்டுள்ளார். 
  •  இளங்குற்றவாளிகளுக்கும் (Juvenile delinquents) அவர்கள் வளர்ந்த சூழ்நிலைகளுக்கும் உள்ள நேரடித் தொடர்பினை இச்சோதனை விளக்குகிறது. 18 வயதுக்கு முன்பாக ஒரு குழந்தை அல்லது ஓர் இளைஞனால் குற்றச்செயல் ஒன்று இழைக்கப்படும்போது அது இளஞ்சிறார் குற்றம் என அழைக்கப்படுகிறது. 
  • குழந்தைகள் நெறிபிறழ்ச்சியடைவதற்கும் பின்னர் குற்றவாளிகளாக மாறுவதற்கும் அவர்களது சூழ்நிலையே முக்கியக் காரணமாகும் என்பது சிரில்பாட்டின் கூற்று. 

ஒற்றைக் கண் மீன்:

  •  உறைகுளிர் பெட்டியில் வைக்கப்பட்ட மீனின் கருமுட்டை வளர்ந்து நடுப்பாகத்தில் ஒரே ஒரு கண்ணோடு கூடிய மீனாக உருவாகிறது. 
  • ஆர்டிக் துருவ முயல்கள் சோதனை: ஆடிக் துருவ முயல்களை இருட்டறையில் வைத்து வளர்த்த போது அவற்றின் வெண்மை நிற முடிகள் கொண்ட தோல் கருமையாக மாறியது. 

கலிபோர்னிய சீனர்கள்: 

அமெரிக்காவின் கலிபோர்னிய கடற்கரையோரம் பல தலைமுறையாக வாழ்ந்த சீனர்கள் தங்களுக்கிடையே மட்டும் திருமண உறவு கொண்டிருந்தபோதும் அவர்களின் சராசரி உயரம் இயல்பான சீனர்களின் உயரத்தைவிட அதிகமாக காணப்பட்டது. 

நியூமேன்,பிரிமேன், கோலின்ஹர் ஆய்வு Newman, freeman, Holzinger study) 

  • 19 ஜோடி ஒரு கரு இரட்டையரில் ஆய்வினை மேற்கொண்டார். 
  • ஒரே சூழலில் வளர்ந்தவர்களின் IQ விகிதம் - 5:9 
  • வெவ்வேறு சூழலில் வளர்ந்தவர்களின் IQ விகிதம் - 8:2 தனியாள் வேறுபாட்டிற்கு சூழ்நிலையே காரணம் என்றார் படிப்படியாக சுதந்திரத்துடனும், கட்டுப்பாட்டுடனும் செயல்படுதல் வளர்ச்சியின் அறிகுறி கூறியவர் ஆண்டர்ஸன். 

வளர்ச்சி:(Growth)

  • மனிதனின் வளர்ச்சி பற்றிய ஆய்வு 18ஆம் நூற்றாண்டிற்கு முன்பே உள்ளது. 
  • டார்வின்(1809-1882) மற்றும் பிரையர்(1841-1879) ஆகியோரால் குழந்தைகளை நேரடி கண்காணிப்பின் அடிப்படையில் ஆய்வு செய்வதற்கான முதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 
  • ஒரு குழந்தையின் உடல் தோற்றத்தில் அதிகரிப்பே வளர்தல் அல்லது வளர்வு எனப்படும்.
  • இது செல்பிரிதலால் (celldivision) நிகழும் ஒரு வளர்ச்சியாகும். மனிதனின் உயரம். எடை, பருமன் ஆகியவற்றைக் குறிப்பது வளர்ச்சியாகும். 
  • உடலின் அளவு, அமைப்பு, உடல் பரிமாணங்கள் மற்றும் அளவு அதிகரிப்பு. தசை வலிமை மற்றும் உறுப்புகளில் ஏற்படும் உடலியல் மாற்றங்களாக இது விளக்கப்படுகிறது. 
  • வளர்ச்சியின் எல்லை முதிர்ச்சி ஆகும். ܀ 19 முதல் 20 (அ) 21 வருடங்களில் வளர்ச்சி நின்றுவிடும் .
  • வளர்ச்சி மரபினால் தீர்மானிக்கப்படும். 
  • தனியாள் வேறுபாடுகள் காணப்படும். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் (ICDS) கீழ் இயங்கும் அங்கன்வாடி மையத்தில் ஒரு முக்கிய செயல்பாடாக குழந்தை பிறந்தது முதல் 5 வயது வரை குழந்தையின் வளர்ச்சி கண்காணிக்கப்படுகிறது. மனித வளர்ச்சியின் நிலைகள்: 
1. சிசுப்பருவம் - கருத்தரிப்பு முதல் பிறக்கும் வரை. 
2. குழவிப்பருவம் - பிறப்பு முதல் இரண்டாவது வாரம் இறுதி வரை .
3. குழந்தைப்பரும் - இரண்டாவது வார முடிவிலிருந்து - இரண்டு வயது வரை 4. முன் குழந்தைப் பருவம் - 2 முதல் 6 வயது வரை.
5. பின் குழந்தைப் பருவம்- 6 முதல் 12 வயது வரை. 
6. வளரிளம் பருவம்- 12 முதல் 18 வயது வரை. 
7. முன்முதிர் வயது பருவம்- 18 முதல் 40 வயது வரை.
8. நடுமுதிர் வயது பருவம் - 40 முதல் 60 வயது வரை. (நடுவயது) 9.பின்முதிர் வயது பருவம்) - 60 வயதுக்கு மேல். (முதுமைப் பருவம்) ரூசோ மனித மேம்பாட்டினை (Development) 4 படி நிலைகளாகப் பிரித்துள்ளார். 

பியாஜேவின் கூற்றுப்படி வளர்ச்சியின் நான்கு அடிப்படைக் கூறுகள். (Piaget's Four basic elements in development) 

1. முதிர்ச்சி (Maturation)
2. அனுபவம் (Experience) 
3. சமூக மாற்றம் (Social transmission 
4. சமநிலை (Equilibration )
  • வளர்ச்சி என்பது அளவின் அம்சத்தின்படி (quantitative aspect) ஏற்படும் மாற்றங்களால் வரையறுக்கப்படுகின்றது. 
  • உடல் வளர்ச்சியின் பொதுவான போக்குகள் 
  • தாயின் கருவறையிலிருந்து கருபிறப்பது வரையிலான வளர்ச்சி. குழந்தை பிறந்த முதலிரண்டு ஆண்டுகளில் ஏற்படும் வேகமான வளர்ச்சி.
  • மூன்றாவது ஆண்டு முதல் 12 வயது வரை சீரான வளர்ச்சி 13 முதல் 18 வரை நிகழும் குமரப்பருவத்தில திடீர் வளர்ச்சி.
  • முதுமைப் பருவத்தில் ஏற்படும் வளர்ச்சியின் சரிவு அல்லது வளர்ச்சி குன்றுதல்.

Click to comment